தமிழ் சினிமாவின் அடுத்த கட்டம் என பலர் பல விடயங்களை சொன்னாலும் நான் மங்காத்தாவைத் தான் சொல்வேன். தன் பேத்தி வயதுடைய நாயகிகளுடன் ஆட்டம் போட்ட படி எண்ணிலடங்கா ஆட்களை அடித்து இறுதியில் ஒரு பெரிய வசனம் பேசி வணக்கம் சொல்லும் ஹீரோக்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இந்த 4 நாட்களுக்குள் எத்தனை விமர்சனங்கள். ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்ட படம் என்பதை எல்லோரும் பெரிதாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வெங்கட் பிரபு சொல்லி விட்டுத் தான் செய்கிறார். தமிழ் சினிமாவில் ஆதி முதல் இதையே தான் செய்து வந்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் உலக சினிமா பார்க்கும் எம் மக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்ததால் யாரும் உணரவில்லை. ஆங்கிலப் படங்களை எடுத்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற படி கொடுத்த வெங்கட் பிர்புவிற்கு வாழ்த்துக்கள்.
அஜித்... அஜித்... அஜித்....
என்னை என்றும் வியக்க வைத்த மனிதன். தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும், எப்படி அதைப் பெறலாம் என்பதில் தெளிவாக இருக்கும் நபர்.
தன் திரைப் பயனத்திலும் தெளிவாக இருப்பதில் மகிழ்ச்சி. 40 வயது மனிதராக ஒரு செல்ல தொப்பையுடனும் வரும் போது கூட அவரின் தேஜஸ் மங்கவில்லை, கவர்ச்சி குறையவில்லை. ஒவ்வொரு அசைவிலும் நான் தான் ஹீரோ என்று சொல்லத்தவரவில்லை. “தமிழகத்தின் George Clooney” என்ற பட்டத்தை அவர் ரசிகர்களின் சார்பில் வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆக்ஷன் கிங்
”சங்கர் குரு” கால்த்தில் இருந்தே நான் அர்ஜூன் விசிறி. சின்ன வயதில் நான் இருந்த இராயப்பேட்டை வீட்டின் அருகில் இருந்த சங்கர் ஆட்டோ மொபைல்சில் தான் அவர் தன் வெளிநாட்டு கார்களை செர்வீசுக்கு விடுவார். அவர் ஆளுயர நாயுடன் இரண்டு மூன்று முறை நேரில் வந்திருக்கிறார். அன்று தொடக்கம் இன்று வரை 100 முறை போலீஸ்காரராக அந்த விறைப்பும் முறைப்பும் குறையாமல் இருக்கிறார். கின்னஸ் புக்கில் போடலாமா என்று ஆராயத் தொடங்கியிருக்கிறேன், வேறு யாருக்கும் இது பற்றித் தெரிந்தால் நீங்களெ அதை செய்யுங்கள். தென்னியாந்தியாவிலிருந்து ஒருவருக்கு இந்தப் புகழ் கிடைத்தால் எங்களுக்கும் பெருமை தானே...
மொத்ததில் Anti-Hero கதையில் நடித்தும் கூட தங்கள் பெயரை நிலை நாட்டலாம் என்பதை நிறுபித்திருக்கும் இந்த இருவருக்கும் வாழ்த்துக்கள்.
0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
Post a Comment