அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Oklahamaவைச் சேர்ந்த Christie Carr என்ற இந்தப் பெண் ஒரு சிவப்பு கங்காரு குட்டியை தன் குழந்தை போல் வளர்க்கிறாராம். சும்மா பேச்சுக்கில்லே.. Nappy கட்டி, உடை உடுத்தி, காரில் வைத்து உலாப் போகிறாராம். இதற்குப் பதிலாக ஒரு குழந்தையையே வளர்த்திருக்கலாமே.. என்ன உலகமடா சாமி..?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
எளிதில் வாந்தி எடுக்கும் யாரும் இதைப் பார்க்கவோ படிக்கவோ வேண்டாம். ஒரு மெல்லிசைக்கச்சேரியில் drummer சாமி வந்தவர் போல் drumஐ விலாசித் தள்ளி விட்டு, அப்படியே வாந்தி எடுத்து விட்டு, மீண்டும் தொடர்ந்து வாசிக்கிறார்.. அதைப் பார்த்தால் தான் புரியும் இந்த விநோதம். பாவம் யாரு பெற்ற பிள்ளையோ.. ஆனால் விடியோ உடனே youtubeல் ஹிட்டாகிவிட்டது. வர வர எதெதெல்லாம் ஹிட்டாவது என்று வெவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
இந்த வார மாயக்கண்ணாடி நிறைய விஷயங்கள் சொல்லலை...
ரசித்தேன்.
புதிய செய்திகள் சுவை பட இருந்தது..
நன்றி..வாசித்தேன்..வாக்கிட்டேன்..
தமிழ் புத்தாண்டு தினத்தை தீர்மானிப்பது அரசியல் வாதிகளா?இலக்கியவாதிகளா?
@Philosophy Prabhakaran ஆமா.. பிலோ.. ரொம்ப நாளா ஒரு பதிவும் போடலயே என்று அவசர உப்புமாவாக கிண்டியது இது. இதை விட போடாமலேயே இருந்திருக்கலாம் என்று பிறகு நினைத்தேன்..
@பழனி.கந்தசாமி @மதுமதி நன்றி.. தோழர்களே..
வித்தியாசமான செய்திகளைப் பார்த்தேன் மாயக்கண்ணாடியில்- நன்றி
Post a Comment