நாங்கல்லாம் அப்பவே அப்படி.. தெரியுமா?
96ம் ஆண்டு ஜனவரி மாதம் யுனெஸ்கோவின் சார்க் மண்டல தலைவர் இலங்கைக்கு வருகை தந்தார். கொழும்பில் இருந்த பாடசாலை மாணவர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரோடு ஒரு கலந்துரையாடல் நடத்துவதாக ஏற்பாடு. ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவேன் என்பதால் என்னைப் பற்றி முழுவதுமாக தெரியாமல் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டார்கள்.
அங்கு சென்று நிகழ்ச்சி ஆரம்பித்தது. ஆங்கிலத்தில் நிகழ்ச்சி நிரல் அடித்து எல்லோருக்கும் கொடுக்கப் பட்ட்து. அத்துடன் இருந்திருந்தால் பிரச்சிணை இல்லை. சிங்கள மாணவர்களுக்கு அந்நிகழ்ச்சி நிரல் சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டிருந்தது. தமிழ் மாணவர் குழுவிற்கு தமிழில் தரவில்லை. விடுவேனா நான்..?
வந்திருந்த 2-3 பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் தடுத்தும் கேளாமல் எழுந்து நின்று எனக்கு தமிழில் மொழி பெயர்த்த நிகழ்ச்சி நிரல் தரமுடியுமா என்று மிடுக்கான ஆங்கிலத்தில் கேட்டேன். அறையே ஸ்தம்பித்து விட்டது. வந்திருந்த வெள்ளையர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பார்க்க அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவரைப் பார்க்க.. எனக்கு சிரிப்புத் தான். இங்கும் அங்குமாக ஓடித் திரிந்து விட்டு தமிழில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
“கல்வியால் அமைதியும் ஒற்றுமையும்” என்று நிகழ்ச்சி நடத்தும் இவ்விடத்திலேயே வேறுபாடு.. பின் வேறு எங்கு எங்களுக்கு சம நீதி கிடைக்கும் என்று பேசினேன். யுனெஸ்கோ குழுவினரும் இதைக் கண்டித்ததோடு, இனிமேல் இப்படி நேராமல் பாருங்கள் என்றார்கள்.
கலந்துரையாடல் முடிந்த பின் வந்திருந்த வெளி நாட்டுக் குழுவினர் என்னை அனுகி என் பேச்சில் இருந்த தெளிவிற்காக பாராட்டி பேசினார்கள். நான் படிக்கும் பாடசாலை விவரம், என் பெயர் எல்லாம் கேட்டுச் சென்றார்கள்.
அன்று அந்த வெளிநாட்டவர் என்னைப் பற்றி விவரம் கேட்டதால் தான் நான் காணாமல் போகாமல் இன்னமும் நடமாடுகிறேனோ என்று பல நாள் நினைத்ததுண்டு. இந்த செயலுக்காக பாடசாலையிலும் வீட்டிலும் பேச்சு வாங்கினது தனிக் கதை.. சோகக்கதை.. இன்னொரு நாள் சொல்றேன்..
4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
துணிச்சலான பெண்மணியே வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் :)))
மேலும் தொடர்ந்து சொல்லுங்கள் தெரிந்து கொள்ளும் ஆவலைத்
தூண்டி விட்டீர்கள் இனி
விடமாட்டோம் :))
அன்று அந்த வெளிநாட்டவர் என்னைப் பற்றி விவரம் கேட்டதால் தான் நான் காணாமல் போகாமல் இன்னமும் நடமாடுகிறேனோ என்று பல நாள் நினைத்ததுண்டு. இந்த செயலுக்காக பாடசாலையிலும் வீட்டிலும் பேச்சு வாங்கினது தனிக் கதை.. சோகக்கதை.. இன்னொரு நாள் சொல்றேன்.
.தலைப்பும் சொல்லிச் சென்றவிதமும் அருமை
அடுத்தப் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...//
வாழ்த்துக்கள்...
ஆவலுடன் காத்திருக்கிறேன்...
“கல்வியால் அமைதியும் ஒற்றுமையும்” என்று நிகழ்ச்சி நடத்தும் இவ்விடத்திலேயே வேறுபாடு.. பின் வேறு எங்கு எங்களுக்கு சம நீதி கிடைக்கும் என்று பேசினேன். //
வாழ்த்துகள் !
Post a Comment