Thursday, 29 May 2014

லண்டன் திரையில் "கோச்சடையான்"


லண்டன் திரையில் கோச்சடையான்.. நேரடி ரிப்போர்ட்..

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

பல குறைகள் காதில் பட்ட போதும்.. தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய மைல் கல்லான திரைப்படம் என்பதாலும்.. எல்லாவற்றிற்கும் மேல்.. ரஜனி என்ற காந்தம் கட்டியிழுக்க.. கோச்சடையானுக்கு குடும்பத்துடன் புறப்பட்டேன். Anime திரைப்படம் என்று சொன்னதும் பிள்ளைகள் துள்ளிக் கொண்டு வந்தார்கள். வேலைகள் அதிகம் இருந்ததால் இரவு 9.40 காட்சிக்கே டிக்கட்டுகள் எடுத்திருந்தோம். ஒவ்வொரு நாளும் 6 காட்சிகள் இந்த ஒரு திரையங்கில் மட்டுமே இருப்பதால்.. பெரிதாக ஆட்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைத்து போனால் அங்கு எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம். திரையரங்கு 90% நிரம்பிவிட்டது. லண்டன் தரத்திற்கு இதை House Full என்றே எடுக்கலாம். புதன் இரவு காட்சிக்கே இவ்வளவு பேர்.. “ரஜனிடா”ன்னு காலரை தூக்க வேண்டியது தான்... 

படம் ஆரம்பித்தது ஒரு விதமா ஒரு மயக்கும் குரல் கதை சொல்லத் துவங்கியது. யாரென்று தெரியாமலே.. குரலில் லயித்து விட்டேன். வீட்டில் வந்து கூகுலிய போது தான்.. அது அ.ர.ரகுமான் என்று தெரிந்தது. பாட்டு மட்டும் இல்லை.. பேச்சும் கவர்கிறது.கதையைப் பற்றி நான் பேசப்போவதில்லை. அது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். 


எங்கள் மக்களிடம் ஒரு கெட்ட பழக்கம் எதையும் நல்லது என்றே சொல்லமாட்டார்கள். அதிகமாக எதிர்பார்த்து பின் கிடைப்பதில் திருப்தி இல்லாமல் போய்விடுகிறார்கள். அதே தான் இங்கும்..

இது ஒரு அனிமேஷன் படம்.. அதில் வரும் கதாபாத்திரங்களை ரசிக்க வேண்டியது தானே.. யார் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர், அவர்களை அடையாளம் தெரியவில்லை என்ற குறைப் பேச்சிற்கே இடமில்லை. ஒவ்வொரு பாத்திரத்தின் உடல் மொழிகளும் வித்தியாசப் படவே வெவ்வேறு மனிதர்கள் தேவைபடுவர். அதற்கு பிரபலமானவர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அவ்வளவே.. என்று நினைத்துக் கொண்டு பாருங்கள்.. படம் நன்றாக உள்ளது.

ரஜனி என்ற பெயர் வரும்போது இருக்கும் 3டி அனிமேஷன் கவரும் விதமாக இருந்தது. முக உணர்வுகள் இன்னும் அதிகமாக காட்டப்படவேண்டும். இது முதல் படம் தானே.. போகப் போக திருத்திக் கொள்வார்கள்.. 

இசையும் நடனமும் அருமை.. சிவனின் தேவாரம் தேவாமிர்தமாக ஒலித்தது. தீபிகாவின் மயில் நடனம் சிறப்பாக இருந்ததது. கோச்சடையானின் தாண்டவமும் தான்.. 

ரஜனிக்கு 6 பேக் கொடுத்து அவர் ரசிகர்களை சந்தோஷப் படுத்திட்டாக.. யார் என்ன சொன்னாலும்.. என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. உலகம் எங்கும் இருக்கும் ரஜனி ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நல்ல விருந்து.. அவர்களும் நிச்சயம் ஒரு முறை என்றாலும் பார்த்துவிடுவார்கள். இதை நம்பித் தானே சௌந்தர்யாவும் படம் எடுத்தாங்க.. 

3 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

chinnapiyan said... Best Blogger Tips

நல்லதே நினை. நல்லதே செய். அதன்படி அமைந்துள்ளது உங்கள் விமர்சனம். அதுவும் லண்டன்வாசிகளின் மனநிலையில். வாழ்க வளர்க. நன்றி தமிழச்சி

Unknown said... Best Blogger Tips

படத்தில் உள்ள பாஸிட்டிவ் விடயங்களை மட்டும் எழுதி உள்ளீர்கள். நிறை குறை எங்கும் இருந்தாலும், அதில் உள்ள நிறையை மட்டுமே பார்த்து பழகி விட்டால், வாழ்க்கை இன்பமே! Short and sweet positive review.
Twitter@Eakalaivan

ரிஷபன் said... Best Blogger Tips

திரையரங்கு 90% நிரம்பிவிட்டது. லண்டன் தரத்திற்கு இதை House Full என்றே எடுக்கலாம். புதன் இரவு காட்சிக்கே இவ்வளவு பேர்.. “ரஜனிடா”ன்னு காலரை தூக்க வேண்டியது தான்... //


ahaa !

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget