Saturday, 13 October 2012

லண்டன் திரையில் “மாற்றான்”“மாற்றான்” திரைப்படத்தின் நேரடி லண்டன் ரிப்போர்ட்...

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

உலகம் முழுவதும் என்று சொன்னதற்கு ஏற்ப இங்கும் 12ம் திகதியே வெளியிட்டுவிட்டாரகள். எல்லா தியெட்டர்களிலும் 4 ஷோ. எல்லாமே ஃபுல்.. சூர்யா படம் என்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும் தெரிந்தது. 12A சேர்டிபிகேட், குழந்தைகளுடன் வருபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.சரி படத்திற்கு வருவோம். 7ம் அறிவைத் தொடர்ந்து இப்போ மாற்றான்... இனி Genetical Engineering பற்றிய படம் என்றாலே சூர்யா படம் மாதிரின்னு பேசப் போறாங்க. தமிழ் சினிமான்னா கட்டாயம் இரண்டரை மணி நேரம் இருக்கும் என்ற கொள்கையை இவர்கள் என்று கைவிடுகிறார்களோ அன்று தான் தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் பற்றி சிந்திக்கலாம் போல் உள்ளது.

முதல் பாதி நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. அதுவும் இரண்டில் ஒரு சூர்யா இறந்ததும் எல்லோரும் ஒருவித ஆழ்ந்த எதிர்பார்ப்புக்குள் சென்று விட்டார்கள். ஆனால் இடைவேளி எப்படா முடியும் என்று காத்திருந்த எனக்கு.. படம் எப்படா முடியும் என்றாகிவிட்டது. ஜவ்வோ ஜவ்வு.. அந்த கடைசி ஒரு மணி நேரத்தை இன்னும் விருவிருப்பாக்கியிருக்கலாம்.

 
 
படத்தில் போற்றப் பட வேண்டியவை நிறைய உள்ளது. முதலாவது.. சூரியா. ஒவ்வொரு பிரேமிலும் முழுதாக ஆக்கிரமித்துக் கொள்கிறார். அகிலன் விமலனுக்கு இடையில் வித்தியாசம் காட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் வெற்றி தான். நடிப்பு, நடனம், ஸ்டன்ட் எல்லாமே சூப்பர்..
 
 
இரண்டாவது.. காஜல் அகர்வால். டுவிட்டர் சந்துப் பக்கம் பசங்க எல்லாம் காஜல்.. காஜல்.. என்று ஏன் பெருமூச்சு விடுகிறார்கள் என்ற கேள்விக்கு.. சந்தேகமே இல்லாமல் பதில் அளித்திருக்கிறார். கொள்ளை அழகு. ஓவியப் பெண் போல் வளைய வருகிறார். நடித்தும் இருக்கிறார். ஆனால் காஜல் குட்டி அழுவதைப் பார்க்கத் தான் மனசு கேட்கலை. எதிர்கால இயக்குனர்களே கவனத்தில் கொள்ளவும் ப்ளீஸ்.

 
 
மூன்றாவது.. VFX effect. ஸ்ரீநிவாஸ் மோகன் தலைமையில் பொய் என்று பிரித்து அறிய முடியா வண்ணம் நன்றாக வித்தை காட்டியிருக்கிறார்கள்.
 
நான்காவது.. சௌந்தர்ராஜன்.. பாடல் காட்சியில் வரும் இயற்கை அழகு எங்கோ கொண்டு செல்கிறது. சிறப்பான படப்பிடிப்பு..

முக்கியமாக.. MGM சண்டைக் காட்சியை சொல்லியே ஆக வேண்டும். மொத்தக் குழுவும் சேர்ந்து உழைத்து இருக்கிறார்கள். கிராபிக்ஸ் என்றே தெரியவில்லை. நல்ல சண்டை அமைப்பும்.. Hats Off.. Peter Hein.
 

படத்தில் நிறைய கெமிஸ்ட்ரி.. ஹிஸ்ட்ரி.. பாடங்கள் எடுக்கிறார்கள். சாமான்ய மக்களை எந்த அளவிற்கு சென்றடையும் என்று தெரியவில்லை. ரொம்ப நாள் கழித்து தாரா அம்மாவாக வருகிறார்.. கடைசியாக அக்னி நட்சத்திரத்தில் பார்த்தது.
 
இசை ஹாரீஸ்.. பாட்டுகள் பரவாயில்லை தான். ஆனால் அந்த BGM இருக்கே.. மனுஷன் கொன்னுட்டார். புகழவில்லைங்க.. உண்மையிலேயே கொன்னுட்டார். ஏதோ புதுசாக முயற்சி செய்திருக்கார் போல.. காட்சிகளுடன் ஒட்டவில்லை. குறிப்பாக சண்டைக் காட்சிகளில்.. பின்னனி இசை தனியாக பயனிக்குது..
 
லாஜிக்காக கேள்வி கேட்காமல்.. சில பல குறைகளை மறந்துவிட்டு பொழுது போக்கிற்காக.. சூரியா, காஜலுக்காக ஒரு முறை பார்த்துவிடலாம். தப்பில்லை.
 
 
 
மாற்றான் பார்த்த பின் ஏற்பட்ட முக்கிய தாக்கம்.. நான் இதுவரை நார்வே போனதே இல்லீங்க.. வர்ற கோடைக்கால விடுமுறைக்கு அந்த அழகு தேசத்திற்கு கட்டாயம் போகணும் என்ற எண்ணம் தான்.
 
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 
 

3 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Karuppiah Thangaraj said... Best Blogger Tips

எல்லாம் சரிதான் அக்கா. ஆனா சில இடங்களில் அனிமேசன் காட்சிகள் பட்டவர்த்தனமாக தெரிந்தது. காஜல் அகர்வால் பற்றி கூறியதை 200% சதவீதம் ஏற்றுக் கொள்கிறேன். :-))

ஷர்மி said... Best Blogger Tips

@Karuppiah Thangaraj இல்லை.. எனக்கு அனிமேஷன் நல்லா தான் இருந்துச்சு.. என் பார்வை தப்பாச்சோ..?

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை குட்டி என்று விளிப்பதில் இருந்தே காஜலின் தாக்கத்தை உணர முடிகிறது...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget