Sunday 7 October 2012

லண்டன் திரையில் "Engliஷ் Vingliஷ்"



"Engliஷ் Vingliஷ்” திரைப்படத்தின் நேரடி லண்டன் ரிப்போர்ட்...

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

சனிக்கிழமை 6ம் திகதி.. வெளிவந்து இரண்டாவது நாள் என்பதால் கூட்டமாக இருக்கும் என நினைத்து சீக்கிரமே Cineworldற்கு சென்று விட்டோம். அரங்கிற்குள் நுழைந்த போது பெரிதாகக் கூட்டம் இருக்கவில்லை. ஆனால் படம் ஆரம்பிக்க முன் 70% நிறைந்து விட்டது. இங்கு இது நல்ல கூட்டமாகவே எடுக்கப்படும்.


பல ஆண்டுகளுக்குப் பின் ஸ்ரீதேவி.. இந்தியா முழுதும் கனவுத் தாரகையாக மின்னியவர்.. நிச்சயமாக ஒரு தவறான முடிவு எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையிலேயே படம் பார்க்கச் சென்றேன். ஏமாற்றவில்லை அவர்.

ஆசைகளை அடக்கிக்கொண்டு.. தனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.. இயந்திரத் தனமாக.. கண் விழித்ததில் இருந்து இரவு படுக்கைக்குப் போன பின் கூட கணவரதும் குழந்தைகளினதும் சந்தோஷத்திற்காக உழைக்கும் பல கோடி இந்தியப் பெண்களின் கதை. நல்ல கதை.. சிறந்த நடிப்புடன் இணைந்து மெருகேரியிருக்கு.
 
 
 
டீன் ஏஜ் மகளிடம் கிடைக்கும் அவமானங்களை கையாள முடியாமல் தவிக்கும் தவிப்பு தற்காலிக அம்மாக்கள் பலரையும் சசியின் பக்கம் இழுத்திருக்கும். அதுவும் நான் லண்டனில் இருப்பதால்.. பல அம்மாக்கள் மகள் நெட்டில் சாட்டிங்கில் இருப்பதை கம்பியூட்டரில் படித்துக் கொண்டு இருக்கிறாள் என்றே நினைப்பதை நேரடியாகப் பார்த்திருக்கேன். கேள்வி கேட்டால் உனக்கு ஒன்றும் தெரியாது என்று ஆங்கிலத்தில் எதாவது வார்த்தையைச் சொல்லி அவர்கள் வாயை மூடிவிடுவார்கள். அந்தப் பயத்தில் இவர்களும் ஒதுங்கி விடுகிறார்கள். இனிமேல் ஸ்ரீதேவி கொடுத்த தைரியத்திலாவது ஆங்கிலம் படிக்கிறார்களா என்று பார்ப்போம்.
 
 
 
நான் சிறுமியாக இருந்த போது "Mind your language" என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒரு வகுப்பில் கூடி ஆங்கிலம் பையிலும் போது நடப்பதை நகைச்சுவையாகச் சொல்வார்கள். பின் அது இன வாதமான நிகழ்ச்சி எனக் கூறப்பட்டு தடை செய்யப்பட்டுவிட்டது. இந்தப் படத்தில் வரும் வகுப்பறைக் காட்சிகள் பல அந்த நிகழ்ச்சியில்  இடம்பெற்றது போலவே உள்ளது.
 
ஒரு மனைவி கணவனிடம் அன்பையும் காதலையும் மட்டும் இல்லை.. மரியாதையையும் சமத்துவத்தையும் எதிர்பார்க்கிறாள் என்பதை தெளிவாகச் சொன்னதற்கு இயக்குநருக்கு நன்றி சொல்லவேண்டும். அவரும் ஒரு பெண் என்பதால் கௌரிக்கு இது நன்கு புரிந்திருக்கு.
 
 
 
கதை இப்படித் தான் போகுது என்பது ஆரம்பத்தில் இருந்தே தெரிந்து இருந்தும் கொஞ்சம் கூட தோய்வில்லாமல் பார்வையாளர்களை வைத்திருந்த திரைக்கதை அருமை. மிகவும் நாசுக்கான flirting காட்சிகள் தமிழ் சினிமாவில் புதிது. கணவனைத் தவிர வேறு ஒருவனை நினைவால் கூட தீண்ட மாட்டாள் என்றெல்லாம் பார்த்திருப்பவர்களுக்கு பெண்ணின் மனதும் அலைபாயும்.. ஆனால் அதைக் கட்டிப் போட்டு வைத்து விட்டுக் குடும்பத்தை தொடர்பவளும் கற்புக்கரசி தான் என்பதை ஏற்பார்களோ தெரியவில்லை.
 
தன்னைத் தானே ரசிக்க வைத்ததற்கு நன்றி என தன் பின் திரியும் பிரென்சுக்காரனிடம் சசி சொல்லும் இடம் கவிதை..
 
 
அஜித்குமார்.. எங்கேயோ போயிட்டார் சார். ஹிந்தியில் அமிதாப் செய்த இடத்தில் தமிழில் அஜித். நம்ம பிலோசபி பிரபா ஒரு ப்லாக் போட்டிருக்கிறார். இங்கிலீஷ் படங்களை தமிழில் டப் செய்வது பற்றி.. அதே கெத்தோட Source Code ஆங்கிலப் படத்திற்கு ரன்னிங் கமெண்ட்ரி கொடுப்பார். அப்புறம் ஒரு பந்தி அட்வைஸ் பண்ணிட்டு காணமல் போயிடுறார்.
 
படத்தில் எல்லோர் பாத்திரங்களும் அழகாக அளவாக செதுக்கி இருக்கிறார்கள். ஸ்பெஷலி அந்தக் குட்டிப் பையன்.. என் பையனோடு விளையாடுவது போலவே மனது இனித்தது.
 
 
 
 
ஆக மொத்தம் ரொம்ப நல்ல படம். கட்டாயம் பாருங்கள். இந்தப் படத்தைப் பார்த்து விட்டு பசங்க அம்மாக்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பார்களோ இல்லையோ கணவன்மார்கள் தங்கள் மனைவிகள் மேல் தனிக் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என நம்புகிறேன்.. இல்லாட்டி போட்டி ஜாஸ்தியாயிடும்... சொல்லிட்டேன்.
 
50 வயதிலும் அழகாக இருக்கிறார் மயில் அக்கா. Very Good Comeback.. அவர் கட்டி வரும் புடவைகள் எல்லாமே நல்லா இருக்கு. என்னவரிடம் வாங்கித் தரச் சொல்ல வேண்டும்..
 

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
 

13 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

எத்தனை புடவை தண்டமோ பாவம் அவரு.ஒரு சுனிமா கூட்டிட்டு போன பாவத்துக்கு இந்த செலவு வேற :-)

Unknown said... Best Blogger Tips

// அவர் கட்டி வரும் புடவைகள் எல்லாமே நல்லா இருக்கு. என்னவரிடம் வாங்கித் தரச் சொல்ல வேண்டும்.. // ம்ம்... வீட்டுக்கு வீடு வாசப்படி. படத்தை பத்தி நிறைய "+Ve" கமெண்ட்டுகள் வருவதால் சீக்கிரம் பார்க்கணும். எங்க அம்மாவுக்கு படிப்பறிவு கம்மியா இருந்தாலும் தமிழும் ஆங்கிலமும் (எங்க மூலமா) ஓரளவுக்கு கத்துக்கிட்டாங்க. இந்த படம் பார்க்குறப்ப என்னோட சொந்த அனுபவமும் கலந்து இருக்கும்ன்னு நம்புறேன். ரொம்பநாள் கழிச்சு உங்களை பதிவு எழுத வைத்தமைக்காக இந்த படத்துக்கு கூடுதல் நன்றி. :-))

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்
தண்டம் என்று திட்டினாலும் வருகைக்கும் கமெண்ட்டிற்கும் நன்றி நண்பரே..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@Karuppiah Thangaraj
தம்பி உடையான்.. படைக்கு அஞ்சான்..
//ரொம்பநாள் கழிச்சு உங்களை பதிவு எழுத வைத்தமைக்காக இந்த படத்துக்கு கூடுதல் நன்றி//
உன் பாசத்திற்கும் நன்றி தம்பி.. இனிமேல் நீ நிறைய எதிர்பார்க்கலாம்..

Unknown said... Best Blogger Tips

ஆகா சந்தோசமான விஷயம். பழைய ஷர்மி அக்காவ பார்க்கணும். சொல்லப்போனா உங்க பதிவு மூலமாத்தான் நாம ரொம்ப நல்லா அறிமுகமானோம். # பிளாஸ்பேக். :-))

Kathiravan Rathinavel said... Best Blogger Tips

குடும்பத்துக்குள்ள இருக்க உணர்வுகளை எதார்த்தமா காட்டற படம் வந்து ரொம்ப நாள் ஆச்சு, கண்டிப்பா பார்க்கனும்

ரிஷபன் said... Best Blogger Tips

ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு :)

maithriim said... Best Blogger Tips

அருமையான பதிவு :-) ரொம்ப விரிவாக எழுதியுள்ளீர்கள் :) என் பதிவும் உங்கள் எண்ணப்படி தான் உள்ளது! :-) முடிந்தால் படியுங்கள் :)http://amas32.wordpress.com/2012/10/06/review-of-english-vinglish/

amas32

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் ரசித்து பகிர்ந்துள்ள பகிர்வு... நன்றி சகோதரி...

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@ரிஷபன் மிகவும் நன்றி நண்பரே.. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. எங்கே டுவிட்டர் பக்கம் பார்க்க முடியவில்லை?

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@Kathir Rath பார்த்துட்டு வந்து கமெண்ட் சொல்லுங்க.. :-))

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@amas படிச்சாச்சு.. கமெண்டும் போட்டாச்சு..

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

@திண்டுக்கல் தனபாலன் நீண்ட நாட்கள் வராவிட்டாலும் ஞாபகம் வைத்து வந்து பார்த்ததற்கு நன்றி நண்பரே..

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget