:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் உள்ள விந்து காப்பு வங்கிகளுக்கும் சோதணைக் குழாய் மூலம் குழந்தைகள் உருவாக்கும் மருத்துவமனைகளுக்கும் இடையில் அண்மைக் காலமாக இந்த விசித்திர வண்டி ஓடித் திரிகிறது. விந்து உருவில் அமைக்கப் பட்டிருக்கும் இந்த வாகனம் Biological Analystஆக பணி புரியும் Alan Dowden எனபவரால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. திரவ நைட்ரஜன் நிறைந்த vacuum ற்குள் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெட்டியில் 30 சாம்பிள்களை ஒரே நேரத்தில் கொண்டு போகக்கூடிய வசதி உள்ளது. சாதாரண பைக் போலில்லாமல் வித்தியாசமாக இருப்பதால் பலர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். என்ன ஏது என்று கேள்வி கேட்கிறார்கள் இதனால் விந்து வங்கியின் தேவையும் அதன் சேவையும் மக்களுக்குத் தெரிய வருகிறது என்கிறார் அலன்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மேலைத்தேய நாடுகளில் நடக்கும் 5 விவாகரத்துகளில் 1க்கு Facebook காரணமாக இருக்கிறதாம். பழைய நண்பர்கள் காதலர்களுடன் இந்தத் தளத்தில் ஏற்படும் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை திசை திருப்புகிறதாம். என்னைக் கேட்டால் தவறு செய்வது என்று முடிவெடுத்தால் அது எப்படியும் நடக்கும். பிறகு யாரைக் குற்றம் சொல்லி என்ன?
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Brian McGuinn என்ற கணவர் தன் சவர ரேசரைத் தூக்கி எறியும் போது அந்த பெட்டிக்குள் இருந்த அவர் மனைவியின் திருமண மோதிரத்தையும் சேர்த்து குப்பையில் போட்டுவிட்டார். விஷயம் தெரிந்தவுடன் திருமணம் நடந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கர்ப்பவதியாக இருக்கும் மனைவி Anna விம்மி விம்மி அழத்துவங்கி விட்டார். வைரம் பதித்த பிலாட்டினத்தால் ஆன மோதிரம். $10,000 பெறுமதி. விடுவாரா அந்தக் காதல் கணவர். உடனே குப்பை சேகரிக்கும் கம்பனிக்கு போனைப் போட்டு விபரம் சொல்லி விசேட உடை அணிந்து கொண்டு 9 டன் குப்பைக்கூழத்திற்குள் கைகளை விட்டுத் தேடி கண்டு பிடித்து விட்டார். மனைவி ஏக குஷியில் இருக்கிறார். “எனக்கு பணப் பெறுமதியை விட, செண்டிமெண்ட் பெறுமதி தான் அதிகம்” என்று சொல்கிறார். உண்மையில் இவ்வளவு நாற்றங்களுக்கு நடுவில் போய் வந்த கணவன் எத்தனை நாள் கழித்து சாப்பிட்டார் என்று தான் எனக்கு கவலை....
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஒரு வாரத்திற்கு முன்னால் தம்பி நிரூபனின் நாற்று வலைத்தளத்தில் இந்தக் குறும்படத்தைப் பற்றிய செய்தி வந்திருந்தது. என்னை மிகவும் பாதித்ததால் மீண்டும் இங்கு தருகிறேன். நல்ல எடிட்டிங், நடிப்பு. அந்த காதலியாய் வரும் பெண்ணை மட்டும் கொஞ்சம் நடிக்கச் சொல்லியிருக்கலாம். நம்மவர்களின் ஒரு அருமையான படைப்பு....
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;
8 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
மாயக்கண்ணாடி இப்பதிவில் காட்டியவை மிக நல்ல தகவல்கள்.
குண்டாய் இருக்கும் பெண்ணின் அக உளைச்சல்களை மிக அற்ப்புதமாக படமாக்கி உள்ளார் ஒரு பெண் இயக்குனர்.
ஆண் இயக்குனர்கள் தொட முடியாத உயரத்தில் காட்சிகள் அமைந்துள்ள
FAT GIRL என்ற படத்திற்க்கு பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து கருத்துரைக்கவும்.
இந்த நேரத்தில் என்ன விழித்திருக்கிறீர்கள் கேபில் சார்...
வருகைக்கும் முதலாவது ஆளாக பின்னூட்டம் விட்டதற்கும் நன்றி.
இதோ உங்கள் தளம் நோக்கித் தான் ஓடுகிறேன்...
மேடம்...நான் உலகசினிமா ரசிகன்.
கேபிள் சங்கர் இல்லை.
பகிர்வுக்கு நன்றி
மன்னிக்க வேண்டும் உலக சினிமா ரசிகன். ஏனோ ஆரம்பத்தில் இருந்து உங்களை கேபில் சங்கர் என்றே நினைத்து விட்டேன். குழப்பத்திற்கு மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். உங்கள் தொடர் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி...
//suryajeeva said...
பகிர்வுக்கு நன்றி//
பின்னூட்டத்திற்கு நன்றி சார்...
அருமை அக்கா!
கேபிள் சங்கர் உலக சினிமா ரசிகன் தான்... ஆனால் உலக சினிமா ரசிகன் கேபிள் சங்கர் அல்ல... புரிஞ்சதா மேடம்...
Post a Comment