Saturday 11 May 2013

மாயக்கண்ணாடி - 11/05/2013




அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



சீனாவில் ஷாங்சி மாகாணத்தில் டையுன் நகரத்தில் சாலைகள் விஸ்தரிக்கப்பட இருந்தது. அதற்கான நோட்டீசு ஒட்டப்பட்டு 10 நாள் அவகாசமும் கொடுக்கப்பட்டது.  வேலை தொடங்க வந்த அதிகாரிகள் சாலையில் ஒரு கார் நிற்பதைப் பார்த்ததும் கொதித்துப் போய்விட்டாரகள். யாருக்காகவும் வேலையை நிறுத்த முடியாது என்று நிறுத்தப்பட்ட காரைச் சுற்றி வேலையை ஆரம்பித்து விட்டார்கள். 

திரும்பி வந்து பார்த்த உரிமையாளருக்கு ஆச்சரியம். வாகனத்தில் ஒரு சிறு கீறலோ.. அழுக்கோ படாமல் எல்லா வேலையும் முடிந்துவிட்டது. அதன் பின் தான் அவருக்கு பெரிய டவுட்டு.. தன் வாகனத்தை எப்படி வீட்டிற்கு கொண்டு போகப் போகிறேன் என்று..

இதே சிச்சுவேஷனை நம்ம ஊருல நினைச்சுப் பாருங்க.. ஒரே சிப்பு சிப்பா வரும்..


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.. இந்த விஸ்ராமிற்கு கத்தரிக்காய் தான் கிடைத்திருக்கு.  ஆனால் அதை வைத்தே இந்த மனிதர் கலக்குகிறார். தன் உணவகத்திற்காக வாங்கிய 20 கிலோ கத்தரிக்காயில் இருந்த இந்தக் கத்தரிக்காயைப் பார்க்க பிள்ளையார் மாதிரியே அவர் கண்களிற்கு பட்டிருக்கு. உடனே பலரையும் கூட்டிக் காண்பித்து பூஜைத் தட்டில் வைத்து ஆராதணையைத் தொடங்கிவிட்டார். இப்போது இந்தப் பிள்ளையாரைக் காண கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் அப்படியே இவர் உணவக வியாபாரமும் கூடியிருக்கு என்பது கொசுறுத் தகவல். செவ்வாய் கிரகத்தில் கூட ஒரு நாள் பிள்ளையாரைக் கண்டு பிடிப்பார்கள் எம்மவர்.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



இணையதளம் மூலம் இப்போதெல்லாம் பல திருமணங்கள் நிச்சயம் ஆகின்றது. அது என்ன மனிதர்களுக்கு மட்டும் தான் அப்படி நடக்கணுமா? எங்கள் மீன்களுக்கு என்ன குறை என்று லண்டன் Zoo கிளம்பியுள்ளது. மடகாஸ்கரில் இருக்கும் Mangarahara ஆற்றில் உள்ள ஒரு வகையான மீன்கள் முழுதாகவே அழிந்து விட்டது என்று கருதப்பட்டது. ஆனால் இந்த மீன்களில் இரண்டே இரண்டு லண்டன் Zooல் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு மீன்கள் உள்ளனவே அப்ப இனத்தை விருத்தி பண்ணிவிடலாமே என்று நீங்கள் நினைப்பது தெரிந்தது. அங்கே தான் சிக்கல் ஆரம்பம். இருக்கும் இரண்டு மீன்களும் ஆண் மீன்கள். Mangarahara cichlid என்ற இந்த வகையான மீன்கள் பார்ப்பதற்கு சகிக்க முடியாமல் மிகவும் அசிங்கமாக உள்ளது. இதனால் தான் எல்லா பெண் மீன்களும் செத்து விட்டனவோ தெரியவில்லை. அதனால் இந்த இரண்டு ஆண்களுக்கும் பெண் கேட்டு உலகில் உள்ள எல்லா மிருகக்காட்சி சாலைகளுக்கும் இவர்களின் இணையத்தளம் மூலம் செய்தி அனுப்பினர்.

ஒரே ஒரு பதில் வந்தது.. Berlin Zoo விலிரிந்து. ஆனால் அங்கேயும் கொடுமை. அங்கு இருந்த ஒரு மீனும் ஆண் மீனே.. உங்களுக்கு தெரிந்த இடத்தில் பெண் இருந்தால் சொல்லிவிடுங்கள்.. 3 ஆண்கள் பாவம்.


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

விக்ரம் திரைப்படத்தின் அறிமுகப் பாடல் இது. அந்தக் காலகட்டத்தில் ஒரு புது வகையான இசை, நடனம். முழுப் படமுமே புதிதாகத் தான் இருந்தது. அதனாலேயே பொருளாதார வெற்றி பெறவில்லை என்று நினைக்கிறேன். 

ஆனால் ராஜாவின் இசையும், வைரமுத்துவின் வரிகளும், கமலின் காந்தக் குரலும் உங்களை மயக்கும்.. அதுவும் இடை இடையே வரும் ஜானகி அம்மாவின் குரல் is the cherry on top.. 

இந்தப் பாடலைக் கேட்கும் போது அந்த நேரத்தில் தமிழகத்தில் வேரூன்றிக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை மனதில் வைத்து எழுதியது போல் என் மனதில் படும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 


ஆம்.. பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது...
ஹா.. பயிரென தினம் அது வளர்ந்தது..
யுத்தத்தால் அதோ அதோ விடியுது..
சத்தத்தால் அராஜகம் அழியுது..
ரத்தத்தால் அதோ தலை உருளுது..
சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது.. 

ம்ம்ம்.. பொறுப்பது புழுக்களின் இனமே..
ஆம் அழிப்பது புலிகளின் குணமே..
எட்டிப்போ இதோ புலி வருகுது
திட்டத்தால் அடாவடி ஒழியுது
சித்தத்தில் மனோபலம் வருகுது
மொத்தத்தில் அதோ பகை அழியுது..
துடுக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்.. 




:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

3 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

ரசிக்க (வியக்க) வைக்கும் தகவல்கள்...

முடிவில் - இருக்கலாம்... கமல் குரலில் அருமையான பாடல்...

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

கவியாழி said... Best Blogger Tips

கத்தரிக்காயை வைத்து நல்லப் பதிவு.வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget