Friday, 6 April 2012

லண்டன் திரையில் “3”..“3” திரைப்படத்தின் நேரடி லண்டன் ரிப்போர்ட்...படம் வெள்ளிக் கிழமையே வெளிவந்து விட்டது.. வலைத் தளங்களில் கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு பார்ப்பதில்லை என்று இருந்தேன்.. அப்போது தான் ப்ரஷாந்தின் You Tube ரிவியூ பார்த்தேன்.. சரி போய்த் தான் பார்க்கலாமே என்று தோன்றியது. ஆன்லைனில் டிக்கட் புக் செய்து ஞாயிறு மாலை ஷோவிற்கு சென்றோம். உள்ளே போனால் எங்களியும் சேர்த்து 15 பேர் இருந்திருப்பார்கள். தப்புப் பண்ணி விட்டோமோ என்ற எண்ணம் வந்தது உண்மை. ஆனால் படம் தொடங்குவதற்கு முன் 80% நிரம்பிவிட்டது. லண்டனில் மிகவும் ஹிட்டான படங்களுக்கு மட்டுமே சீட்கள் நிரம்பி வழியும்.. அதனால் இதுவே வெற்றி தான். டெக்னிகல் விஷயம் எல்லாமே நல்லா இருக்கு.. தனுஷ், ஸ்ருதி ரெண்டு பேரும் ரொம்ப நல்லா நடிச்சுருக்காங்க.. படம் ரொம்ப புடிச்சுருக்கு.. ஆனால் ஆப்பரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் செத்துட்டார் என்கிறது போல் தான் இருக்கு. ஏதோ மிஸ்ஸிங்..

தனுஷ லூசாவே பார்த்து வந்த அலுப்பா..? அல்லது பை போலார் பற்றிய குழப்பங்களா? இல்லை.. டைரக்டர பார்த்தா கேட்கணும்னு மனசுல நிறைய கேள்விகள் தோன்றுவதாலான்னு தெரியல.. அவ்வளவு பெரிய மனுஷன் ஒரே புள்ள.. இப்படியா கல்யாணம் கட்டிக்கோன்னு விடுவார்? ஸ்ருதி தான் போல.. கல்யாணம் கட்டிட்டா.. அவங்க பேமிலி அமெரிக்கா போலாமே? ப்ரெண்டுன்னு சுத்துரவர்.. பொண்டாட்டி கிட்ட தான் சொல்லலை.. அவர் அப்பாகிட்ட சொல்லியிருக்கலாமே? சரி.. சரி.. என்னை விட்டா இப்படி இன்னும் பல கேள்விகள் கேட்பேன். அப்புறம் நீங்களே அடிப்பீங்க..படத்தில எனக்கு ஸ்ருதிய புடிச்சிருக்கு. நான் கமல் விசிறி அதனால கூட இருக்கலாம். ஆனா அந்த பொண்ணை குனிய வச்சு.. குனிய வச்சு அழ விட்டத தான் என்னால் பொறுக்க முடியல சாமி.. அடுத்த வாட்டி பண்ணாதேடா கண்ணு.. அப்பா பேர் உன் கையில் தான் இருக்கு. ஓ.கே?

அடுத்து இசை ரொம்ப புடிச்சிருந்துச்சு.. கண்ணழகா பாட்டு மெய் மறக்கச் செய்கிறது. BGM பின்னிட்டாங்க.. ஆனா எல்லோரும் அனிருத் பத்தியே பேசிட்டிருந்தாங்க.. டைட்டில் கார்டில் பார்த்தால் ரசுல் பூக்குட்டியின் பெயர் வருது. ஆஸ்கர் வின்னர்.. கை வண்ணத்தைக் கேட்கவா வேண்டும்?

இந்தப் பையன் தனுஷ சின்னப் பையனா காட்டுறதுல அவங்களுக்கு என்ன சந்தோஷமோ தெரியலை? அவன் லூசுங்கிறத அவங்க சொல்லித் தெரியத்தேவையில்லை.. அவன் முக பாவணையிலேயே தெரியுது. எனக்கு பாலக்காட்டுப் பக்கத்திலேன்னு பாட்டு பாடிட்டு வர்ற சிவாஜியின் நடிப்புத் தான் ஞாபகம் வந்தது.


சிவகார்த்திகேயன் வர்ற காட்சிகள் எல்லாம் நல்ல சிரிப்பு.. ஆனால் திடீரென்று படத்தில் இருந்து இல்லாமல் போயிட்டார்.. பார்க்கப் போனால் சுந்தர் காரக்டரில் அவர் தான் நடித்திருக்க வேண்டும். இது என்னவோ வெட்டி ஒட்டினது போல் ஆகிவிட்டது.

ஆக மொத்தத்தில் 3 கமல் மகளுக்காகவும், போனால் போகட்டும் என்று ரஜனி மகளுக்காவும் ஒரு முறை பார்க்கக்கூடிய படம். ஆனால் கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது..

படம் பார்த்து வெளியில் வரும் போது என்னவர் “ஏன் 3 என்று பெயர் வைத்தார்கள்?” என்றார்.. அதுக்கு என் மகள் “அவங்கப்பா கிட்ட 3 தடவை லைப் மாட்டர் பத்தி பேசுறார் இல்லைப்பா.. அதுக்கு” என்கிறாள். உங்களுக்கு ஏன்னு தெரிஞ்சுதா?

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Narayanan Ravi Chandran said... Best Blogger Tips

3 முறை பார்த்தால்தான் காரணம் புரியுமாம்... இன்னும் 2தடவை ட்ரை பண்ணவும்...

Prabu Krishna said... Best Blogger Tips

வந்த கூட்டம் எல்லாம் கொலவெறி பாட்டுக்கு வந்து இருப்பாங்க. (படம் முடிஞ்ச அப்புறம் அவிய்ங்க கொலவெறி ஆகி இருப்பீங்க.)

மூணுங்கறது படத்துக்கான மார்க்கா கூட இருக்கலாம்.

கோவை நேரம் said... Best Blogger Tips

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன ..இந்த மூணு படங்களின் உல்டா...அதான் மூணு...

உலக சினிமா ரசிகன் said... Best Blogger Tips

சகோதரி....தப்பி பிழைத்ததுக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
மூணு பார்த்த யாருமே நார்மலாக இல்லை.
நீங்கள் படம் பார்த்து விட்டு பதிவெல்லாம் வேறு எழுதி உள்ளீர்கள்.
விபத்தில் தப்பியதற்க்கு வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said... Best Blogger Tips

Suvaiyaana vimarsanam.

Madhumathi said... Best Blogger Tips

லண்டன் திரை விமர்சனம்..சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

3

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget