விதவைகள் மறுமணம் என்பது பல நூற்றாண்டுகளாக சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது.. மனைவி இறந்தால் அவள் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைக்கும் இச்சமூகம், கணவன் இழந்தால் அவன் சகோதரனை மணம் முடித்து வைக்குமா? எனக்கு இரண்டிலுமே உடன் பாடு இல்லை, அது வேறு விஷயம்.
சாதாரண சமூகத்திலேயே இப்படிப் பல பிரச்சிணகள் இருக்கும் போது, போரின் கோரப் பிடியில் ஆயிரம் ஆயிரம் உயிர்களை தொலைத்த என் குலப் பெண்களை நினைத்தால் துயரம் தொண்டையை அடைக்கும்..
அப்படி ஒரு அபலையின் கதை தான் இது. தொழில் நுட்பம் ஏதுமில்லாத வன்னி நிலப்பரப்பில் படம் பிடிக்கப் பட்டது என்பதை நினைவில் கொண்டு பாருங்கள்..
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
மனைவி இறந்தால் அவள் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைக்கும் இச்சமூகம், கணவன் இழந்தால் அவன் சகோதரனை மணம் முடித்து வைக்குமா? எனக்கு இரண்டிலுமே உடன் பாடு இல்லை, அது வேறு விஷயம்.
இந்த நிலைமை இப்போது இல்லை என்றுதான் நினைக்கிறேன்.. சமூகம் இப்போது இருக்கும் நிலையை பதிவிட்டால் அடிக்க வருவார்கள்.
இந்த மாதிரி கைம்பெண்கள் நிறைய வன்னிப் பகுதியில் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது மனசு வலிக்கத்தான் செய்கிறது..இருபது நிமிட காணொளியை முழுவதும் பார்த்தேன்..இசைப்ரியாவின் முகத்தைப் பார்ப்பதற்கே முடியவில்லை..அவ்வளவு துக்கத்தை முகத்தில் பிரதிபலித்திருக்கிறார்..
பின்னணி இசை மனதைப் பிசைகிறது..காணொளியை காண்பித்தமைக்கு நன்றி..
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)
//மனைவி இறந்தால் அவள் தங்கையை அவனுக்கு மணமுடித்து வைக்கும் இச்சமூகம், கணவன் இழந்தால் அவன் சகோதரனை மணம் முடித்து வைக்குமா? //
Sikh community-இல் இப்படி ஒரு வழக்கும் உண்டு.
இளம் விதவைக்கு மறுமணம் செய்து வைத்திடாத எந்த சமூகத்தின் மீதும் எனக்கு உடன்பாடில்லை - Vivekananda
Post a Comment