Friday, 30 September 2011

ஒரு குவளை தண்ணீர்



ஒரு ஏஜென்சி ஒன்றின் மூலம் நான் லண்டனில் அரசாங்க தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளராக வேலை செய்தேன். என்னை கிரிமினல் பிரிவில் வேலையில் அமர்த்தியிருந்தார்கள். நீதிமன்ற வழக்குகள், காவல் நிலையத்தில் பிடிபட்டதும் நடக்கும் விசாரணை, Probation Officeல் நடக்கும் நேர்காணல் என்பவற்றில் பங்கெடுப்பேன்.

Wednesday, 28 September 2011

மாயக்கண்ணாடி - 28/09/2011




அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Saturday, 24 September 2011

மாயக்கண்ணாடி - 24/09/2011



அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Friday, 23 September 2011

லண்டனில் ராதிகா சரத்குமார்


இந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் உள்ள Wembley Arenaவில் Raadaan Media Works நடாத்தும் நட்சத்திர கலை விழா நடைபெறவுள்ளது. இதில்  ராதிகா, சரத்குமார், சிம்பு, சினேகா, ஆர்யா, பரத், ராகவா போன்ற நட்சத்திரங்களும் ஹரிஹரன், ஆண்ட்ரியா, நரெஷ் ஐயர், விஜய் பிரகாஷ் மற்றும் பல பாடகர், பாடகிகள், நகைச்சுவை நடிகர்கள் கலந்து கொள்கிறார்கள். பல ஆயிரம் பவுண்ட்சுகள் செல்வழித்து தான் இந்த விழா நடக்கும், போட்ட முதலை எப்படியும் திருப்பி எடுத்து விட வேண்டும், அதை விட அதிக டிக்கட்டுகள் விற்பணையாகி இலாபம் ஈட்ட வேண்டும் என்று ராதிகா அம்மையார் நினைப்பதெல்லாம் சரிதான்.

Wednesday, 21 September 2011

மாயக்கண்ணாடி - 21/09/2011


அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Tuesday, 20 September 2011

ஆடை இல்லாமல் ஆயிரம் பேர்


 

Spencer Tunick என்ற புகைப்படக்காரருக்கு வேலை, உலகின் முக்கிய கட்டடங்கள், இயற்கை பிரதேசங்கள் போன்ற இடங்களில் ஆண் பெண் பேதமில்லாமல் நிர்வாணமாக உலாவவிட்டு படம் பிடிப்பது.

Saturday, 17 September 2011

மாயக்கண்ணாடி - 17/09/11


அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Thursday, 15 September 2011

உயரம்னா பயமா?


சிலருக்கு 3-4 மாடி கட்டடத்தின் மேல் இருந்து பார்க்கவே தலை எல்லாம் கிருகிக் கொண்டு வருவது போல் இருக்கும். இப்படி உயரமான இடங்களைக் கண்டால் பயப்படுவதை அக்ரோஃபோபியா (Acrophobia) என்று சொல்வார்கள். ஆனால் அப்படியென்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

Wednesday, 14 September 2011

மாயக்கண்ணாடி - 14/09/11


அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Sunday, 11 September 2011

சிந்தித்து பேசினால்...





தமிழ்நாட்டில் ஒரு கோயில் வாசலில் எழுதியிருந்த வசனம் என்னை மிகவும் கவர்ந்தது.... இதோ உங்களுக்காக...

Saturday, 10 September 2011

பைஜாமா போட்ட பையன்



ஐந்து நாட்களுக்கு முன் இந்தப் படத்தைப் பார்த்து விட்டு அடக்க முடியாமல் அழுதேன். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நடக்கும் கதை. கனவிலும் நினைவிலும் திடீர் திடீரென்று ஞாபகம் வந்து மனநிலையை பாதித்துக் கொண்டே இருக்கிறது. அது தான் உங்களுடனும் இதை பகிர்வோம் என்று முடிவெடுத்தேன்.

Thursday, 8 September 2011

வீட்டில் அம்மா செய்வது போல...



நான் லண்டன் வந்த புதிதில் சமையல் செய்வதற்கென்று அம்மா பார்சலில் மிளகாய் தூள், சரக்குத்தூள், கோப்பித்தூள் இன்னும் எத்தனையோ விதமான தூள்களெல்லாம் வீட்டிலேயே செய்து அனுப்பி வைப்பார். நாளாக நாளாக அம்மாவிற்கு ஏன் சிரமம், இங்கே கடைகளில் கிடைக்கிறதை வாங்குவோம் என்று வெளிக்கிட்டேன். பல வகையான நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் இருந்தன. ஆண்டுகள் ஓட ஓட ஒவ்வொன்றாக பாவித்து மனம் கடைசியில் என்.எஸ்.ஆர் தயாரிப்புகளையே விரும்பியது. அவர்களின் அனைத்துப் பொருட்களுமே சென்னையில் தான் தயாரிக்கப்படுகிறது என்பதை உரிமையாளர் பிருந்தாபன் அண்ணா மூலம் தெரிய வந்த போது வியப்படைந்தேன். பிறகென்ன சென்னைப் பயணத்தில் பார்க்க வெண்டிய லிஸ்டில் என்.எஸ்.ஆர் தொழிற்சாலையையும் சேர்த்தாச்சு.

