Saturday 2 May 2015

லண்டன் திரையில் உத்தம வில்லன்


லண்டன் திரையில் உத்தமவில்லன்.. வழமை போல் கமல் படம் வெளிவருது என்ற செய்தி வந்த நாளில் இருந்தே தினமும் பார்த்து பார்த்து முதல் நாள் காட்சிக்கு டிக்கட் எடுத்தாச்சு.. வெள்ளி இரவுக்காட்சி அரங்கம் 70 வீதம் நிறைந்திருந்தது..




விஸ்வரூபம் வந்த பின் வெளிவரும் கமல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் போகும் பலருக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. கமலின் பரிசோதனை படங்களில் ஒன்று. பல நுணுக்கமான சின்ன சின்ன விடயங்களையும் நேர்த்தியாக பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள். 

கமல் முதல் முறையாக தன் மகளை சந்திக்கும் காட்சியில் இருவரது செய்கைகளையும் ஒரே மாதிரி இருப்பதை காட்டியிருப்பது அருமை. கமல் முகத்தில் சோகத்தையும் அழுகையயும் காட்டும் போது ஏனோ சிவாஜியை ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார். தன் நடிப்புலக தந்தைக்கு கொடுத்த சமர்ப்பணமோ..? 


பாலசந்தரும் அப்படியே.. நாகேஷ் நடித்திருந்தால் இப்படித் தான் இருந்திருக்கும். குரலும் அப்படியே.. 

அருமையான நடிகை பூஜா.. தமிழ் சினிமா உலகம் ஏனோ அவரை புறந்தள்ளி விட்டது. நடிப்பும்.. நடனமும்.. நளினமும் அற்புதம்.

  

கதையைப் பற்றி எதுவுமே சொல்லப்போவதில்லை நான். படம் பார்க்கும் போது சுவாரசியம் இல்லாமல் போய்விடும். ஆனால் பழைய கால காட்சிகளையும் தற்கால காட்சிகளையும் பின்னி இருக்கும் விதம் அழகு. திரைக்கதை கமல்..


இயக்குனர் ரமேஷ் அரவிந்த்.. ஆனால் அவரை கமல், கிப்ரன், கௌதமி, மற்றும் ஒவ்வொரு நடிக நடிகையரும் தோளில் அப்படியே எளிதாக தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

கமலுக்கு திரை உலகில் நெருக்கமான அனேகர் கலந்திருக்கும் கதம்பம்.. கமல் அபிமானிகளுக்கும்.. நல்ல திரைப்பட ரசிகர்களுக்கும் பிடிக்கும்.. எனக்கும் தான்.

0 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget