நான் ஹை-லைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளராக இருப்பதால் Landmark குழுமத்தைச் சேர்ந்த Christine Hyatt என்ற பெண்மணியோடு அடிக்கடி தொலைப்பேசியில் உரையாட வேண்டி வந்தது. நாங்கள் அந்தக் குழுமத்தின் அங்கத்தவர்கள். Christine உடனான என் வேலை முடிந்ததும், இவ்வளவு பொறுமையாக பரிவோடு தன் பணியைச் செய்த அந்தப் பெண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தது. அதிகம் இல்லை, என்னிடம் ஏற்கனவே இருந்த ஒரு Thank you வாழ்த்து அட்டையை அவளுக்கு அனுப்பி வைத்தேன்.
Sunday, 13 November 2011
Friday, 11 November 2011
Tuesday, 8 November 2011
Sunday, 6 November 2011
குழந்தைக்குள் ஏன் இந்தக் குரூரம்..?
எந்தக் குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே...
அவர் நல்லவராவதும்,
தீயவராவதும்
அன்னை வளர்ப்பினிலே...!!
எனக்கு மிகவும் பிடித்த பாடல். புதிய பெற்றோர்களுக்கு வாழ்த்துச் சொல்லும் போது நான் உதாரணமாக மேட்கோள் காட்டும் வரிகள். இவ்வளவு காலமும் ஒருவருடைய குணத்தை நிர்ணயிப்பது மரபணுக்களாக இருந்த போதும் அதை சூழ்நிலை காரணிகளால் கட்டுப்படுத்தலாம் என்றே விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். அதாவது வளரும் காலத்தில் என்ன விதமான போதணைகள் பழக்க வழக்கங்கள் காலநிலைக் காரணிகள் என்பவற்றால் ஒரு குழந்தை பாதிக்கப் படுகிறதோ அதன் படியே அதன் உடல் மன வளர்ச்சிகள் இருக்கும் என்று கருத்து நிலவியது. ஆனால் இப்போது Cambridge மற்றும் Oxford பலகலைக் கழகங்கள் தனித்தனியாக நடத்திய ஆராய்ச்சியில் இது தவறு என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
Saturday, 5 November 2011
Subscribe to:
Posts (Atom)





