நான் பொதுவாக எங்கு செல்வதாக இருந்தாலும் எனது சொந்த வாகனத்திலேயே செல்வது தான் வழக்கம். ஆனால் லண்டன் மாநகரத்திற்குள் வாகன நிறுத்துமிடம் வசதிகள் குறைவு என்பதால் லண்டன் அண்டர்கிரவுண்ட் சேவையயே பயன்படுத்த வேண்டிய நிலை. இன்றும் அப்படித்தான்..
லண்டன் திரையில் உத்தமவில்லன்.. வழமை போல் கமல் படம் வெளிவருது என்ற செய்தி வந்த நாளில் இருந்தே தினமும் பார்த்து பார்த்து முதல் நாள் காட்சிக்கு டிக்கட் எடுத்தாச்சு.. வெள்ளி இரவுக்காட்சி அரங்கம் 70 வீதம் நிறைந்திருந்தது..