Thursday 8 September 2011

வீட்டில் அம்மா செய்வது போல...



நான் லண்டன் வந்த புதிதில் சமையல் செய்வதற்கென்று அம்மா பார்சலில் மிளகாய் தூள், சரக்குத்தூள், கோப்பித்தூள் இன்னும் எத்தனையோ விதமான தூள்களெல்லாம் வீட்டிலேயே செய்து அனுப்பி வைப்பார். நாளாக நாளாக அம்மாவிற்கு ஏன் சிரமம், இங்கே கடைகளில் கிடைக்கிறதை வாங்குவோம் என்று வெளிக்கிட்டேன். பல வகையான நிறுவனங்கள் தயாரித்த பொருட்கள் விற்பனையில் இருந்தன. ஆண்டுகள் ஓட ஓட ஒவ்வொன்றாக பாவித்து மனம் கடைசியில் என்.எஸ்.ஆர் தயாரிப்புகளையே விரும்பியது. அவர்களின் அனைத்துப் பொருட்களுமே சென்னையில் தான் தயாரிக்கப்படுகிறது என்பதை உரிமையாளர் பிருந்தாபன் அண்ணா மூலம் தெரிய வந்த போது வியப்படைந்தேன். பிறகென்ன சென்னைப் பயணத்தில் பார்க்க வெண்டிய லிஸ்டில் என்.எஸ்.ஆர் தொழிற்சாலையையும் சேர்த்தாச்சு.



அங்கு சென்ற பின் தான் விளங்கியது ஏன் எனக்கு என்.எஸ்.ஆர் பொருட்களில் இவ்வளவு ஈர்ப்பென்று. வீட்டில் அம்மா எப்படி ஒவ்வொறு பொருளாக தேர்ந்தெடுத்து, சரியான பக்குவத்தில் வருத்து, காய வைத்து அரைக்கிறாரோ அதே போல் தான் அங்கும் நடக்கிறது. ஒன்றல்லா பல அம்மாக்கள். உற்பத்தி வேலை செய்யும் எல்லோருமே பெண்கள். ஞானி, ஜூடித் என்ற இரு பெண்களின் தலைமையிலேயே தொழில் நடக்கிறது. உற்பத்தி செய்வதும் வியாபாரம் செய்வதும் எல்லோராலும் முடியும் . ஆனால் அந்த இரு பெண்களும் பல தரக்கட்டுபாட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் பெற்று தாங்கள் எவ்வளவு சிறப்பாக தொழில் நடத்துகின்றோம் என்பதையும் காட்டிவிட்டார்கள்.



உற்பத்தியாகும் பொருட்கள் உலகில் தமிழ் மக்கள் வாழும் எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை வெறும் வியாபாரமாக இல்லாமல் தாயை பிரிந்து வேற்று நாட்டில் பல வேலைகளுக்கும் இடையில் சமையல் செய்யும் என்னைப் போன்றோர்களின் கவலையைத் தீர்த்து எங்கள் குடும்பங்களின் பசி தீர்க்கும் பணியாகவும் நினைக்கிறார்கள்.

அந்த தொழிற்சாலையில் இரட்டை அர்த்ததில் எழுதியிருந்த ஒரு வசனம் என்னை மிகவும் கவர்ந்தது - “எங்களுக்கு உணவு தரும் தொழிலிடத்தை சுத்தமாக பேணுவோம்”.

0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget