Sunday, 27 November 2011

லண்டன் திரையில் “மயக்கம் என்ன?”“மயக்கம் என்ன” திரைப்படத்தின் நேரடி லண்டன் ரிப்போர்ட்...

மயக்கம் என்ன? திரைப்படம் ஓடும் தியேட்டரின் வலைத்தளத்திற்குச் சென்று படத்தின் Age Certificateஐ முதலில் பார்த்துக் கொண்டேன். வழமை போல் 12A தான். 8:30 படத்திற்கு 7:45ற்கே போய்ச் சேர்ந்து விட்டோம். சீக்கிரம் போய் விட்டோமே என்று கவலைப் பட்டுக்கொண்டு அரங்கிற்குள் போனால் ஏற்கனவே பாதி நிரம்பியிருந்தது. 8 மணிக்குள் அரங்கமே நிறம்பிவிட்டது. படத்தை ஆரம்பிக்கச் சொல்லி ஒரே விசில் சத்தம். வந்திருந்தவர்கள் நடந்ததைப் பார்த்தால் தமிழ் சினிமாவிற்கே இனி தடை சொல்லிவிடுவார்களோ என்றிருந்தது. ஒரு வழியாக சரியான நேரத்திற்கு படம் துவங்கிவிட்டது. House Full என்பார்கள். ஆனால் உட்கார ஒரு இருக்கை கூட இல்லாமல் நிரம்பியதை பல ஆண்டுகள் கழித்துப் பார்த்தேன்.

கதையைப் பற்றி எல்லாத் தளத்திலும் அலசி ஆராய்ந்து விட்டார்கள். அதனால் நான் எதுவும் சொல்லப் போவதில்லை. பாடல்கள் அனைத்தையும் அண்ணன் தம்பி இருவருமே எழுதியிருக்கிறார்கள். நல்ல முயற்சி. வரிகளும் நன்றாகவே வந்திருக்கு. வழமை போல் பிரகாஷின் இசையில் பாடல்கள் எல்லாம் இனிமை. ராம்ஜியின் ஒளிப்பதிவு மனதை என்னமோ செய்து விட்டது. குறிப்பாக பாட்டியை தனுஷ் படம் பிடிக்கும் இடம்... காவியமாக அமைந்து விட்டது. இயக்குனருக்கு ஒரு சபாஷ்.

 


குருவி தலையில் பனங்காயாய் இப்படியொரு கனமான பாத்திரத்தை ரிச்சாவின் தலையில் ஏற்றியிருக்கும் செல்வராகவனின் நம்பிக்கை வீண் போகவில்லை. தேர்ந்த நடிகையைப் போல் எளிதாக செய்து முடித்து விட்டார். வெறும் பார்பி டாலாக இல்லாமல் தமிழ் சினிமாவிற்கு நல்ல ஒரு நடிகையின் வருகை என சந்தோஷப்படலாம். அதிலும் அழகிலும் சலைத்தவரில்லை.


இவ்வளவு அழகான கதையை எழுதிய இயக்குனர், அப்படியே கொஞ்சம் திரைக்கதையையும் வேகப்படுத்தியிருந்தால் இன்னும் எல்லாத் தர மக்களின் ரசணையையும் திருப்திப் படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பதை மீண்டும் மக்கள் நினைவிற்குக் கொண்டு வந்ததற்காக செல்வராகவன் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.  

“மயக்கம் என்ன?” - சரக்குப் பத்தாது...


16 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

வை.கோபாலகிருஷ்ணன் said... Best Blogger Tips

Respected Madam,

////ஷர்மி said...
வை.கோபாலகிருஷ்ணன் said...
//நேற்று 24.11.2011 மாலை, நாம் இருவரும் ஒருவரின் ஓய்வுபெறும் வழியனுப்புவிழாவில் சந்தித்தோம். எனக்கு அப்போதே தெரியும். நாளை அது சம்பந்தமாக ஒரு கதை தங்களிடமிருந்து கட்டாயம் வரும் என்று. அது போலவே வந்து விட்டதே!;)))))//

சின்ன சின்ன சம்பவங்களையும் இப்படி சுவாரஸ்யமான கதையாக்கும் உங்கள் திறமை, என்னைப் பொறாமைப் பட வைக்கிறது. உங்கள் ஒவ்வொரு கதையும் மனதைப் பிசைகிற மாதிரியே இருக்கும். உங்கள் எல்லாக் கதைகளையும் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடலாமே... ப்ளீஸ்
November 26, 2011 8:21 PM////
தங்களின் மேற்படி பின்னூட்டம் ஒன்றை என் அருமை நண்பர் திரு. ரிஷபன் அவர்களின் சமீபத்தியப்பதிவு ஒன்றினில் [25.11.2011 அன்று] பார்த்தேன்.

தங்களுக்கு இந்த கீழ்க்கண்ட லிங்குகள் உபயோகமாக இருக்ககூடும்.

மேலும் பல தகவல்கள் அளிக்கக்கூடும்.

பிரபல எழுத்தாளரும் என் அருமை நண்பருமான திரு.ரிஷபன் அவர்கள் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள தங்களுக்கு உதவக்கூடும்.

http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html

http://gopu1949.blogspot.com/2011/07/4.html

http://gopu1949.blogspot.com/2011/07/3.html

http://gopu1949.blogspot.com/2011/07/of-2011.html

http://gopu1949.blogspot.com/2011/03/blog-post.html

http://gopu1949.blogspot.com/2011/11/happy-happy.html

http://gopu1949.blogspot.com/2011/11/blog-post.html

நான் இன்று உங்கள் வலைப்பூவின் Follower ஆக என்னை இணைத்துக் கொண்டுள்ளேன்.

மேற்படி லிங்க்களை பார்த்துவிட்டு தாங்கள் பின்னூட்டம் கொடுத்தால் மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன்,
வை. கோபாலகிருஷ்ணன்
e-mail: valambal@gmail.com

ஷர்மி said... Best Blogger Tips

என் அறியாமையைப் போக்கியதற்கு நன்றி ஐயா. எனக்கு ரிஷபன் சாரை வலைத் தளம் மூலமே தெரியும். அவரின் கதைகள் எப்போதுமே என் மனதைக் கனக்கச் செய்துவிடும். ஏதோ அவரி உக்கப் படுத்துகிறேன் என்று நினைத்து விட்டேன். தவறைத் திருத்தியதற்கு நன்றி...

ஆகாயமனிதன்.. said... Best Blogger Tips

ரொம்ப சுருக்கமா ?
ஆனா, நல்லா இருக்கு !

ரிஷபன் said... Best Blogger Tips

அடடா.. என்னைப் பற்றி இப்படி ஓவராய் பில்டப் செய்து.. கடவுளே.. தயவு செய்து என்னை ஒதுக்கி வைக்காதீர்கள்.. கிரீடம் சூட்டி.
நான் கற்றுக்குட்டி தான். என்னைப் பற்றி எந்த விவரமும் பகிர்ந்து கொள்ளாமல் பதிவுகளைப் போடுவதே என் எழுத்தின் மீதான உண்மையான விமர்சனம் கிடைக்கும்.. என்னை வளர்த்துக் கொள்ள உதவும் என்கிற ஆசையில் தான் .

நான் இப்பவும் உங்க நண்பன் தானே ஷர்மி..?!

மாலதி said... Best Blogger Tips

மிகவும் சிறந்த முறையில் பதிவு செய்துலீர்கள் பாராட்டுகள் நன்றி

மகேந்திரன் said... Best Blogger Tips

திரைப்படம் வெற்றி பெறட்டும்....

ஷர்மி said... Best Blogger Tips

@ஆகாயமனிதன்..சுருக்கமாய் இருந்ததனால் தான் நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே...

ஷர்மி said... Best Blogger Tips

@ரிஷபன்ஏன்னு தெரியலை சார். உங்களை என் வயதொத்தவர் என்று நினைத்து "வாடா, போடா, தம்பி" என்றெல்லாம் சொல்லி விட்டேனே என்று தான் மன வருத்தம். மற்ற படி உங்களை நண்பராய் அடைவதற்கு நான் தான் பாக்கியசாலி ரிஷபன் சார்!

ஷர்மி said... Best Blogger Tips

@மாலதி
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தோழி...

ஷர்மி said... Best Blogger Tips

@மகேந்திரன்
நானும் அதைத் தான் அண்ணா விரும்புகிறேன். ஆனால் தமிழ்நாட்டில் பி,சி செண்டர்களில் ஓடாத படம் வெற்றி பெற்றதாக ஆகுமா என்று தெரியவில்லை?

மதுமதி said... Best Blogger Tips

ந்ல்ல பதிவுதான் ..பிடித்தது.

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

// சரக்குப் பத்தாது //

ஆஹா வணக்கத்துக்குரிய வசந்தா மேடம்ன்னு நினைச்சா நீங்க ராவா அடிக்கிற ரங்கீலாவா இருப்பீங்க போல...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

பின்னூட்டங்களில் அழகாய் ஒரு கதை இருக்கிறது..

ஷர்மி said... Best Blogger Tips

@மதுமதி
உங்களுக்குப் பிடித்ததில் சந்தோஷம். அடிக்கடி வாங்க பேசலாம்...

ஷர்மி said... Best Blogger Tips

@Philosophy Prabhakaran
ஒயின் ஷாப் நடத்தி நடத்தி அதே எண்ணம் தான் எப்போதும்...

ஷர்மி said... Best Blogger Tips

@Philosophy Prabhakaran
//பின்னூட்டங்களில் அழகாய் ஒரு கதை இருக்கிறது..//

இப்போ உங்க சான்ஸாக்கும்?

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget