Tuesday, 24 January 2012

மாயக்கண்ணாடி - 24/01/2012

அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக் கிட்டு கொடுக்கும் என்று சொல்வார்கள் இல்லையா, அது கட்டடத் தொழிலாளி Gareth மற்றும் அவர் மனைவி Catherine கதையில் உண்மையாகிவிட்டது.. யூரோ நாடுகள் அனைத்திலும் ஒன்றாக விளையாடப்படும் லாட்டரி டிக்கட்டில் இந்த வாரத்திற்கான சிறப்பு பம்பர் பரிசினை வென்றிருக்கிறார்கள். இந்திய மதிப்பில் 320 கோடி ரூபாய். ஒரே நாளில் பணக்காரர் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள், இது ஒரே நாளில் குபேரன் ஆன கதை.

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


கடவுள் இருக்காரா இல்லையா.. பேய்கள் இருக்குதா இல்லையா.. இப்படி பலர் சந்தேகமாக கேள்விகள் எழுப்பிக் கொண்டு இருந்தாலும், உலகில் பலர் இன்னும் இவை எல்லாம் இருப்பதாகவே நம்புகின்றனர். ஸ்காட்லாந்தில் உள்ள பழமை வாய்ந்த சர்ச் ஒன்றில் சீன நாட்டு சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோவில் ஒரு ஆவி தெரிவதாகவும் அது மறைந்த இளவரசி டயானா எனவும் சொல்லப்படுகிறது. இதை அவர்கள் பிரபலமான ஆவிகளை பற்றி ஆராயும் Michael Howan இடம் சமர்ப்பித்து உள்ளனர். அவரும் உண்மை என்றே சொல்கிறார். எங்கே நீங்களும் பார்த்து சொல்லுங்கள் உங்களுக்கு என்ன தெரிகிறது என்று..


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பி விளையாடும் பொம்மைகளை வைத்தே விஞ்ஞான ரீதியாக உடலின் அனாடமியை எளிதாக சொல்லிக் கொடுக்க முடியும் என்று சொல்லிக் கொண்டு Jason Freeny என்ற கலைஞர் இப்படியான பொம்மைகளை செய்து விற்பனை செய்கிறார். ஒரு பக்கம் பார்க்க சாதாரண மரியோ அல்லது கிட்டி போல் இருக்கும் பொம்மைகளை திருப்பிப் பார்த்தால் மறுபக்கம் உள்ளே இருக்கும் உடல் கூறுகள் அனைத்தும் தெரியும். பொம்மைகளை விட அவற்றின் விலை தான் மலைப்பாக இருக்குது. வெறும் £1300 தாங்க. நம்மூர் விலையில் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய். பொம்மையைப் பார்த்ததும் சிறுவர்களுக்கு பேய்க் கனவுகள் வருதோ இல்லையோ, விலையைக் கேட்டதும் பெற்றோர்களுக்கு வந்து விடும். 


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழச்சியைப் போல் இந்தப் பாட்டி moose என்ற பெரிய கொம்புகளைக் கொண்ட மறை ஒன்றை மண்வெட்டியால் அடித்து துறத்தியிருக்கிறார்.


பார்க்க சாதுவாக இருக்கும் இந்த மிருகங்கள் கோபம் கொண்டு தாக்கும் போது மிகவும் மூர்க்கமாக இருக்கும். இதன் கொம்புகளிலும், குளம்புகளிலும் சிக்கி உயிரை இழக்க நேரிடும். தங்கள் நாய்களுடன் காலார நடந்து கொண்டிருந்த 85 வயதான இந்தத் தம்பதிகளுக்கு மேல் ஒரு மூஸ் திடீரென்று தக்கியிருக்கு. கணவர் George அடிபட்டு கீழே விழுந்தததைக் கண்ட Dorothyக்கு பொறுக்க முடியாமல் பக்கத்தில் இருந்த மண்வெட்டியை எடுத்து அந்த மிருகத்தை சராமாரியாகத் தாக்கியிருக்கிறார். வலி தாளாமல் மூஸ் திரும்பி காட்டிற்குள் ஓடிவிட்டது. 85 வயதான போதும் தன் கணவனுக்கு ஒரு கெடுதல் என்றதும் பொங்கி எழும் அந்தக் கோபம் உண்மையில் பாசத்தின்.. காதலின்.. வெளிப்பாடு. 85 வயதில் நான் உயிருடன் இருந்தால் என் உடலில் இப்படி சக்தி கொடு தாயே...


:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

6 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

ரிஷபன் said... Best Blogger Tips

85 வயதான போதும் தன் கணவனுக்கு ஒரு கெடுதல் என்றதும் பொங்கி எழும் அந்தக் கோபம் உண்மையில் பாசத்தின்.. காதலின்.. வெளிப்பாடு.

தன் உரிமையில் பங்கு போட வந்து விட்டதாய் வந்த கோபமாய்க் கூட இருக்கலாம்!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

மாயக்கண்ணாடி நிறைவாய் பல்சுவைப்பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

கோவை நேரம் said... Best Blogger Tips

முன்னவருக்கு அதிர்ஷ்டம் ....பின்னவருக்கு துரதிர்ஷ்டம் ..ஹி..ஹி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said... Best Blogger Tips

அது சரி..85 வயசு பாட்டி செஞ்சா..எல்லா ஊர்லேயும் செய்வாங்க..தாத்தாக்கள் செய்வார்களா?

நிலாமகள் said... Best Blogger Tips

எல்லாமே ந‌ல்லாயிருக்கு... ப‌திவ‌ர்க‌ளின் க‌லாய்ப்பும்.

சுவடுகள் said... Best Blogger Tips

மூஸ் என்று இன்றுதான் நான் கேள்விப்படுகிறேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget