என் iPhone இல்லாமல் எனக்கு இனி வாழ்வே இல்லை என்கின்ற மாதிரி கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். என் ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ற மாதிரி app போட்டு வைத்திருக்கிறேன். என் வங்கியில் எப்போது பணம் போட வேண்டும் என்பதிலிருந்து என் வீட்டு மளிகை சாமான் வாங்குவது வரை சர்வம் iPhone மயம்.
அப்போது தான் Facebookல் நண்பர் விஞ்ஞானி சபேசன் பகிர்ந்து கொண்டிருந்த இந்தப் பொடியனைப் பற்றிய காணொளியைப் பார்த்தேன். பார்க்கத் தான் பொடியன். ஆனால் பாருங்கள் வருங்காலத்தில் Bill Gates, Steve Jobs எல்லோரையும் தூக்கிச் சாப்பிட்டு விடுவான்.
Thomas Suarez என்கின்ற இந்த 6ம் வகுப்பு மாணவன் Los Angelesஐ சேர்ந்தவன். Apple நிறுவனம் Software Development Kit (SDK)ஐ வெளியிட்டதில் இருந்து சொந்தமாக applications உருவாக்கி விற்பனை செய்கிறான். Steve Jobs தனக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தார் என்று அவரை நன்றியுடன் நினைவு கூறும் பெரிய மனம் படைத்த சிறுவன். தாமஸ் கேட்கிறான் “கால்பந்து கற்க வேண்டும் என்றால் கால்பந்து அணியில் சேரலாம். வயிலின் படிக்க ஆசையென்றால் வயிலின் வகுப்புகளில் சேரலாம். ஆனால் Apps உருவாக்க ஆசையென்றால் என்ன செய்வது?” என்று. அவன் மிகுந்த முயற்சியெடுத்து கற்ற வித்தையை தன் பாடசாலை மாணவர்களுக்கு App Club என்றொரு சங்கம் அமைத்து எளிதாக சொல்லிக் கொடுக்கிறான். எவ்வளவு பெரிய பெருந்தன்மை. எத்தனை பேருக்கு வரும் இந்த மனசு. இவன் நிச்சயம் பார் போற்றும் நிலையை அடைவான்.
அவன் தன் சொந்த நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் தன் Appsகளை விற்பனை செய்கிறான் - CarrotCorp http://www.carrotcorp.com/.
நீங்களும் iPhone App உருவாக்கத்தில் இறங்கப் போகிறீர்கள் என்றால் இந்த Apple வலைத்தளத்திற்கு சென்று பாருங்கள்.
இந்த ஆண்டு ஒக்டோபர் மாத்தத்தில் Apple நிறுவனம் நடத்திய மாபெரும் விழாவில் தாமஸ் பேசியது....
3 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
இந்த வயதில் எவ்வளவு பெரிய விஷயம்,
நிச்சயம் பெரிய ஆளாய் இந்த பைய்யன் வருவான் என்பது
காலத்தின் கோலம்....
இந்த மாதிரி சில செய்திகளை பதிவுகளாய் தருவது
தங்களின் சிறப்பு சகோதரி..
வாழ்த்துக்கள்..
தமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை வழங்கி வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.
தமிழர் போராட்டங்களை இழிவுபடுத்தும் தினமலர்! http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html
அக்கா! நீங்க மட்டும் Mayoo-யிடத்தில் கொஞ்சமே கொஞ்சம் நேரம் ஒதுக்கினீர்களானால் definitely அவளும் இதே போல் வருவாள்! What a Intelligent girl she is!
Post a Comment