Wednesday 21 October 2015

எங்கே மனிதம்?



நான் பொதுவாக எங்கு செல்வதாக இருந்தாலும் எனது சொந்த வாகனத்திலேயே செல்வது தான் வழக்கம். ஆனால் லண்டன் மாநகரத்திற்குள் வாகன நிறுத்துமிடம் வசதிகள் குறைவு என்பதால் லண்டன் அண்டர்கிரவுண்ட் சேவையயே பயன்படுத்த வேண்டிய நிலை. இன்றும் அப்படித்தான்..






கடலில் அகப்பட்டவனுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காமல் இருப்பது போல்.. அவ்வளவு கூட்ட நெரிசலில் நின்று இருந்த போதும் தனிமையைத் தான் உணர்வீர்கள். எனக்கும் அப்படியே தான் இருந்தது. நேரத்தை போக்க iPadல் puzzle விளையாடிக்கொண்டிருந்தேன். திடிரேன தலையை நிமிர்ந்து பார்த்த போது ஒரு கால் கட்டுபோட்ட படி ஊன்றுகோலோடு ஒரு அம்மணி நின்றிருந்தார். அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தன. இயலாதவர்களுக்கும் கற்பினிகளுக்கும் என ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்த இருவரும் தலையைக் குனிந்த படி புத்தகம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் எழுந்து என் இருக்கையில் அமருங்கள் என சொல்லி திரும்புவதற்குள். எனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பெண்மணி சட்டென அதில் அமர்ந்துவிட்டார். நான் இவருக்காக தான் எழுந்தேன்.. நீ ஏன் அமர்ந்தாய் எனக் கேட்டதற்கு.. நீ எழுந்து விட்டாய் நான் அமர்ந்துவிட்டேன்... அவ்வளவே என்று சொல்லிவிட்டார். சுற்றி நின்றவர்கள் முறைத்துப் 
பார்த்ததால் கடைசியில் வேண்டா வெறுப்பாக எழுந்து கொண்டார். ஆனால் 
அவர் எழுந்து கொள்ளும் வரை வேறு ஒருவரும் அந்த ஊன்று கோலோடு
 நின்றிருந்த பெண்ணிற்கு அமர இடம் கொடுக்கவில்லை.

இதில் என்ன கேள்வி என்றால்.. மனித நேயம் எங்கு போய்விட்டது? ஒரு சிறு உதவும் மனப்பான்மை கூட இல்லையா..? இல்லை.. தினம் தினம் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி அள்ளாடி திரிந்தால் நானும் இப்படி ஆகிவிடுவேனா? 

1 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

Anonymous said... Best Blogger Tips

ithey Kadhaithan ingu Dubaiyilum! ivvalavu Vekamaaka aduththiruppavanai kandukollmal ponaal kooda paravaayillai, aanaal aduththvanai mithiththu kondu enge pokiraarkal endruthan theriyavillai, uthavikal seiyaavidinum ubathiravam seiyaamal iruththale nalam, aanaal ingu ivarkal pakkathiliruppavarkalukku idainjal seiyaathu ethaium seiyvathillaye!!!

Ivan,
Alan

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget