Monday, 23 January 2012

லண்டன் திரையில் “நண்பன்”


நண்பன் திரைப்படத்தின் நேரடி லண்டன் ரிப்போர்ட்..


13ம் திகதி வெள்ளிக்கிழமை படம் வெளியானது.. அன்றே பார்த்து விடுவது என்று டிக்கட் புக் பண்ணியாச்சு.. வழக்கம் போல் 12A சேர்ட்டிபிக்கேட்.. வெள்ளி மாலை என்பதால் கூட்டம் அலைமோதும் அதனால் சீக்கிரமே போய் நல்ல சீட் எடுக்கணும்னு போனோம்.. ஆனால் அங்கே கூட்டமே இல்லை. அரங்கு பாதி தான் நிறம்பியது. முதல் நாள் என்பதால் அப்படியோ தெரியவில்லை. பின் அடுத்தடுத்த நாள் சென்றவர்களும் அப்படியே தான் சொன்னார்கள். பாதிக்கு மேல் அரங்கு நிறம்பினாலே வெற்றி தானே.. அதுவும் அந்த நேரமே வேட்டை படமும் ஓடிக்கொண்டிருந்ததால் பட்ஜெட்டுக்குள் வாழும் மக்கள் ஏதாவது ஒன்றிற்குத் தான் போய் இருப்பார்கள். அதுவும் ஒரு காரணம்..


படத்தில் ஒரு பாடல் காட்சியில் வரும் படங்களைப் போட்டு விளம்பரம் செய்த்தாலும் ஹிந்தியில் படத்திற்கு பெயர் “3 இடியட்ஸ்” என்பதாலும் எதிர்பார்த்துப் போன கதை இல்லை. ஹிந்திப் படம் பார்க்கவில்லை என்பதால் கதை தெரியாது. அதனாலேயே படத்தை நன்றாக ரசித்தேன். படம் முழுக்க சத்யனின் ஆட்சி தான்.. நல்ல தேர்ந்த நடிப்பு. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. விஜயைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தோளில் ஒரு பையைப் போட்டுக் கொண்டு வந்து இலியாணாவுடன் ஆட்டம் போடுகிறார். ஸ்ரீகாந்த்தும் சுமார் ரகம். ஜீவாவுக்கு உண்மையிலே யே நல்ல மனசு. தன் ஹீரோ அந்தஸ்த்தை மறந்து, கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப அடக்கி வாசித்திருக்கிறார்.


முதலாவது ஹீரோ சத்யன் என்றால் ரெண்டாவது ஹீரோ சத்யராஜ்.. அவர் காக்கா கூட்டை கொண்டு வந்து கதை சொல்வது தொடங்கி கொட்டுற மழைல விஜய்க்கு பேனா கொடுக்குற வரைக்கும் அவர் வர்ற பிரேம்ல எல்லாம் நம்ம கண் வேறு யாரயும் பார்க்காமல் செஞ்சுடறார்.. தன் வயதிற்கு ஏற்ப பாத்திரங்களை தேர்ந்தெடுத்து மிளிரும் இவருக்கு தென்னக அமதாப் பச்சன் விருதை வழங்கி பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.


இவ்வளவு சொல்லிட்டு நம்ம இலியாணாவப் பத்தி சொல்லாமல் போகலாமா? உடம்பில் 1mm கூட extra கொழுப்பில்லாத இவரைப் பார்த்து ஆண், பெண் பேதமின்றி எல்லோரும் பொறாமைப்பட வேண்டும். அப்படி ஒரு உடல் வாகு.. ஆனால் நம்மாளுக எல்லாம் சப்பித் துப்பின மாங்கொட்டை மாதிரியிருக்குன்னு சொல்லிட்டாங்க.. ஹ்ம்ம்.. எனக்கு கவலை. ஏன்னா எனக்கென்னவோ அந்தப் பொண்ணை புடிச்சிருந்திச்சு. நல்லா நடிக்குது பரவாயில்லை.

பாடங்களை விளங்காமல் மனப்பாடம் செய்யும் கல்வி முறையை மாற்ற வேண்டும் என்ற வாதம் பாராட்டுக்குரியது. ஆனால் அது எந்தளவு தூரம் உரியவர்களின் காதில் கேட்டு புத்தியில் ஏறுமோ தெரியவில்லை.


இந்தப் படத்தில இயக்கம், இசைன்னுல்லாம் டெக்னிகல் விஷயம் பேசப் போறதில்ல. எல்லாமே காப்பி.. ஹாரிஸ் இசையில் அஸ்கு லஸ்கு மட்டும் கொஞ்சம் புதுசா இருக்கு. அது கூட மூலம் தெரிற வரை தானோ தெரியவில்லை.

மத்தபடி ஹிந்தி தெரியாத, சப் டைட்டிலோட படம் பார்க்கப் பிடிக்காத என்னை மாதிரி ஆளுங்களுக்கு நல்ல entertainment. ஏற்கனவே ஹிந்தில பார்த்தவங்களுக்கு அரைச்ச மாவையே அரைச்சு இருக்காங்க...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

5 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

பிரேம் குமார் .சி said... Best Blogger Tips

அலட்டல் இல்லாத விஜய் நடிப்பை பற்றி ஒன்றும் சொல்ல வில்லையே

ஷர்மி said... Best Blogger Tips

@பிரேம் குமார் .சி
அதான் ரெண்டு வரியில அழகா சொல்லியாச்சே..
//விஜயைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தோளில் ஒரு பையைப் போட்டுக் கொண்டு வந்து இலியாணாவுடன் ஆட்டம் போடுகிறார்.//

விச்சு said... Best Blogger Tips

இயல்பான விமர்சனம்.ரசிக்கும்படி சொல்லியிருக்கீங்க.

ரிஷபன் said... Best Blogger Tips

பாடங்களை விளங்காமல் மனப்பாடம் செய்யும் கல்வி முறையை மாற்ற வேண்டும் என்ற வாதம் பாராட்டுக்குரியது. ஆனால் அது எந்தளவு தூரம் உரியவர்களின் காதில் கேட்டு புத்தியில் ஏறுமோ தெரியவில்லை.

சினிமாக்காரங்க சொன்னாலும் கேட்க மாட்டோம்ல..
விமர்சனம் நச்.

கோவை நேரம் said... Best Blogger Tips

என்னது..சப்பி போட்ட மாங்கொட்டையா...இப்படியா எல்லாரும் சொல்றாங்க.../// அரங்கு பாதி தான் நிறம்பியது///அப்புறம் நண்பன் படம் பாதி தான் ஹிட்டா..?

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget