Wednesday 16 November 2011

உலகின் சக்தி வாய்ந்த 20 மனிதர்கள்


உலகையே தங்கள் கை அசைவினால் ஆட்டிவிடக் கூடிய சக்தி வாய்ந்த மனிதர்களின் தர வரிசை Forbes பத்திரிக்கையினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக...


1. Barack Obama
அமெரிக்க ஜனாதிபதி, வயது 50. தனிப்பட்ட முறையில் அவர் பதிவியில் பிரச்சிணைகளும் மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவாரா என்ற பூசல்களும் இருந்த போதும் உலகிலெயே பெரிய இராணுவத்தின் தலைவர் என்ற முறையில் இவருக்கே முதலிடம்.


2. Vladimir Putin
ரஷ்ய பிரதமர். வயது 59.போகின்ற போக்கைப் பார்த்தால் 2024 வரை ரஷ்யாவிற்கு இவர் தான் பிரதமர் என்பது உறுதியாகிறது. எற்கனவே 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இவர் இப்போது யூரோப் ஒண்றியத்தைப் படுத்தும் பாட்டிற்காக இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறார்.

3. Hu Jintao

சீன அரசாங்கத் தலைவர். அந்நாட்டு கமியூனிஸ்ட் கட்சித் தலைவர். வயது 68. சீனா அண்மைக் காலத்தில் பண பலத்திலும் இராணுவ பலத்திலும் வளர்ந்திருக்கும் வளர்ச்சி எல்லோரும் அறிந்ததே.

4. Angela Merkel

உலகின் சக்தி வாய்ந்த பெண். ஜெர்மனி அரசாங்க அதிபர். 57 வயது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மறைமுகத் தலைவராகக் கருதப்படுகிறார். அண்மையில் பிராண்ஸ் நாட்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தங்கள் நாட்டுத் தலைவரை நம்புவதாக 33%வர்க்ளே வாக்களித்த நிலையில் ஜெர்மனிய தலைவரை நம்புவதாக 46% பேர் வாக்களித்துள்ளனர்.

5. Bill Gates

பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணைத் தலைவர். 56 வயது. உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற முறையில் இவருக்கு இந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை விநியோகித்து தன் வாழ் நாள் காலத்திற்குள் தொற்று நோய்ப் பரவுதலை ஒழித்து இல்லமால் செய்யும் இவர் முயற்சியால் இங்கு இடம் பெற்றிருக்கிறார்.

6. Abdullah bin Abdulaziz al Saud

சவுதி அரேபியாவின் அரசர். 87 வயது. உலகில் எஞ்சியிருக்கும் பாரம்பரிய அரச பரம்பரையில் வந்தவர்களில் ஒருவர். பூமியில் இருக்கும் எண்ணைக் கிணறுகளில் 20% சவுதியில் தான் உள்ளது. பிறகு இவர் பலத்தைப் பற்றி சொல்லவா வேண்டும்.

  
7. Benedict XVI

போப் ஆண்டவர். உலகின் ஆறில் ஒரு பங்கு ஜனத் தொகையின் மத குரு. கிட்டத்தட்ட 1.2 பில்லியன் மக்கள். உலகில் கருக்கலைப்பு, ஓரினச் சேர்க்கை, பெண் பூசாரிகள் போன்ற அனைத்து சர்ச்சைக்கு உரிய விடயங்களிலும் இறுதியான முடிவு இவருடையது தான்.

8. Ben S. Bernanke

U.S. Federal Reserve வங்கியின் தலைவர். வயது 57.  தற்காலத்து நிதி நெருக்கடியை லாவகமாக கையாண்டு வருவதால் அமெரிக்கர்கள் அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளார். கூடிய சீக்கிரமே நாட்டின் கடன்களை பரிசீலிப்பதன் மூலம் வட்டி வீதங்களையும் குறைத்து விடலாம் என்று நம்பிக்கை தந்துள்ளார்.

9. Mark Zuckerberg

CEO, Facebook. வயது 27. உலகின் பல உலவுத் துறைகள் காலம் காலமாக செய்ய முடியாததை மார்க் ஏழே வருடங்களுக்குள் செய்து விட்டார். 800 மில்லியன் மக்கள் - 10% உலக சனத்தொகை -  என்ன நினைக்கிறார்கள், வாசிக்கிறார்கள், கேட்கிறார்கள், யாரைத் தெரியும், எங்கு இருக்கிறார்கள், எங்கு போகிறார்கள் இன்னும் பலப் பல விஷயங்கள் அவர் விரல் நுனியில்.

10. David Cameron

ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதம மந்திரி. வயது 45. இவர் ஆட்சியின் கீழ் நேரடியாக நான் இருப்பதாலோ என்னவோ ஏன் இவருக்கு இந்த இடத்தைக் கொடுத்தார்கள் என்று விளங்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்...
நம் இந்தியத் தலைவர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். எத்தனையாவது என்று அடுத்த இடுகையில் பார்க்கவும்.

தொடரும்.........





4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

sugi said... Best Blogger Tips

Hahahaha! 10 வது இடத்தைப் பிடித்தவர் பற்றி நீங்கள் கூறியுள்ளக் கருத்து தான் டாப்பு!

sugi said... Best Blogger Tips

11 மற்றும் 19 வது இடங்கள் ஆச்சிரியங்கள்!

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நீ முந்திரிக் கொட்டை என்று நிரூபித்து விட்டாய் சுகி...

மகேந்திரன் said... Best Blogger Tips

உலகின் சக்திவாய்ந்த மனிதர்களின்
ஆளுமைகளை அழகாய் சொல்லியிருக்கீங்க சகோதரி...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget