Saturday, 19 May 2012

மாயக்கண்ணாடி - 19/05/2012



அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


மொபைல் ஃபொனைக் கண்டு பிடித்தாலும் கண்டு பிடிச்சான் அதுக்கப்புறம் சாலையில் விபத்துகள் அதிகமாக ஆரம்பித்து விட்டது.. வண்டியோட்டும் போது தான் பிரச்சிணை என்று பார்த்தால் நடந்து செல்பவர்கள் அதை விட மோசமாகிவிட்டார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நியூயோர்க் நகர முனிசிபால் இப்படி ஒரு பலகையை நகரின் பல இடங்களில் வைத்திருக்கு.. போனில் டுவிட்டர் பார்த்துட்டு போறவங்க கண்ணுக்கு இது எங்கே தெரியப் போகுது பார்ப்போம்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இதை என்னன்னு சொல்றதுன்னே தெரியலை.. மக்களின் மூளை எப்படி எல்லாம் வேலை செய்யுது?
ஜெர்மனியில் உள்ள இரண்டு கலைக் கல்லூரிகளான De Eindhovense மற்றும் Sint Lucas என்பன ஒன்றாக இணந்துள்ளன. அதைக் கொண்டாடும் முகமாகத் தான் இந்த 15 அடி சந்தோஷமான மனிதன் சிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இதுக்கு ஏன் இவங்க இப்படி சொன்னாங்கன்னு பார்க்கிறீர்களா? அதை எதால் செய்தார்கள் என்பது தான் இங்கு செய்தி.. சப்பித் துப்பும் (Chewing Gum)சுவிங்கத்தால்.. ஒவ்வொருவரும் சப்பி முடித்ததும் வந்து தங்கள் பங்கிற்கு ஒட்டிவிட்டு போவார்களாம்.. அப்படியே சிலை முழுக்க உருவாக்கிவிட்டார்கள்..
கல்லுரிகளின் நிர்வாகத்திற்கு இதில் மிகவும் சந்தோஷமாம்.. சப்பிய சுவிங்கத்தைக் கண்ட இடத்திலும் போடாமல்.. ஒரே இடமாக ஒட்டிவிட்டார்கள் என்று..
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Humming Bird என்பவை 300 வகையான பறவைகளைக் கொண்ட ஒரு அரிய பறவை இனம். இவை அமெரிக்காவில் மட்டுமே காணப்படும். மிகவும் சிறிய பறவைகளான இவற்றின் சிறிய கால்களால் தரையில் நடந்து திரிய முடியாது. ஆனால் பறப்பதில் கில்லாடிகள். ஹெலிகாப்டர் போல் அந்தரத்தில்  ஒரே இடத்தில் நிற்கக்கூடியவை. உண்மையைச் சொன்னால் இவற்றைப் பார்த்துத் தான் ஹெலிகாப்டர்கள் செஞ்சிருப்பார்கள் என் நினைக்கிறேன்.

Doyle Doss என்பவர் இந்தப் பறவைகளை அருகில் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டு இப்படி ஒரு ஹெல்மெட்டைக் கண்டுபிடித்திருக்கிறார். 1970ம் ஆண்டு இவருக்கு இருந்த சிவப்பு நிற தாடியால் கவரப்பட்டு ஒரு ஹம்மிங் பேர்ட் இவரைத் துரத்தியிருக்கு.. அந்த அனுபவத்தை வைத்து பல ஆண்டுகளாக சிந்தித்து இப்படி ஒரு தலைக் கவசத்தைத் தயாரித்திருக்கிறார். அதாவது கண்கள் இரண்டுக்கும் இடையில் ஒரு தேன்குழாய் வைத்து.. பூக்கள் போல் நல்ல பிரகாசமான நிறங்களில் உள்ள ஹெல்மட்டைப் போட்டுக் கொண்டு நின்றால் ஹம்மிங் பேர்டை மிக அருகில் பார்க்கலாமாம். ஒரு ஹெல்மெட் $100 விலை. ஆனால் தேனைக் குடிக்க வேகமாக வரும் பறவைகள் கண்களை மாத்திக் குத்திவிட்டால் அதற்கு கம்பனி பொறுப்பில்லை சொல்லிட்டேன். 


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பெருமைக்கு உரிய ஓர் ஈழத்தமிழ் மைந்தன்.. நீங்களும் பார்த்து ரசித்து பெருமை கொள்ளுங்கள். 


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

ரிஷபன் said... Best Blogger Tips

அவ்வளோ சூயிங்கம்மா.. அடேங்கப்பா..

வந்தியத்தேவன் said... Best Blogger Tips

சில பஸ் ஸ்டாண்டுகளிலும் உந்த சுவிங்கத்தை ஒட்டும் பழக்கம் இருக்கு, நல்ல கண்ணாடி

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

மாயக்கண்ணாடி வியக்கவைக்கிறது..

கோவை நேரம் said... Best Blogger Tips

அனைத்தும் அருமை..

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget