அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல.. அல்ல.. பின்ன வேறென்னங்க சொல்றது.. சீனாவில் உள்ள Yunnan Wild Animal Parkல் சுன்சி என்ற ஆடும் சுங்க்மோ என்ற மானும் காதல் வசப்பட்டிருக்கிறார்களாம். உடனே முழித்துக் கொண்ட அதிகாரிகள் காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியாக இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப் போகிறார்களாம். இதுவரை 500 டிக்கட்டுகளுக்கும் மேல் விற்பணையாகி உள்ளது. இதைத் தான் எங்க பாட்டி கலிகாலம் என்று சொல்வார்கள்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Edith Ritchie மற்றும் Evelyn Middleton என்ற சகோதரிகள் தங்கள் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியிருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இதன் மூலம் உலகிலேயே அதிகூடிய வயதான இரட்டையர்கள் ஆவார்கள். ஸ்காட்லாந்தில் வாழும் இச்சகோதரிகள் 1909ம் ஆண்டு பிறந்தார்கள். தங்கள் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன என்று கேட்ட போது “எளிமையான வாழ்க்கை, கடின உழைப்பு, நல்ல கணவன்” என்று சொல்லியிருக்கிறார்கள். முதல் ரெண்டும் எப்படியோ தெரியாது... ஆனால் நல்ல கணவன் என்பது மிக முக்கியம். என்ன நான் சொல்றது சரிதானே?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
கலிகாலம் என்பது உண்மை தான். இந்தப் படங்கள் Los Angelesல் உள்ள Robert L. Adams drive-through funeral homeல் எடுக்கப்பட்டது. இது 1974ம் ஆண்டு முதல் நடந்து வரும் சவச்சாலையாம். Drive through அதாவது காரில் இருந்த படியே இறுதி மரியாதை செலுத்தி விட்டுச் செல்லலாம். இதைப் பற்றி மேலும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மனம் கனமாக உள்ளது. உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே என்று பாடத் தான் தோணுது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Los Angelesல் 220 அடி உயரம் உள்ள ஒரு தகவல் கோபுரத்தில் ஒரு பெயர் வெளியிடாத மனிதர் ஏறி நின்று கொண்டு ஒவ்வொரு ஆடையாக கழட்டி வீசிவிட்டார். ஒவ்வொன்றாக வீசியபடியே 'Onward, Christian Soldiers' என்ற கூச்சலிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். ஒருவாரு அவரை சமாதானப் படுத்தி கீழே கொண்டு வர 4 மணி நேரங்கள் எடுத்திருக்கு காவல் துறையினருக்கு.. ஏன் ஏறினார்.. ஏன் கத்தினார்.. இப்படியான எந்தத் தகவலும் வெளிவிடப் படவில்லை. என்ன கொடுமை சார் இது...?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
காதலர் தினத்திற்காக ஒரு பாட்டு போடணும்னு நினைத்தேன்.. கண்ணை மூடி சிந்ததித்த போது சங்கத்தில் பாடாத கவி தான் ஞாபகம் வந்தது. ராஜாவின் மயக்கும் இசையும், மோகத்தில் பாடும் நாயகனாய் அவர் குரலும், ஜானகியின் சிணுங்கலும், காதலில் தவழும் அந்தத் தமிழ் வரிகளும்... கண்ணை மூடி கேட்டுப் பாருங்கள்.. சொர்க்கத்தில் மிதப்பீர்கள். ஆனால் தயவு செய்து கண்களை மூடிக் கொண்டே கேளுங்கள். கண்ணைத் திறந்து திரையைப் பார்த்து நீங்கள் பயந்து விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.. என்பதை இப்போதே சொல்லிக்கொள்கிறேன்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
வணக்கம் சகோதரி,
நலமா?
நீண்ட நாட்கள் தங்கள் வலைப்பக்கம்
வரமுடியவில்லை.
இதோ மாயக்கண்ணாடி தரிசிக்க வந்தேன்.
நடப்பு நிகழ்வுகளை அப்படியே
பிரதிபலித்துக் காட்டுகிறது.
காதலர் தினம் - கலிகாலம் தான்
மாயக்கண்ணாடி அருமை சகோதரி..சிறப்பான தொகுப்பு,,நன்றிகளோடு வாழ்த்துக்கள்.
அடிக்கடி உங்கக மாயக்கண்ணாடிக்குள் பார்க்கிறேன், நிறைய விஷயங்களை சொல்லுகிறது.கேட்டுக்கொள்கிறேன்.இன்றும் அப்படித்தான்.
ட்விட்டர்ல மொக்கை, பிளாக்ல யூஸ் ஃபுல் போஸ்ட் நல்ல காம்பினெஷன் குட்
உலகம் போற போக்கைப் பாரு தங்கமே தில்லாலே
அருமையான மாயக்கண்ணாடியின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment