Thursday 7 June 2012

மாயக்கண்ணாடி - 07/06/2012

அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 
திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் முக்கியமான நாள். அவள் அன்று அழகாகத் தெரிய வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்தமாகத் தொடங்கி விடுவாள். என்ன புடவை.. என்ன அணிகலன்கள்.. என்ன ஒப்பணை என்று கற்பனையிலும் நிஜத்திலும் மிதந்து கொண்டிருப்பாள். உடல் மெலிவாக தெரிய வேண்டும் என்று உணவுக்கட்டுப்பாடு உடற்பயிற்சி என்று திரிபவர்களையும் பார்த்திருக்கேன்.. ஆனால் இந்த அம்மணி அதையும் தாண்டி பெரியவங்க ஆகிட்டாங்க..
 
திருமணம் என்ற பேச்சு வந்ததும் மெலிவதற்கு நினைத்திருக்கிறார் Susanne Eman என்ற இந்த 33 வயது பெண். இரு குழந்தைகளின் தாயாகிய இவருக்கு அது மட்டும் முடியவில்லை. ஏனென்றால் அவர் எடை.. அதிகம் இல்லை ஜெண்டில்மேன் வெறும் 360 கிலோ தான்.
 
யோசித்துப் பார்த்த சூசன் ஒரு முடிவுக்கு வந்தார். என்னால் மெலிய முடியாது. ஆனால் உலகிலேயே எடை கூடிய மணப் பெண் ஆக முடியும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எடையை அதிகரிக்க ஆரம்பித்துள்ளார். அவர் 725 கிலோ வந்த பின் தான் திருமணம் என்று சொல்லிவிட்டார். இப்போது பாவம் அந்தக் காதலன் Parker Clark முழி பிதுங்கி யோசிக்க ஆரம்பித்து விட்டாராம். ஆனால் சூசன் திருமண நாளுக்கான உடை கூட தயார் செய்து விட்டார். 3 பேர் சேர்ந்து தூக்கி வரும் அளவுக்கு 43 அடி சிஃபோன் துணியினால் ஆன ஆடை தான் அது.
 
 
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 
நம்ம ஊரில ரோட்டில் சுறிநீர் கழிக்கும் பசங்களை எல்லாம் கூட்டியாந்து வெளிநாடுகளில் சிறுநீர் கழிக்கும் போது என்ன எல்லாம் செய்கிறார்கள் என்பதைக் காட்டணும்.. இந்தக் கொடுமையைப் பாருங்கள்.. ப்ளீஸ்..
 
 
மேலே இருக்கிறது ஒரு கொடுமைன்னா.. கீழே இருப்பது அதை வென்றது.
 
யூரினலில் எலெக்ட்ரிக் கிடார் பொறுத்தப் பட்டுள்ளது. 6 விதமான டார்கெட் உள்ளது. அதை வைத்து உங்களுக்கு பிடித்த மாதிரி இசை உருவாக்கலாம். எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான். நண்பன் படத்தில் வருவது போல் யாருக்கும் ஷாக் அடிக்காதா?
 
Guitar Pee urinal

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



என்ன தான் சொல்லுங்க.. சீனர்கள் எங்கோ போய்விட்டார்கள். அரசாங்க மிருக வளர்ப்பு மற்றும் வேளாண்மைத் துறையினர் பன்றிகளை சந்தோஷமாக வைத்திருந்தால் அதிகமான சத்தான இறைச்சி கிடைக்கும் என்று கண்டு பிடித்துள்ளார்களாம். அதனால் சோதணை முயற்சியாக 600 பன்றிகளுக்கு £800 செலவில் இப்படி அழகான வீடுகளும் அமைத்து விளையாடப் பொருட்களும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்களாம். வேளாண்மைத் துறை அதிகாரி ஹூ ஜுசூன் இது ஒரு வெற்றிகரமான திட்டம் என்கிறார். பன்றிகள் சந்தோஷ்மாக இருந்தால் அரோக்கியமாக இருக்கும். அப்படி என்றால் கொழு கொழு என்று வந்து நிறைய இறைச்சி கிடைக்கும் என்கிறார்.
ம்கூம்.. பேசாம நாங்க சைனாவில் பன்றியாய் பிறந்திருக்கலாம்பா.. என்று அழகன் ஸ்டைலில் சொல்லத் தோன்றுகிறது. உங்களுக்கு?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

எப்பொழுதும் உன் சொப்பனங்கள், முப்பொழுதும் உன் கற்பனைகள், சிந்தனையில் நம் சங்கமங்கள், ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்.....

                               
இரவின் இனிமையிலே நான் மெய் மறந்து ரசிக்கும் பாடல்களில் ஒன்று.. இதோ உங்களுடன் பகிர்கிறேன். வரிகள் கவிஞர் பிறைசூடன் என நினைக்கிறேன்.. தவறு என்றால் திருத்தவும்... 
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


   

10 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

வந்தியத்தேவன் said... Best Blogger Tips

ஹாஹா யூரினல் விடியோ கலக்கல். நல்லதொரு கலவையான பதிவு

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

மாயக்கண்ணாடி அருமையான சித்திரம் !

ரிஷபன் said... Best Blogger Tips

ஏனென்றால் அவர் எடை.. அதிகம் இல்லை ஜெண்டில்மேன் வெறும் 360 கிலோ தான்.
Hiyo...

ரிஷபன் said... Best Blogger Tips

ஏனென்றால் அவர் எடை.. அதிகம் இல்லை ஜெண்டில்மேன் வெறும் 360 கிலோ தான்.
Hiyo...

kumaran said... Best Blogger Tips

Vaasalil kannaa un ther vara _aaduthu poonthoranam; should be vaali no?

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@kumaran இல்லை.. நான் ஊர்ஜிதப்படுத்தி விட்டேன். பிறைசூடன் தான்.. நன்றி..

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

கண்ணொளிகள் அருமை ! நன்றி சகோ !

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் பதிவு சென்றடையும் ! நன்றி !

Unknown said... Best Blogger Tips

"அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்" என்ற உங்கள் வாக்குறுதிக்கு எற்ப இந்தப்பதிவும் அமைந்துள்ளது அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

தங்களின் மாயக்கண்ணாடியை இன்று தான் பார்க்க நேர்ந்தது. அருமையாக உள்ளது. நகைச்சுவையாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget