அடிக்கடி
என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
80 வயதான ஜப்பானியர் Yuichiro Miura இமய மலையின் உச்சியான எவரெஸ்டின் முகட்டை அடைந்து சாதணை படைத்துள்ளார். எவரெஸ்ட்டை ஏறிய மனிதர்களில் இவரே அதிக வயதானவர். இவர் இதற்கு முன்பும் தனக்கு 70 வயது மற்றும் 75 வயது இருக்கும் போதும் எவரெஸ்ட்டை எட்டிப் பிடித்திருக்கிறார். பார்ப்போம்.. 85 வயதிலும் இது நடக்கிறதா என்று..?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Nik Wallenda என்ற அமெரிக்கர் Grand Canyon பள்ளத்தாக்கை ஒரு கயிற்றின் மேல் நடந்து கடந்துள்ளார். கீழே பாதுகாப்பு வலை ஏதும் இல்லாமல் தன்னைச் சமப்படுத்திக் கொள்வதற்கு ஓர் நீண்ட தடியை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இச்சாகசத்தை செய்து முடித்துள்ளார். இவர் பரம்பரையே சர்க்கஸ் கூத்தாடிகள் தான். இவர் 7வது தலைமுறை.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஐக்கிய ராஜ்ஜியத்தில் ராயல் அஸ்காட் என்று ஒரு குதிரைப் பந்தய அரங்கு உள்ளது. ராணியும் அவர் குடும்பத்தாரும் தவறாமல் கலந்து கொள்வார்கள். அங்கே உள்ளே செல்வதென்றால் Ladies and Gentlemen மாதிரி கோர்ட் சூட் எல்லாம் அணிந்து தான் செல்ல வேண்டும். தொப்பி முக்கியம். இது ஐஸ்வர்யா ராய் அஸ்காட்டில் எடுத்த படம்.
இந்த அஸ்காட்டில் தான் அதன் 207 ஆண்டு வரலாற்றில் முதன் முதலாக நாடாளும் ராணியின் குதிரை தங்கக் கோப்பையை வென்றுள்ளது. குதிரையின் பெயர் “Estimate”.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
வழமையாக காதல் வசப்பட்ட ஆண் தன் காதலனை வர்ணித்து பாடல் பாடுவான். இங்கே ஒரு பெண் அழகான நாசுக்கான வார்த்தைகளில் தன் காதலையும் காதலனையும் வெளிப்படுத்துகிறாள். கவிஞர் சினேகனின் வரிகளுக்கு ஐஸ்க்ரீம் குரலாள் சாதனா சர்கம் பாடியுள்ளார்.
“எத்தணை ஆண்களைக் கடந்து வந்தேன்... எவனையும் பிடிக்கவில்லை..
இருபது வருடம் உனைப் போல் ஒருவனும் என்னை மயக்கவில்லை”
~ என்னவருக்கு இந்தப் பாடல் சமர்ப்பணம்...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
5 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
மாயக்கண்ணாடி காட்டிய நிகழ்வுகள் அற்புதம்.
நன்றி.
மாதம் ஒரு முறை மாயக்கண்ணாடியை
நேயர்களுக்கு காட்டக்கூடாதா...சகோ ?
மாயக் கண்ணாடியில் பார்த்தவை வியக்கவைத்தன,,பாராட்டுக்கள்..
வியக்க வைக்கும் தகவல்களோடு, இனிமையான பாடல்... நன்றி... வாழ்த்துக்கள்...
படமும் தகவலும் அருமை...
ரொம்ப நாள் ஆளைக்காணாமே...
Post a Comment