Friday, 30 September 2011

ஒரு குவளை தண்ணீர்ஒரு ஏஜென்சி ஒன்றின் மூலம் நான் லண்டனில் அரசாங்க தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்பாளராக வேலை செய்தேன். என்னை கிரிமினல் பிரிவில் வேலையில் அமர்த்தியிருந்தார்கள். நீதிமன்ற வழக்குகள், காவல் நிலையத்தில் பிடிபட்டதும் நடக்கும் விசாரணை, Probation Officeல் நடக்கும் நேர்காணல் என்பவற்றில் பங்கெடுப்பேன்.


இப்படியான காலத்தில் 2003ம் ஆண்டு ஒரு நாள் அழைத்து ஒரு கொலை வழக்கில் என்னை பணித்தார்கள். அப்போது அது மிகவும் பிரபலமாக இருந்த வழக்கு. அந்த வழக்கில் பல முறை கத்தியால் குத்தியவரும் தமிழர் குத்துப்பட்டு இறந்தவரும் தமிழர். மறுநாள் காலை பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு 10 மணிக்கு சென்றுவிடுங்கள் என்ற போது தான் தூக்கி வாரிப்போட்டது.

பெல்மார்ஷ் சிறை என்பது இங்கிலாந்திலேயே மிகவும் கொடூரமான குற்றங்கள் செய்பவர்களை அடைக்கும் இடம். கொல மற்றும் பாலியல் பலாத்கார குற்றங்களை புரிபவர்களும், தீவிரவாதிகளும் அடைக்கப்படும் இடம். இரவு முழுதும் துக்கமில்லை. அடிக்கடி எழும்பி நேரம் பார்த்துக் கொண்டே இருந்தேன். பயமறியாதவன் இல்லை வீரன், தன் மனதில் எழும் பயத்தை வெளிக்காட்டாதவன் தான் வீரன் என்று மனதைத் தேற்றிக் கொண்டு மறுநாள் கோட்டு சூட்டு போட்டு நல்ல வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பிட்டேன். 

அங்கு போய் பார்க்கிங்கில் காரை விட்டு விட்டு சிறைச்சாலையை நோக்கி நடக்க, கால்கள் உண்மையிலேயே துவளத் துவங்கியது. பிறந்த வீர வல்வை மண்ணிற்கே இழுக்கு என்று மனதை ஒப்பேத்தி உள்ளே சென்றாயிற்று.

முதல் கட்ட சோதணை ஆரம்பித்தது. கை ரேகை பதிவு, கைப்பை சோதணை எல்லாம் முடிந்ததும் மெட்டல் டிடக்டர் சோதணையில் அது “டீக்..டீக்” என்று ஒலி எழுப்பி விட்டது. கடைசியில் தாலிக்கொடியைக் கூட கழட்டி வைத்தாப் பிறகு தான் உள்ளே போக விட்டார்கள். முடிந்ததடா தொல்லை என்று பார்த்தால், ஒரு குண்டான கறுப்பு நிற காவலாளியுடன் என்னைப் போகச் சொன்னார்கள். ஆள் அரவமில்லாத பல திருப்பங்களைக் கொண்ட நீண்ட கோரிடாரின் முடிவில் ஒரு கதவு. ஆனால் மீண்டும் சோதணை, அதைத் தாண்டி வெளியேறி ஒரு திறந்த வெளியைக் கடந்ததும், மீண்டும் சோதணை. வேறு ஆளிடம் கை மாற்றப் பட்டேன். போகும் இடமெல்லாம் மனிதர்களே இல்லை.

எங்கோ உள்ளே உள்ளே செல்வது போல் பிரம்மை. இன்னும் ஒரு முறை கை மாற்றப்பட்டு சொதணை முடிந்து மீண்டும் கை மாற்றப் பட்ட பின்  ஒரு வழியாக நேர்காணல் அறைக்குள் என்னை அனுமதிதார்கள். சத்தியமாய் சொல்கிறேன், ஒரு கொலைகாரனைப் பார்த்து நான் அன்று அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் என்றும் யாரும் அடைந்திருப்பார்கள் என நினைக்கவில்லை.

