அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் New York நகரின் நெரிசலான வீதிகளின் கீழே உள்ள சுரங்கங்கள் ஒன்றினுள் ஒரு பெரிய சவக் கிடங்கினைக் கண்டு பிடித்துள்ளார்கள். 20,000 அடிமைகளின் சடலங்கள் அங்கே புதைக்கப்பட்டுள்ளது. அவர்களின் எலும்புகளையும் பல் அமைப்புகளையும் வைத்து ஆப்பிரிக்காவிலிருந்து நேரடியாக வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பாதிக்கும் மேற்பட்டவை 12 வயது கூட நிறம்பாத சிறுவர்கள். தங்கள் நகரங்களைக் கட்டி எழுப்ப வந்தவர்களை நன்றாகப் பார்ப்பதை விட நலிவுற்று நோயுற்று இறப்பவர்களை அப்புறப்படுத்தி விட்டு புதியவர்களைக் கொண்டு வருவது அவர்களுக்கு எளிதாக இருந்திருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளையர்கள் தாங்கள் செய்யும் அநியாயங்களை எல்லாம் செய்து விட்டு இப்போது மனித நேயமாம்... மனித உரிமையாம்... எத்தனை எத்தனை பேசுகிறார்கள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
2004ம் ஆண்டு ஒரு காது கேளாத பெண் உக்ரைன் நாட்டின் தலைவிதியையே மாற்றியிருக்கிறாள். Natalia Dmytruk என்ற இந்தப் பெண்மணி அரசிற்கு சொந்தமான தொலைக்காட்சி சானலில் செய்திகளை செய்கைகளில் காட்டும் பணியில் இருந்திருக்கிறாள். பதவியில் இருந்த பிரதமர் விக்டர், அவரே வெற்றி பெறுவதாக அறிவிக்கச் சொல்லியிருக்கிறார். அதிகாரிகளும் அப்படியே செய்திருக்கிறார்கள். ஆனால் இந்தப் பெண் மட்டும் “இவர்கள் பொய் சொல்கிறார்கள். பிரதமர் வெற்றி பெறவில்லை. இதைத் தெரிவிப்பதால் நான் இனி இருப்பேனோ தெரியாது” என்று செய்கை மூலம் காட்டியிருக்கிறாள். இதைக் கண்ட அதிகாரிகளுக்கும் ரோஷம் வந்து உண்மையை வெளியிட்டார்கள். பிரதமர் விக்டர் படு தோல்வி அடைந்து புதுப் பிரதமர் பதவி ஏற்றார்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
1954ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற Ernest Hemingway பற்றி அறிந்திருப்பீர்கள். 20ம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியத்தில் பெரும் மாறுதல்களைக் கொண்டு வந்தவர். சிறுகதை, குறுங்கதைகள் என்பவற்றைப் பிரசித்தம் அடைய வைத்தது இவர் தான். இவர் எழுதிய ஆகக் குறைந்த சொல் கொண்ட குறுங்கதையில் ஆறே ஆறு சொற்கள் தான். “For Sale: baby shoes, never worn”. தமிழில் “விற்பனைக்கு: குழந்தையின் காலணிகள். பாவிக்கப்படவே இல்லை.”
எங்கே உங்களின் கற்பனைகளையும் தட்டி விடுங்கள்... சில குறுங்கதைகள் பிறக்கட்டும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Jurassic Park படம் என்றாலே அதில் துரத்தும் டைனோசர்களும், இரத்தமும் சதையும் தான் ஞாபகம் வரும். ஆனால் அந்த படத்தைப் பற்றி ஆராய்ந்ததில் அந்தப் பெயரில் வெளிவந்த 3 படங்களிலும் பெண்கள் யாரும் இறந்ததில்லை. டைனோசர்கள் துரத்தி துரத்தி ஆண்களைத் தான் கொன்றிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
“உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன், உந்தன் கண்ணுக்கு கண்ணீர் போல் காவல் கிடப்பேன்...” எந்த ஒரு மனைவியும் தன் கணவனிடமிருந்து கேட்க நினைக்கும் வார்த்தைகள். இந்தப் பாடலின் நடனமும், இசையும், கவி வரிகளும் என்னை மிகவும் கவர்ந்தது. அதுவும் கடைசியில் வரும் அந்த பல வித இந்திய கலாச்சார உடைகள்... முதல் முறை பார்க்கும் போது மயிர் கூச்செறிந்தது. All Indians are my brothers and sisters.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
30 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
மாயக் கண்ணாடி - நிறைய மாயங்களை கண் முன் கொண்டு வர வாழ்த்துகள்!
விஷயங்கள் பல எமக்கு புதிது...பகிர்ந்ததற்கு நன்றிங்க...
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இன்று தான் வருகிறேன். அருமையான பதிவு. தங்களின் பல பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி சகோதரி!
நம்ம தளத்தில்:
"மனிதனின் மகிழ்ச்சிக்கு தேவையான மூன்று முத்துக்கள் என்ன?"
//Jurassic Park படம் என்றாலே அதில் துரத்தும் டைனோசர்களும், இரத்தமும் சதையும் தான் ஞாபகம் வரும். ஆனால் அந்த படத்தைப் பற்றி ஆராய்ந்ததில் அந்தப் பெயரில் வெளிவந்த 3 படங்களிலும் பெண்கள் யாரும் இறந்ததில்லை. டைனோசர்கள் துரத்தி துரத்தி ஆண்களைத் தான் கொன்றிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//
டைனோசர்களுக்கு ஃபிகர்களின் டேஸ்ட் பிடிக்காது என்று..:))
அனைத்தும் அருமை... எனக்கு ஒருத்தர் கொடுத்த அட்வைஸையே நான் உங்களுக்கு கொடுக்குறேன்... இதையே கொஞ்சம் டிங்கரிங் பண்ணி எழுதினா ஒவ்வொன்றையும் தனி இடுகையா எழுதலாம்...
ஜுராசிக் பார்க் பற்றிய ஆராய்ச்சி வியக்க வைக்கிறது... எங்கேயாவது படித்தீர்களா அல்லது மூன்று படத்தையும் பார்த்து நீங்களே ஆராய்ச்சி செய்தீர்களா...?
டைனோசர்கள் துரத்தி துரத்தி ஆண்களைத் தான் கொன்றிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
/////////////////////////////////////
அது ஆம்பிளை டைனோசராக இருந்திருக்கும் ...............
குட் கலெக்ஷன்ஸ் மேடம்
nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com
/டைனோசர்கள் துரத்தி துரத்தி ஆண்களைத் தான் கொன்றிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?/
அப்ப...அது கண்டிப்பா பொம்பளை டைனோசராத்தான் இருந்திருக்கும் இல்லையா? எங்கியோ படிச்சது ஞாபகத்துக்கு வருது...நம்மளை கடிக்கறது எல்லாம் பெண் கொசுதானாம். அதுக்குதான் ரத்தத்துல இருக்கிற ஏதோ ஒண்ணு முட்டை போட தேவைப்படுதாம்.
டைனோசர்கள் துரத்தி துரத்தி ஆண்களைத் தான் கொன்றிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?////
ஹி ஹி ஹி ..பெண் பாவம் பொல்லாதது ..என்று அதற்கு தெரிந்து இருக்கும்....
மாயக்கண்ணாடி ...மாயம் செய்கிறது ..முதல் வருகை ...அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள்
டைனோசர் துரத்தி ஒரு பெண் கூட இறக்கவில்லை.. ஆண்கள் மட்டும்தான்
என்று சொன்ன சகோதரி.. ........ ஒருவேளை அந்த டைனோசர்களுக்கு ஆண்களே பிடிக்காது போல....
@மூ.ராஜா
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி ராஜா...
@விக்கியுலகம்
நன்றி விக்கி. அடிக்கடி வாங்க இப்படி நிறைய புது விஷயங்கள் இருக்கும்.
@திண்டுக்கல் தனபால்
பதிவுலகிற்கு உங்களை வருக வருகவென்று வரவேற்கிறேன் சார். நானும் பதிவெழுதத் தொடங்கி சில மாதங்கள் தான் ஆகின்றது. ஆனால் எல்லோரும் என்னுடன் நன்றாக பழகுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக என் நட்பு வட்டம் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. நீங்களும் பழகிவிடுவீர்கள்...
@Cable Sankar
@அஞ்சா சிங்கம்
@மாயன்
@கோவை நேரம்
பேசாமல் ஜுராசிக் பார்க் டைனோசார் பற்றி ஒரு பட்டிமன்றமே வைத்து விடலாம் போல இருக்கிறதே...
@Philosophy பிரபாகரன்
அட்வைஸிற்கு நன்றி பாஸ்... ஆனால் ஒரு கணவர், இரண்டு குழந்தைகள், மூன்று நிறுவனங்கள் ஆகியவற்றை சமாளிக்கும் எனக்கு டிங்கரிங் பண்ண ஏதையா நேரம்?
@Philosophy பிரபாகரன்
சத்தியமாக சொல்கிறேன், இப்படியான ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சி எல்லாம் செய்வதற்கு எனக்கு நேரமில்லையா..
@சி.பி.செந்தில்குமார்
தாங்க் யூ சார்.
@வினோத்
நன்றி வினோத். நிச்சயம் உங்கள் தளம் வருகிறேன்...
@கோவை நேரம்
முதன் முதலாக என் தளத்திற்கு வந்திருக்கிறீர்கள். மிகவும் சந்தோஷம். இனி அடிக்கடி சந்திப்போம். வருக வருக... நானும் வருகிறேன்.
@மகேந்திரன்
நீங்களுமா அண்ணா?
எல்லோரும் போட்டி போடுக் கொண்டு Hemingway போல் மைக்ரோ கதை சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால் அடித்துப் பிடித்து டைனோசாரை அலசி ஆராய்ந்து விட்டுப் போய் இருக்கிறார்கள். என்னவென்று மெச்சுவது?
ஷர்மி அக்கா,
Congrats! கலக்கிட்டீங்க :)))
@sugi
ஏதோ எல்லாம் ஒங்க புண்ணியம் தான் மேடம்...
இன்ன மேட்டருன்னா..
அந்த டைனோசார் போன பிறவியில் பெண்ணா இருந்து தன்னை ஈவ் டீசிங் பண்ணினவங்களை இந்த பிறவியில் பழி வாங்குதா ?
வாங்க ஷர்மி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// நானும் என் மனைவியும் வெளியில் எங்கும்போனா போனை அவளுடைய போனை என்னிடம் கொடுத்துட்டுறது வழக்கம் //
கல்யாணம் ஆகாமல் மனைவி எங்கிருந்து வருவர்...
என் பார்வை சரியா இல்லையா என கருத்து சொல்லுங்க..
அந்த் டைனோசார் போன போன பிறவியில் பெண்ணா பிறந்து தன்னை ஈவ் டீசிங் பண்ணினவங்களை இந்த பிறவியில் பழி வாங்குதா ?
--------------------
வாங்க ஷர்மி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
// நானும் என் மனைவியும் வெளியில் எங்கும்போனா போனை அவளுடைய போனை என்னிடம் கொடுத்துட்டுறது வழக்கம் //
கல்யாணம் ஆகாமல் மனைவி எங்கிருந்து வருவர்...
என் பார்வை சரியா இல்லையா என கருத்து சொல்லுங்க..
கலக்கல் பகிர்வு சகோ .வாழ்த்துக்கள் ......
@வினோத்
மன்னிக்க வேண்டும் நண்பரே... வீட்டைப் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டே பிழையாக எழுதி விட்டேன்.
@வினோத்
ஏன்யா எல்லோரு டைனோசாரை ரவுண்டு கட்டுறீங்க... ப்ளீஸ் ஒரு மைக்ரோ கதை சொல்லுங்களேன் யாரேனும். என்னால் முடியும் என்றால் நானே சொல்லியிருப்பேன். உங்களிடம் எல்லாம் கேட்டு கேட்டு அலுத்துப் போய்விட்டேன்...:-(
@அம்பாளடியாள்
வருகைக்கு நன்றி அம்மா. உங்கள் தளம் பார்த்தேன். என்ன ஒரு வார்த்தைப் பிரவாகம்.அருமை. வளரட்டும் உங்கள் தமிழ் பணி.
Post a Comment