Saturday, 11 February 2012

Hugo - ஹாலிவுட் கொண்டாட்டம்


11ஆஸ்கார் நொமினேஷன்கள் இந்தப் படத்திற்கு. இந்த ஆண்டு அதிக நொமினேஷன் கிடைத்துள்ள படம். ட்ரெய்லர் பார்க்க குழந்தைகளுக்கான படம் போல் இருக்கவே.. ஒரு மாதத்திற்கு முன் குழந்தைகளுடன் ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்று பார்த்திருந்தோம்.. சரி படத்திற்கு வருவோம்.

Hugo என்ற இத்திரைப்படம் Brian Selznick என்பவரால் எழுதப்பட்ட The Invention of Hugo Cabret என்ற பல அவார்டுகள் வாங்கிய நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். இதன் கதைக்களம் முதலாம் உலகப் போருக்கு முந்தைய பாரீஸ் நகரம்.

ஹுகோ என்ற 10 வயதுச் சிறுவன் தான் படத்தின் ஹீரோ. பாரீஸ் நகர ரயில் நிலையத்தில் உள்ள அனைத்துக் கடிகாரங்களையும்  தனியாக நிர்வகித்துக் கொண்டு இருக்கிறான்.  அந்த வேலை அவன் சித்தப்பாவினுடையது. மகா குடிகாரனாகிய அவன், எங்கோ சென்று விட்டான். யாரிடமாவது சிக்கினால் அனாதை ஆஸ்ரமத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நிலை இருந்ததால், யார் கண்ணிலும் படாமல், ரயில் நிலையத்தில் உள்ள சுரங்கப் பாதைகளினூடும் மணிக்கூட்டு கோபுரத்திலும் நாட்களைக் கடத்துகிறான். அவன் தந்தை விட்டுச் சென்ற ஒரு இயந்திர மனிதனைத் திருத்துவதற்காகவும் உணவிற்காகவும் ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் பொருட்களைத் திருடுகிறான்.

அங்கு இருக்கும் ஒரு பொம்மை விற்கும் கடையில் இருந்து இயந்திர மனிதனுக்கான பாகங்களைத் திருடும் போது அந்த கடையின் முதலாளி பென்னிடம் பிடிபடுகிறான். முதலாளி கடையில் வேலை செய் தருகிறேன் என்றதும் அங்கு பகுதி நேரமாக வேலை செய்கிறான். இப்படியாகச் செல்லும் கதையில் அந்த இயந்திர மனிதன் உண்மையில் பென்னினுடையது என்றும் அவர் போருக்கு முந்தைய காலங்களில் பெரும் சினிமா டைரக்டர் என்பதும் தெரிய வருகிறது. Hugo எப்படி அவரை அவரின் அஞ்ஞா வாசத்தில் இருந்து மீட்டு மீண்டும் திரை உலகிற்கு கொண்டு வருகிறான் என்பதே மீதிக் கதை..படத்தின் ஆரம்ப கட்டங்களைப் பார்க்க ஏதோ Spielberg படம் பார்ப்பது போல் உள்ளது. ஒவ்வொரு காட்சியும் 3டியில் பிரம்மாண்டமாக விரிகிறது. சினிமா தொழில் நுடபங்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சி நிலையைப் படிப்படியாக விளக்குகிறார்கள். அந்தக்காலத்து ஜெகன்மோகினி போன்ற படங்களில் வந்த சித்து வேலைகள் உருவான கதைகள் விவரிக்கப்படுகிறது.


ரயில் நிலையத்தைச் சுற்றி இருக்கும் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார்கள். போரில் காயமடைந்த காலை இழுத்து இழுத்து நடக்கும் ஸ்டேஷன் மாஸ்டர், அவருக்கும் பூ விற்கும் பெண்ணிற்கும் இடையே சொல்லப்படாமல் இழுபடும் அவர்கள் காதல், டீக்கடை வைத்திருக்கும் பெண்மணி, அவர் அன்பிற்காக ஏங்கும் வயதான அவள் காதலன்.. கடை முதலாளி பென்னின் பேத்தி.. இப்படி நீண்டு கொண்டே போகுது பாத்திரப் படைப்பு..


அதிலும் என் விருப்பம்.. அந்த பேத்தியாக வரும் சுட்டிப் பெண் Chloe Moretz தான். கண்களும் கவி பாடுதே என்பார்களே அப்படி ஒரு துடிப்பு. கண்கள் மட்டும் இல்லை, உதடுகள், புருவங்கள், மூக்கின் நுனி கூட நடிக்கின்றது.  

Paramount Picturesஆல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் Casino, The gangs of NewYork, The Departed போன்ற படங்களை இயக்கிய Martin Scorsesல் உருவாக்கப்பட்டது.  இசை Lord of the Ringsன் இசையமைப்பாளரான Howard Shore வழங்கியது.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

முதல் ரசிகன் ( காலங்காத்தால ஒரு வேலை இல்லாம )

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>Your comment has been saved and will be visible after blog owner approval.

ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

பிடிச்ச பிளாக்னு சிலரை மட்டும் குறிப்பிட்டு சைடுல போட்டு இருக்கீங்களே? மத்தவங்க யாரும் கோவிச்சுக்க மாட்டாங்களா? இப்படிக்கு கோர்த்து விடுவோர் சங்கம், ஈரோடு கிளை

ஷர்மி said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
கோர்த்து விடுவோர் சங்கத்தின் பிரதான் கிளையே ஈரோடு தானாமே.. டுவிட்டர்ல அடி வாங்கிட்டு இங்கே வந்து கோர்த்துவிடீங்கா? பிடித்ததில் சில தான் இங்கே.. அடிக்கடி அப்டேட்டுவதில்லை..

ஷர்மி said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
என் முதல் ரசிகனுக்கு என்றென்றும் சிரம் தாழ்த்திய நன்றிகள்..

Kumaran said... Best Blogger Tips

என் இனிய காலை வணக்கம்,
ஹுகோ - கடந்த வருடம் வந்த படங்களிலேயே பார்க்க நினைக்கிற படம்..ஒரு வாரத்தில் பார்க்கலாம் என்றிருந்தேன்..ஆனால், உடனே பார்க்க சொல்கிறது தங்களது விமர்சனம் சகோ..படத்தை சுவாரஸ்யங்கள் குறையாது கச்சிதமாக எழுதி உள்ளீர்கள்..கண்டிப்பாக பார்ப்பேன்..தங்களுக்கு என் நன்றிகளோடு வாழ்த்துக்கள்.

சைக்கோ திரை விமர்சனம்

மனசாட்சி said... Best Blogger Tips

நேரம் கிடைக்கும் போது பார்க்கணும்..

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget