எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.. என்கிறார்கள்.. நான் அடையும் எல்லா புகழும் ஒருவனுக்கே தான்.. அவர் என் அப்பா.. Sothi Vijayarajahக்கு..
சிற்பி கல்லுகே வலிக்காமல் மெதுவாக சிலையை செதுக்குவது போல்.. இந்த 36 வயதிலும் தினம் செதுக்கப்படுகிறேன். தினமும் சராசரியாக ஒரு மணித்தியாலமேனும் தொலைபேசி விடுவேன்.
என் இன்பம், துன்பம், கோபம், வெறுப்பு, இயலாமை, வெற்றி என எல்லாமே பகிர்ந்துகொள்ளும் என் உயிர் நண்பன் அவர். என் எல்லா பேச்சையும் பொறுமையாக கேட்டு தன் எண்ணங்களையும் கருத்துக்களையும் குட்டிக்கதைகளின் உதாரணங்களுடன் எனக்கு உரைப்பார். என் ஒவ்வொரு அடியும் அவர் அமைக்கும் வியூகங்களே..
நான் கோபமாக பேசினால் கூட குரல் மாறாமல் என்னை சாந்தப்படுத்துவார்.. துவளும் நேரங்களில் உச்சாகப்படுத்தி ஊக்குவிப்பார்.. வியாபாரமோ, தனி வாழ்க்கையிலோ குழப்பம் என்றால் எல்லா பக்கங்களையும் அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வை சொல்வார். எனக்கு ஒரு துன்பம் எனில் இரவு பகலாக அவர் தியானம் செய்வார். நான் தவறு செய்துவிட்டேன் என்றால்.. அதை திருத்தி நேர்படுத்துவதையும் விடுவதில்லை. நான் ஏற்காவிட்டாலும் சின்ன சின்ன கதைகள் சொல்லி புரியவைப்பார். ஆனால் அதன் பின் தவறை குத்திக்காட்டமாட்டார்.
எப்போதும்.. அன்பையும், பொறுமையும், புரிந்துணர்வையுமே போதிப்பார்.. தானும் அவ்வழியே வாழ்ந்து என் உதாரணமாக இருக்கிறார். என் அப்பா கட்டி வைத்திருக்கும் பெயரையும் புகழையும் காத்து.. இன்னும் பலர் வாழ்வில் அவர் நிலைத்திருக்க செய்வதே அவர் மகளாக பிறந்த புண்ணியத்திற்கு நான் செய்யும் கைமாறு..