Friday, 13 January 2012

மாயக்கண்ணாடி - 13/01/2012


அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::




Beijingல் இன்று Apple iPhone 4S வெளியிடுவதாக இருந்தது, ஆனால் வெளியில் திரண்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிரண்ட கடை ஊழியர்கள், கதவுகளைத் திறக்காமல் 4S வெளியிடப்படவில்லை என்று அறிவித்தார்கள். இதனால் 1000 கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலைந்து 350 பேரே எஞ்சியிருந்தனர். அவர்கள் கோபம் கொண்டு கடையின் மேல் முட்டைகளை எறிந்து கலாட்டா செய்திருக்கிறார்கள். இதனால் சைனாவில் தற்காலிகமாக iPhone 4S விற்பனை ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


Oklahamaவைச் சேர்ந்த Christie Carr என்ற இந்தப் பெண் ஒரு சிவப்பு கங்காரு குட்டியை தன் குழந்தை போல் வளர்க்கிறாராம். சும்மா பேச்சுக்கில்லே.. Nappy கட்டி, உடை உடுத்தி, காரில் வைத்து உலாப் போகிறாராம். இதற்குப் பதிலாக ஒரு குழந்தையையே வளர்த்திருக்கலாமே.. என்ன உலகமடா சாமி..?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



எளிதில் வாந்தி எடுக்கும் யாரும் இதைப் பார்க்கவோ படிக்கவோ வேண்டாம். ஒரு மெல்லிசைக்கச்சேரியில் drummer சாமி வந்தவர் போல் drumஐ விலாசித் தள்ளி விட்டு, அப்படியே வாந்தி எடுத்து விட்டு, மீண்டும் தொடர்ந்து வாசிக்கிறார்.. அதைப் பார்த்தால் தான் புரியும் இந்த விநோதம். பாவம் யாரு பெற்ற பிள்ளையோ.. ஆனால் விடியோ உடனே youtubeல் ஹிட்டாகிவிட்டது. வர வர எதெதெல்லாம் ஹிட்டாவது என்று வெவஸ்தையே இல்லாமல் போய்விட்டது.


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

இந்த வார மாயக்கண்ணாடி நிறைய விஷயங்கள் சொல்லலை...

ப.கந்தசாமி said... Best Blogger Tips

ரசித்தேன்.

Admin said... Best Blogger Tips

புதிய செய்திகள் சுவை பட இருந்தது..
நன்றி..வாசித்தேன்..வாக்கிட்டேன்..

தமிழ் புத்தாண்டு தினத்தை தீர்மானிப்பது அரசியல் வாதிகளா?இலக்கியவாதிகளா?

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@Philosophy Prabhakaran ஆமா.. பிலோ.. ரொம்ப நாளா ஒரு பதிவும் போடலயே என்று அவசர உப்புமாவாக கிண்டியது இது. இதை விட போடாமலேயே இருந்திருக்கலாம் என்று பிறகு நினைத்தேன்..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@பழனி.கந்தசாமி @மதுமதி நன்றி.. தோழர்களே..

Avainayagan said... Best Blogger Tips

வித்தியாசமான செய்திகளைப் பார்த்தேன் மாயக்கண்ணாடியில்- நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget