உலகையே தங்கள் கை அசைவினால் ஆட்டிவிடக் கூடிய சக்தி வாய்ந்த மனிதர்களின் தர வரிசை Forbes பத்திரிக்கையினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதோ உங்களுக்காக... 11லிருந்து 20 வரை.
11. Sonia Gandhi
இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி. வயது 64. இந்தியாவின் சக்தி வாய்ந்த அரசியல்வாதி என்ற முறையில் இந்த இடத்தைப் பிடித்துள்ளார். இரண்டு முறை பிரதமர் பதவியை தவிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
12. Mario Draghi
13. Nicolas Sarkozy
14. Wen Jiabao
சீனாவின் பிரதம மந்திரி. வயது 69. முதலில் சீனாவின் அரசாங்க அதிபர் என்று ஒருவரைச் சொன்னீர்கள் இப்போது பிரதம மந்திரி என்று ஒருவரைச் சொல்கிறீர்கள் என்று கேட்காதீர்கள். அவர்களின் அரசியல் சட்டம் அப்படித் தான் உள்ளது.
15. Zhou Xiaochuan
சீனாவின் மக்கள் வங்கித் தலைவர். வயது 63. $3.2 ட்ரில்லியன் (எத்தனை சைவர்னு கேட்காதீங்க... தெரியாது) அந்நியச் செல்வாணியைக் கையாழ்கிறது. இதில் சிரிப்பு என்னவென்றால் இதில் $1.1 ட்ரில்லியன் அமேரிக்க அரசாங்கத்தினுடையது.
16. Hillary Clinton
17. Michael Bloomberg
நியூ யோர்க் நகரின் மேயர். வயது 69. அமேரிக்காவின் மிகப் பெரிய நகரின் மேயர் மாத்திரம் இல்லை, மீடியா அரசர், சமூக சேவகர், அமேரிக்காவின் 12வது பெரிய செல்வந்தர்.
18. Timothy Geithner
19. Manmohan Singh
20. Warren Buffett
பார்க்ஷயர் ஹதாவே என்ற அமேரிக்க நிறுவனத்தின் பணிப்பாளர். வயது 81. அண்மையில் தன் காரியதரிசி தன்னை விட அதிகமான விகிதத்தில் வரி செலுத்துகிறாள் என்று சொல்லி ஒபாமாவை “பஃபெட் வரி” என்ற புதிய வரியை கொண்டு வரச் செய்திருக்கிறார். இதனால் பல அமெரிக்க செல்வந்தர்களின் பகைக்கு ஆளாகியிருக்கிறார்.
இந்த வரிசையில் மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் Google உரிமையாளர்கள் Larry Page மற்றும் Sergey Brin 30 வது இடத்திலும், ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 35வது இடத்திலும், Amazon நிருவனத்தின் இயக்குனர் Jeff Bezos 40வது இடத்திலும் லக்ஷ்மி மிட்டல் 47வது இடத்திலும், தாவூத் இப்ராஹிம் 57வது இடத்திலும், Apple நிறுவன இயக்குனர் Tim Cook 58வது இடத்திலும் உள்ளனர்.
4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
நன்று அக்கா!சில பெயர்களுக்கு விளக்கம் கொடுக்காதது ஏன்?
அன்பு சகோதரி,
அத்தனையும் மனம் கவர்ந்தது, ஆனால் ஒரு விஷயத்தை
பார்த்தீர்களா... நம் நாட்டு பிரதமரை குறிப்பிடுகையில் அவரின் ஆளுமைக்கு
எதையும் காரணம் காட்ட முடியவில்லை..
இதற்கெல்லாம் பதினொன்றாம் நபர் தான் காரணமோ????
அவர்களுக்கு மேலும் என்ன விளக்கம் கொடுப்பது என்று தெரியவில்லை சுகி...
எல்லோருக்குமே தெரிந்தது தானே அண்ணா இது.
Post a Comment