Tuesday, 23 August 2011

கேபிள் சங்கருடன் ஒரு சந்திப்பு


சென்னை வரும் போதே, இம்முறை என் லிஸ்ட்டில் சங்கர் ஸாரின் சந்திப்பை போட்டு வைத்திருந்தேன். அலைபேசியில் அழைத்து விலாசம் வாங்கி, “சென்னையில் எனக்கு தெரியாத இடமேயில்லை” என்று மார் தட்டிய என் தம்பியை வாகன ஓட்டியாக்கிக் கொண்டு கிளம்பினேன். வண்டியில் ஏறி கொஞ்ச தூரம் போன பின்பே ”எங்கே போகிறோம்” என்றான். சைதாபேட்டை என்றவுடன் “அது எங்கே இருக்கு?” என்று சர்வ சாதாரணமாகக் கேட்டான் அவன்.   பிறகென்ன அங்கங்கே நிப்பாட்டி வழி கேட்டு ஒரு மாதிரி கேபில் ஸார் வீட்டைச் சென்றடைந்தோம். ஆனா என்ன பெரிய கொடுமை ஸார் என்றால், ஒரு டீக்கடையில் நிறுத்தி கேட்ட போது அங்கிருந்தவர் “மேற்கு சைதாபேட்டா, வெஸ்ட் சைதாபேட்டா” என்று கேட்டார்.

கஷ்டப்பட்டதற்கு பலனாக சங்கர் ஸார் வீட்டில் அவருடனான சந்திப்பு மிக இனிமையாக அமைந்தது. அறிமுகங்களின் பின் காபி பலகாரத்துடன் எங்கள் பேச்சு தொடர்ந்தது.

சினிமா துறையில் அவர் அனுபவங்களையும், அவர் எழுதிய புத்தகங்களையும் பற்றி மனம் திறந்து பேசினார். எந்த வித ஒழிவு மறைவில்லாமல் blog பற்றின நுனுக்கங்களை சொல்லிக்கொடுத்தார். என் கம்பனிக்கு ஒரு jingle ஒளிப்பதிவு செய்யவும் ஏற்பாடு செய்தார். நாட்டு நடப்புகளையும் அலசினோம். அவர் எழுதி வெளிவந்த பிரியானி என்ற கதை உருவான சம்பவத்தை வெகு சுவாரசியமாக சொன்னார். "நான் ஷர்மி வைரம்" கதையின் போக்கைப் பற்றியும் நிறையப் பேசினோம்.

குறிப்பாக அவர் சமூகத்தில் கொண்டிருக்கும் அக்கறையைக் கண்டு பெருமைப் படுகிறேன். தன் நாட்டு குடிமகன் ஒவ்வொருவரும் தன் அடிப்படை உரிமைக்காக மட்டும் குரல் கொடுத்தாலே நாடு முன்னேறிவிடும் என்று அவர் சொன்ன கருத்து என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. அவை எவ்வளவு சரியான, சக்தி வாய்ந்த வார்த்தைகள். மொத்தத்தில் அவர் பேச்சிலிருந்தும் பழகியவிதத்திலும் ஒரு நல்ல பண்பான சகோதரரின் நட்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 

9 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

suguna said... Best Blogger Tips

நீங்கள் சொல்வது உண்மை. Cable பழகுவதற்கு இனிமையான மனிதர். மேலும் நல்ல உதவி மனப்பான்மை உள்ளவர்.

சங்கர் நாராயண் @ Cable Sankar said... Best Blogger Tips

நன்றி ஷர்மி. ரொம்பவும் பாராட்டுகிறீர்கள். உங்கள் பிஸியான ஷெட்யூலில் என்னை வந்து சந்தித்தது ரொம்பவும் சந்தோஷம். முதன் முதலான சந்திப்பு போலில்லாம மிக இயல்பாக பழகிய உங்கள் அன்புக்கும் நன்றி.

வியபதி said... Best Blogger Tips

பேசியவற்றில் சில சுவையான விஷயங்களையாவது இக்கட்டுரையில் சேர்த்திருக்கலாமே. இன்னும் நன்றாக இருந்திருக்கும்

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

அப்படின்னா அந்த ஷர்மி நீங்கதானா...

கோவை கவிநேசன் said... Best Blogger Tips

நண்பர் கேபிளாரை பற்றி படிப்பதும்
சுகம்தான்.. நீங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்து பார்ப்பதர்க்கும் முழுத்தகுதி அவருக்கு இருக்கிறது..

அதுசரி.. அது என்ன ஒழிவு... ஒளிவுன்னுதானே வரனும்..

- பிழைத்திருத்தி@twitter.com

ஷர்மி said... Best Blogger Tips

@Philiosophy பிரபாகரன்
இந்தக் கேள்விக்கு எனக்கு இவ்வளவு நாளா அர்த்தம் புரியலே... அடப்பாவி ஏன் இந்தக் கொலைவெறி!

ஷர்மி said... Best Blogger Tips

@கோவை கவிநேசன்
ஐயா... மன்னிக்கனும். எனக்கு தமிழ் மீது பற்று பாசம் எல்லாம் உண்டு. ஆனால் தமிழ் மொழி இன்னமும் முழுதாகத் தெரியாது. பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொண்டு திருத்துங்கள் ஏற்றுக் கொள்கிறேன்.

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

இதானா மேடம் உங்க டக்கு...

ஷர்மி said... Best Blogger Tips

@Philosophy Prabhakaran
கேபில் சார் அந்த ஷர்மி பற்றிய மூன்று பாகங்கள் வெளியிட்ட பின் தான் எனக்கு அவரைப் பற்றித் தெரியும். அந்த ஷர்மி நான் இல்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget