ஆப்பில் iகடை Vs. மைக்ரொசோஃப்ட் ஸ்டோர்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இந்த நவம்பர் மாதம் கலிபோர்னியாவில் மைக்ரோசோஃப்ட் நிறுவனம் தன் முதலாவது கடையைத் திறந்துள்ளது. சான் ஜோசில் மிகவும் பிரபலமான வெஸ்ட் ஃபீல்ட் மாலில் ஆப்பில் கடையிலிருந்து சில அடி தூரத்திலேயே இந்தக் கடை அமைந்துள்ளது. இரண்டு கடையையும் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு 6 வித்தியாசங்கள் கண்டு பிடிக்கும் அளவிற்கு ஒரே மாதிரி உள்ளது. மைக்ரோசொஃப்டையும் குறை சொல்ல முடியாது. ஆண்டுதோறும் ஒரு சதுர அடிக்கு $5000ம் படி ஆப்பில் ஸ்டோர்கள் விற்பனை நடத்திக் காட்டுகின்றன. அங்கு ஜீனியஸ் பார், இங்கு ஆன்ஸர் டெஸ்க். ஒரே வித்தியாசம். ஆப்பில் கடைகள் தங்கள் பொருட்களுக்கு மட்டுமே விற்பனை மற்றும் சேவைக் களமாக அமைந்துள்ளது. ஆனால் மைக்ரோசோஃப்ட் கடைகளில் எந்த கணணியையும் இலத்திரனியல் கருவிகளையும் திருத்தித் தருவார்கள்.
மைக்ரோ சோஃப்ட்டும் தான் முயல்கிறது... பார்ப்போம் ஆப்பிலை வெல்கிறதா என்று. மேலை நாட்டு இளைஞர்களிடம் ஆப்பில் சாதனங்கள் வெகுவாக ஒன்றிவிட்டது. குறிப்பாக இசைப்பிரியர்களிடம்...
இதில் கொடுமை என்னன்ன... மைக்ரோசொஃப்ட் கடைத் திறப்பு விழாவிற்கு இசை வழங்க வந்த DJ கொண்டு வந்தது Apple iMac. விடுவார்களா... உடனே அதற்கு மேல் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி மறைத்து விட்டார்கள். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி.
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
இலந்திரனியல் - அப்படின்னா என்ன மேடம்...
@Philosophy Prabhakaran
இலத்திரன் என்றால் electron. இலத்திரனியல் என்றால் Electronical.
என்னை வச்சு நீங்க காமெடி கிமெடி பண்ணலையே?
இல்லீங்க மேடம்...
@Philosophy Prabhakaran
இல்லை, பையன் பணிவா பவ்யமா பேசுறான். அது தான் பயமாயிருந்திச்சு.
விடாக்கண்டன் ... கொடாக்கண்டன் கதைதான்
பெரும் தொழில் நிறுவனங்கள் மோதுகின்றன..
நானா நீயா....
உடனே அதற்கு மேல் தங்கள் ஸ்டிக்கரை ஒட்டி மறைத்து விட்டார்கள். முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைத்த மாதிரி.
அய்யோ பாவம்..
படங்கள் அருமை.
Post a Comment