அறைக்கதவை சாத்தும் போது காவலாளி் “ஒரு மணி நேரம் கதவு பூட்டியிருக்கும் ஏதும் பிரச்சிணை என்றால் அறையில் பல இடங்களில் இருக்கும் அபாய மணியை அழுத்தலாம். உங்களுக்கு வேறு எதாவது வேண்டுமா?” எனக் கேட்டார். தொண்டையைச் செறுமிய படி “Can I have a cup of water,please?” என்றேன். என்னை வினோதமாய் பார்த்த படி சென்றார். வந்திருந்த வக்கீலும் ஒரு மாதிரிப் பார்த்தார். என்னடா ஆச்சு இவர்களுக்கென்று நினைத்துக் கொண்டேன். 2 நிமிடங்களில் ஒரு கப்பில் தண்ணீரோடு வந்த காவலாளி, அதைத் தந்த படி சொன்னார் “Very strange request, A CUP OF WATER". அப்போது தான் கவனித்தேன் தேநீர் கோப்பையில் தண்ணீர் வந்ததை.

Should have been "A glass of Water" not a "Cup of Water".....பிகு: ஏதோ மனசுல ரொம்ப நாளா யாரிடமாவது சொல்லனும்னு பூட்டி வைச்சது. இவ்வளவு நாளா ஈகோ விடலை...

8 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

மாய உலகம் said... Best Blogger Tips

தன் மனதில் எழும் பயத்தை வெளிக்காட்டாதவன் தான் வீரன்//

எனக்கு மிகவும் பிடித்த வசனம்.. குருதி புனலில் கூட கமலஹாசன் அவர்கள் சொல்லியிருப்பார்...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

மேடம் உங்களுடைய பார்ப்பதில் பிடித்தது பகுதியில் நான் இருப்பதை பார்த்ததும் ஆச்சர்யம் + அதிர்ச்சி.... நன்றி...

மாய உலகம் said... Best Blogger Tips

தேநீர் கோப்பை (கப் ஆஃப் வாட்டர்)தண்ணீர் அந்த அளவுக்கு தேவை பட்டிருக்குமா.. பயத்தில் தொண்டை வரண்டு போயிவிட்டதோ என காவலாளி நினைத்துவிட்டார் போலும்... உண்மையில் நீங்கள் உள்ளே சோதனைக்கு உள்ளாகி உள்ளே சென்ற விசயத்தை படிக்கும்போது.. உள்ளுக்குள் பயம் நெருடியது... ஆனால் உன்மையில் ஒரு கொலையாளியை கொடுராமான கொலையாளிகள் அடைக்கும் சிறையில் சந்தித்த விசயம் என்பது சாதாரண விசயமே அல்ல...

மாய உலகம் said... Best Blogger Tips

ஒரு கொலைகாரனைப் பார்த்து நான் அன்று அடைந்த நிம்மதியும் சந்தோஷமும் என்றும் யாரும் அடைந்திருப்பார்கள் என நினைக்கவில்லை. //

நேர்காணலும் பதிவில் இருக்கும் என எதிர்பார்த்தேன்... நன்றி

ஷர்மி said... Best Blogger Tips

ராஜேஷ், நீங்களும் நம்ம ஆள் தான். நான் பெரிய கமல் ரசிகை.
உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.

ஷர்மி said... Best Blogger Tips

//மேடம் உங்களுடைய பார்ப்பதில் பிடித்தது பகுதியில் நான் இருப்பதை பார்த்ததும் ஆச்சர்யம் + அதிர்ச்சி...//
நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்...

ஷர்மி said... Best Blogger Tips

ராஜேஷ், நேர்காணலை வெளியிட முடியாது. சட்ட விரோதம்.

ரிஷபன் said... Best Blogger Tips

அவங்களுக்கே தண்ணி காட்டிட்டீங்க..

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget