"அந்தி மழை பொழிகிறது.... ஒவ்வொரு துளியிலும்...
உன் முகம் தெரிகிறது...."
வைரமுத்துவின் காவிய வரிகள். கண் தெரியாத காதலன், தன் காதலியை வர்ணித்துப் பாடும் பாடல்.
நான்கு பேர் கூடும் இடங்களில் தானும் ஓர் இலக்கியவாதி என்று பறை சாற்றும் பலர் வைரமுத்துவின் கவித்திறனை ஆராய முற்படும் போது கையில் எடுக்கும் பாடல் இது. "நாயகன் கண் தெரியாதவன் - ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது - என்று பாடுவதாக எழுதினால் கேட்பவர்கள் எல்லாம் முட்டாள்களா?" என்று அந்த முட்டாள்கள் கேள்வி கேட்கிறார்கள்.ஒரு மழைத் துளி விழும் போது, அந்த உருண்ட, குளிர்ந்த நீர்த்துளி உடலில் விழுந்து சிலிர்ப்பைத் தரும். துளித் துளியாய் விழும் ஓசை காதுகளுக்கு இசையாகும். மண்ணில் தெறித்து எழும் வாசம் ஏகாந்தமாய் நாசியை வருடும். மழையை ரசித்து அதில் நனைபவருக்குத் தெரியும், மழைத் துளியைப் பார்க்க பார்வை தேவையில்லை என்பது.
காதல் மங்கையின் சினுங்களில் லயித்து, தொடுகையில் சிலிர்த்து, அவள் மென்மையில் கரைந்து, வாசணையை நுகர்ந்து ரசிக்கும் எந்த ஒரு ஆணுக்கும் தெரியும் - ஒவ்வொரு (மழைத்) துளியிலும் உன் முகம் தெரிகிறது - என்ற வரியின் தாக்கம்.
விழியில் பார்வை இழக்கும் போது மற்ற புலன்கள், இன்னும் மேம்பட உணர்வுகளை அறியும். அப்படியான சரியான சூழ்நிலையில் இந்த உருவகத்தைப் பாவித்திருக்கும் கவிப் பேரரசு கம்பனுக்கு எந்த விதத்திலும் சலைத்தவரில்லை.
2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
cute and romantic. இந்த பாடல் வரிகளை விட, கண் தெரியாதவன் தன் காதலியை வர்ணிக்கும் “அழகே அழகு” அற்புதம்
கேபிள் சங்கர்.
நல்ல ஒரு ஆய்வு :-)முதல் பதிவிலேயே சிக்ஸர்!
amas32
Post a Comment