அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அழகான இந்தப் பெண்மணி ஏண்டா இப்படிப் போஸ் கொடுக்குதுன்னு பார்க்கிறீங்களா? அத்தனையும் வஞ்சனைங்க. அம்மணி பேரு “சோனியா தாமஸ்”, வயது44 எடை 47 கிலோகிராம். நியூ யோர்க் நகரில் நடந்த வான் கோழி சாப்பிடும் போட்டியில், இல்லை.. இல்லை.. வான்கோழி விழுங்கும் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளார். 10 நிமிடங்களுக்குள் 2கிலோ இறைச்சியை சாப்பிட்டு முடித்தே இந்த செப்பினால் செய்த கோப்பையை வென்று இருக்கிறார். போட்டிக்கு வந்த குண்டர் படை இந்தப் பெண்ணைப் பார்த்து மிரண்டு விட்டார்களாம். இவர் ஏற்கனவே 12 நிமிடங்களில் 183 Chicken wings, 10 நிமிடங்களில் 40 hot dogs என்பதை எல்லாம் சாப்பிட்டு சாதணை செய்துள்ளார்களாம். எனக்கு என்ன பொறாமை என்றால் இவ்வளவையும் சாப்பிட்டு விட்டும் இந்தம்மா இத்துனூண்டா இருக்கிறாங்களே... அவ்வளவும் வஞ்சனைன்னு மனச தேத்திக்க வேண்டியது தான்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அடுத்த முறை மண்டையைப் பிளக்கும் தலைவலி என்று சொல்லும் முன்னே இந்த மனிதரை நினைத்துப் பாருங்கள். 47 வயதான Li Xin 20 வருடங்கள் கடுமையாக பயிற்சி செய்து இப்படி ஆணியின் மேல் எந்த உதவியும் இல்லாமல் தன் மொத்த 66 கிலோ எடையையும் போட்டு பாலன்ஸ் பண்ணுகிறார். தலையால் மட்டும் அல்ல தன் வயிற்றையும் இந்த ஆணி மேல் வைத்து பாலன்ஸ் பண்ணுகிறார். எனக்கு என்ன விளங்கவில்லை என்றால், ஏன் இவருக்கு இந்த வேலை? 20 வருடங்கள் பயிற்சி செய்து இப்படி உயிரைப் பணயம் வைத்து நடப்பதால் என்ன பலன்?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
You Tubeல் எது எதெல்லாம் பிரபலம் ஆகும் என்றே சொல்ல முடியாது. இதற்கு உதரணமாக நம்ம கொலைவெறி சாங்கை சொல்லலாம். (கவனிக்கனும் பாடல் இல்லை சாங்) கீழே கொடுக்கப்பட்டுள்ள விடீயோவில் என்ன உள்ளதோ தெரியவில்லை. Super duper Hit அடைந்துள்ளது. ஒன்றரை மில்லியன் ஹிட்ஸ். தயவு செய்து இதில் அப்படி என்ன இருக்குன்னு யாராவது எனக்குப் புரிய வையுங்களேன்.... ப்ளீஸ்...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இளையராஜாவின் வேகமான இசையில் லதா மங்கேஷ்கர் மற்றும் பாலசுப்பிரமணியத்தின் குரல்கள் இரண்டும் பந்தயம் கட்டி விளையாடுவது போல் இருக்கும் இந்தப் பாடல். 20 வருடங்களுக்கு மேலாகியும் கேட்க கேட்க அலுக்காது. இந்தத் திரைப்படம் அது வரை K. பாலச்சந்தரிடம் உதவியாளராக இருந்த டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவின் முதலாவது டைரக்ஷன்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
12 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக
நிதிதிரட்டும் அந்த மனிதாபிமானம் மிக்க
உள்ளங்கள் வாழ்க...
10 நிமிடங்களுக்குள் 2கிலோ இறைச்சியா ....
அடேயப்பா ... காயசண்டிகை பசி கொண்டவர் போல தெரியுது...
மாயக்கண்ணாடியின் எதிரொளிப்பு அற்புதம் சகோதரி...
நல்ல மனம் படைத்த அந்த மனிதர்கள் அனைவரும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்./
பகிர்ந்த தாங்களும் பல்லாண்டு வாழ் வாழ்த்துகள்..
எனக்கு என்ன பொறாமை என்றால் இவ்வளவையும் சாப்பிட்டு விட்டும் இந்தம்மா இத்துனூண்டா இருக்கிறாங்களே... அவ்வளவும் வஞ்சனைன்னு மனச தேத்திக்க வேண்டியது தான்./
அதுதானே குண்டர்களையே மிரளவைத்த அசுர சாதனையாளி..
http://jaghamani.blogspot.com/2011/11/blog-post_8665.html//
வளமான வாழ்வு அருளும்
வல்வை முத்துமாரி அம்மன்..
தங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன் தோழி!
எல்லா படங்களும் அருமை. பகிர்விற்கு நன்றி சகோ!
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
Supa song n Supa informations!Thx Sharmmi Akka!
@மகேந்திரன்
தொடர் வருகைக்கு நன்றி அண்ணா.
@இராஜராஜேஸ்வரி
பல்லாண்டு வாழ வாழ்த்தும் உங்களுக்கு மிக நல்ல மனம். நன்றிகள் பல.
சுவாரசியமான content.
பகிர்விற்கு நன்றி சகோ!
இவ்வளவையும் சாப்பிட்டு விட்டும் இந்தம்மா இத்துனூண்டா இருக்கிறாங்களே...
வயிறா.. வண்ணான் சாலா.. என்று கேட்பார்கள்.. நிறையத் தின்றால். அது நினைப்பில் வந்தது.
கேக் கின்னஸ் சாதனை என்றால் அதைச் செய்ய தூண்டிய நல் மனசுக்கு ஒரு சபாஷ்.
வளையோசை கலகலவென பாடல் எப்போது கேட்டாலும் / பார்த்தாலும் திகட்டாத பதிவு. இளமையின் துள்ளல்.. இசையின் ராஜாங்கம்.. கமல், அமலா ஜோடியின் மயக்கும் நடிப்பு.. ட்ரஸ் கூட மனசுக்குள் அப்படியே பதிந்து போய் விட்டது.. வாவ்..
Post a Comment