காதல் கணவனைக் காக்க காலனுடன் போராடினாளாம் சாவித்திரி.. அந்த அன்பையே விஞ்சக் கூடிய ஒரு காதல் கதை..
1926ல் நடக்கும் கதை.. உண்மைச் சம்பவம்.
ஐனர், கிரேடா.. கணவன் மனைவி.. திருமணம் முடித்து 5-6 ஆண்டுகள். இருவரும் ஓவியர்கள். ஒருநாள் வர வேண்டிய மாடல் வராததால் தன் கணவனை கட்டாயப்படுத்தி பெண் ஆடைகளை அணிவிக்கிறாள் கிரேடா.. அவனுக்குள் ஒரு பரவசம். அதன் பின் விளையாட்டாக அவனுக்கு லில்லி என்று பெயர் சூட்டி அடிக்கடி பெண் ஆடைகளை அணிவிக்கிறாள். அவனும் சந்தோஷத்துடன் அணிந்து பரவசப்படுகிறான். தான் மனதளவில் ஒரு பெண் என்பதை ஐனர் உணர்கிறான். லில்லி தான் உண்மை.. ஐனர் பொய் என்று மனம் மாறுகிறான். ஆரம்பத்தில் எனக்கு ஐனர் வேண்டும்.. அவனை விட்டுக்கொடுக்க முடியாது.. நீ போய்விடு லில்லி என போராடுகிறாள் கிரேடா.. ஆனால் ஐனராக முடியாமல் தவிக்கும் லில்லியை ஏற்று தன் உண்மைக்காதலை உலகிற்கு சொல்கிறாள் அவள்..
இருபதுகளின் இறுதியில் இருந்த மருத்துவத்துறைக்கு திருநங்கைகள் பற்றிய அறிவு இருக்கவில்லை.. சென்ற எல்லா மருத்துவர்களுமே ஐனர் ஒரு மனநோயாளி என்றே முடிவுக்கு வருகின்றனர். கடைசியாக ஒரு பெண்கள் நலமருத்துவரை பற்றி கேள்விப்பட்டு அங்கு செல்கிறார்கள். கிரேடாவின் முழு சம்மதத்துடன் உலகில் முதன்முறையாக ஆண் உறுப்புக்களை அகற்றிவிட்டு பெண்ணாக உருமாற்றும் ஆப்பிரேஷனுக்கு உட்படுகிறான். இரண்டு கட்டமாக ஆபிரேஷன் நடைபெறும்.. முதலில் ஆண் உறுப்புகள் அகற்றப்படும்.. அதில் குணமடைந்ததும்.. உடல் தேறியபின்.. பெண் உறுப்புக்கள் உருவாக்கப்படும் என கூறுகிறார். பெண்ணாக மாறிக்கொண்டிருக்கும் கணவனை ஒரு குழந்தையைப் போல கவனிக்கிறாள் கிரேடா..
யாரும் எதிர்பாராத மனதை உலுக்கும் இறுதிக்காட்சி.. அரங்கமே அழுதுவிட்டது..
ஒருவர் மேல் வைக்கும் அன்பு எக்காரணம் கொண்டும் மாறாது.. மாறினால் ஆரம்பத்தில் இருந்தே அங்கு அன்பு இல்லை என்பதே அர்த்தம். சிறந்த உதாரணம் இந்தப் படம்..
படமாக்கப்பட்ட நேர்த்தியும்.. காட்சிகளும்.. இசையும்.. நிச்சயம் பல விருதுகளின் கதவுகளை தட்டும்..
லில்லி உருவாவதை ஐனர் ஏற்றுக்கொள்ளும் விதத்தைக் காட்டியது
போலவே கிரேடா ஏற்றுக்கொள்ளும் தன்மையையும் அழகாக விளங்கவைக்கிறார்கள்.. நாசுக்கான வசன
வெளிப்பாடுகள் பேசப்படாத பல கோடி சொற்களை இடையில் புகுத்துது.. அருமை.. அருமை..
லில்லி வரும் இறுதிக்காட்சியில்.. "ஒரு கனவு கண்டேன்.. என்
அம்மாவின் கைகளில் குழந்தையாக இருக்கிறேன், அவர் என்னை லில்லி என அழைத்தார்" என்கிறாள்..
ஒவ்வொரு திருநங்கையின் கனவும் அது தானே.
கிரேடாவும் ஐனரும் வரைந்த ஓவியங்கள் இன்றும் பிரபலம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
nice review
Post a Comment