Wednesday, 7 September 2011

மாயக்கண்ணாடி - 07/09/11

File:George Osborne 0437.jpgபொருளாதாரம் நலிந்தே உள்ளது...

இங்கிலாந்தின் நிதி அமைச்சர் George Osborne ல்ண்டனில் நடந்த ஒரு பிரபல நிதி நிறுவனத்தின் விருந்துபசாரத்தில் பேசுகையில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ”அண்மையில் வெளி வந்த எல்லா புள்ளி விபரங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையான காலத்தில் இந்த நாட்டின் பொருளாதாரம் 0.2% வளர்ச்சியையே அடைந்துள்ளது.” என்று தன் உரையில் தெரிவித்த ஒஸ்போர்ன் 29 நவம்பர் அன்று தன்னுடைய உத்தியோக பூர்வமான கணக்கு அரிக்கையை வெளியிடப் போவதாகவும் அரிவித்துள்ளார்.

முன்னால் அமைச்சரின் மேல் 21 பொய் கணக்கு குற்றங்கள்...



Luton Southற்கான முன் நாள் MP Margaret Moranன் மேல் அவர் பதவிக்காலத்தில் இருந்த போது £60,000ஐ செலவீனங்கள் என்று பொய்யாக கணக்கு காட்டியதற்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் நம்மூர் அரசியல்வாதிகளைப் போலவே இவரும் உடல் நிலை சரியில்லை என்று காரணம் காட்டி நீதிமன்றம் வராது தள்ளிக்கழித்தார். ஆனால் போதிய சாட்சியங்கள் கிடைத்து விட்டதாகவும் இனிமேலும் மக்கள் பணத்தை வீணடித்தவர்களுக்கு தண்டணை கொடுக்க காலம் தாழ்த்த கூடாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Facebookன் மேல் வழக்கு
தன் 12 வயது மகள், வயதிற்கு பொருத்தமில்லாத வகையில் உடை அணிந்து, Sexyயாக எடுத்த படங்களை, அவளுடைய Facebook பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறாள். இதை தடுப்பதற்கு எந்த விதத்திலும் வழிமுறைகள் செய்யாத facebook தான் முழுப் பொறுப்பு எடுக்க வேண்டும் என்று ஒரு ஐரிஷ் தந்தை வழக்கு பதிந்துள்ளார். Facebookல் கணக்கு வைப்பதற்கு 13 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட போதும் அதை சரி பார்க்க எந்த முயற்சிகளும் எடுக்கப் படுவதில்லை. கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை இலக்கம் போன்றதைப் பாவித்து வயதை தெரிவிப்போருக்குத் தான் கணக்கு திறக்கப் பட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாத்ததனால் என் மகள் நாங்கள் தடை விதித்திருந்த போதும் வேறு கணக்கை திறந்து தன் வேலைகளை செய்திருக்கிறாள். இதற்கான முழுப் பொறுப்பையும் Facebook தான் ஏற்க வெண்டும் என்பதே வழக்கு.
ஒரு தாயாக அவர் கருத்தை நானும் முழுதாக ஏற்றுக் கொள்கிறேன். வழக்கு எந்த திசையில் போகிறதென்று அவ்வப்போது தெரிவிக்கிறேன்.



Sunday, 4 September 2011

தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம்...


தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் என பலர் பல விடயங்களை சொன்னாலும் நான் மங்காத்தாவைத் தான் சொல்வேன். தன் பேத்தி வயதுடைய நாயகிகளுடன் ஆட்டம் போட்ட படி எண்ணிலடங்கா ஆட்களை அடித்து இறுதியில் ஒரு பெரிய வசனம் பேசி வணக்கம் சொல்லும் ஹீரோக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இந்த 4 நாட்களுக்குள் எத்தனை விமர்சனங்கள். ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்ட படம் என்பதை எல்லோரும் பெரிதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வெங்கட் பிரபு சொல்லி விட்டுத் தான் செய்கிறார். தமிழ் சினிமாவில் ஆதி முதல் இதையே தான் செய்து வந்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் உலக சினிமா பார்க்கும் எம் மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால் யாரும் உணரவில்லை. ஆங்கிலப் படங்களை எடுத்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படி கொடுத்த வெங்கட் பிர்புவிற்கு வாழ்த்துக்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget