Wednesday, 28 September 2011

மாயக்கண்ணாடி - 28/09/2011




அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



கூகுள் தனது 13வது பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறது. வழமை போல் தனது சின்னத்தினை doodling  செய்யாமல், தாங்கள் எல்லோர் வீடுகளிலும் சகஜமாக உலவுவதை சித்தரிக்கும் வகையாக, ஒரு வீட்டில் நடக்கும் பார்ட்டியில் தங்களை உள்ளடக்கியுள்ளார்கள். எனக்கு Google Doodles என்றால் மிகவும் பிடிக்கும். மிகுந்த ரசணையுடனும் நவீனமாகவும் இருக்கும்.
இதோ உங்களுக்காக...


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::




வர்ணா என்ற பல்காரியன் நகரசபை மேயர் பதவிக்கு மார்க்கோ எனும் கழுதை ஒன்றை எதிர் கட்சியினர் கழம் இறக்கியுள்ளனர். “இப்போது இருக்கும் மேயர் போல் மார்க்கோ போய் பேசமாட்டான், மக்கள் பணத்தினைக் கழவாட மாட்டான், தனக்கு இடப்படும் பணிகளை சரியாக செய்து முடிப்பான். நீங்களே சொல்லுங்கள் மார்க்கோவைத் தேர்ந்தெடுப்பீர்களா அல்லது இந்த மேயரையே திருப்பித் தேர்ந்தெடுப்பீர்களா?” என்று பிரச்சாரம் செய்கிறார்கள். நம்மூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்த மிருகத்தை நிறுத்துவது? என்ற கேள்விக்கு ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். ஆனால் அந்த தைரியம் யாருக்குத் தான் இருக்கு...

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::



Californiaவில் இருக்கும் Apple  தலைமையகத்திற்கு அக்டோபர் 4ம் திகதி விருந்துக்கு வருமாறு அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்களுக்கு பறந்த வண்ணம் உள்ளது. "Let's talk iPhone." என்ற சிறிய தலைப்பே கொடுக்கப்பட்டுள்ளது. அன்று தான் அனைவரும் ஆவாலுடன் எதிர்பார்த்திருக்கும் iPhone 5 வெளியிடிகிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் மறுபுறம் touch screenல் ஏதோ கோளாறு, iPhone வெளியீட்டில் தாமதம் என்ற செய்தியும் உளாவுகிறது. விருந்து நடைபெறப் போவது உண்மை. அதனால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ( iPhone5  வந்துவிட்டால் உடனே வாங்குவதற்காக, இப்பவே கணவருக்கு ஐஸ் வைக்கத்துவங்கிவிட்டேன். இதை அவரிடம் சொல்லி போட்டுக்கொடுத்து விடாதீர்கள்.) 

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

ரிஷபன் said... Best Blogger Tips

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்த மிருகத்தை நிறுத்துவது?

மிருகங்கள் ஆட்சேபிக்கும்.. அதனால் வேண்டாம்.

iPhone5 கிடைக்க நல்வாழ்த்துகள்..

ஷர்மி said... Best Blogger Tips

உங்கள் தொடர் பின்னூட்டங்களுக்கு, நன்றி ரிஷபன்...

மாய உலகம் said... Best Blogger Tips

நம்மூர் அரசியல்வாதிகளுக்கு எதிராக எந்த மிருகத்தை நிறுத்துவது? //

மிருகங்கள் கோவித்துக்கொள்ளும்..

மாய உலகம் said... Best Blogger Tips

ஐபோனுக்காக ஐஸ் வச்சுட்டீங்களா... வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget