Friday 13 May 2016

மால்குடி.. சேச்சே.. ராயப்பேட்டை நாட்கள்..




RK நாராயன் நினைவு தினம் இன்று.. #13May2001 

அவர் நினைவு வரும் போதெல்லாம் என் பால்யத்தை நினைப்பேன்.. 


ராயப்பேட்டை வீதிகளில்.. தெருவை மறைத்து.. மரக்கட்டை ஸ்டம்பு வைத்து கிரிக்கெட் ஆடுவோம். எப்போதோ ஒரு வாட்டி வரும் வாகனத்திற்கு வழி விட்டு ஆட்டம் தொடரும்.. அம்மாவிடம் உருண்டு பிரண்டு அழுது காசு வாங்கி.. தெருக் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்குவேன்.. காத்தாடி.. பாட்டில் ஓடு.. மாஞ்சா.. எதையும் விட்டதில்லை.. மாஞ்சாவிற்கு நாய்ப்பீ போட்டால் நல்லதுன்னு பெரியண்ணன்மார் சொல்ல அதையும் தேடி அள்ளியிருக்கோம்.. லைஃப் பாய்.. ஒளித்து பிடித்து.. செவன் ஸ்டோன்ஸ்.. இப்படி நீண்டன எங்கள் நாட்கள்.. No DS.. No Xbox.. No internet.. 

தெருவில் புழுதி பறக்க விளையாடிவிட்டு 6 மணிக்குள் வீடு வந்து.. மேல் கழுவி புத்தகம் எடுக்க வேண்டும். அது தான் அப்பாவின் சட்டம்.. இப்போது நினைக்க இனிக்கிறது.. 

10 வயதை நெருங்கத் தொடங்க பெண் பிள்ளை ரோட்டில் விளையாடக்கூடாது என தடை.. அதுக்கும் பணிவதில்லை.. அப்பா அப்படி போக.. நான் இப்படி போக வேண்டியது தான்.. பிறகு 
அப்பாவின் ராஜ்தூத் சத்தம் கேட்க.. அதை விட வேகமாக வீட்டிற்குள் ஓட்டம் எடுப்பேன்.. என் நாட்டாமை பொசிஷனை விட்டுக் கொடுக்க முடியாதில்லையா..?



ஹோலி, தீபாவளி, போகி.. தெருப்பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்தே கொண்டாடுவோம்.. 

என் குழந்தைகளுக்கு இப்படி ஒரு பால்யம் கிடைக்கவில்லையே என்று பல நாள் நினைத்து வருந்துகிறேன்.. அது ஒரு கனாக்காலம்.. 




0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget