யார் இந்த கமல்? ஏன் இவர் மேல் இந்தப் பித்து? எனக்குத் தெரியவில்லை. ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து பிடித்த நடிகர் யார் என்று கேட்டால் என் வயதொத்தவர்கள் எல்லாம் ரஜனி என்ற போது நான் மட்டும் கமல் என்றேன். அவர் முகம் மட்டுமில்லை. உடலின் ஒவ்வொரு தசையும் நடிக்கும். ஒரு சிறு ரோமம் கூட தவறாக அசையாது.
ஐந்து வயதில் தொடங்கிய பயணம் இன்று வரை தடையில்லாமல் தொடர்வதே ஒரு கொடை தான். 50 ஆண்டுகால தொடர் பயணம். கமல் என்பவன் நடிகன் மாத்திரம் அல்ல. ஒரு தயாரிப்பாளன், பாடகன், கதாசிரியர், பாடல்கள் எழுதும் கவிஞன், இயக்குணர்... இன்னும் லைட் பாய் வேலையில் இருந்து மதிய உணவு வேளையில் பந்தியில் பரிமாறுவது வரை தெரியும், செய்வார். அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் “எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது, கடைசி வரையில் நான் உழைப்பது முழுக்க இங்கேயே தான் திரும்ப முதலீடு செய்து கொண்டேயிருப்பேன்” என்று. எத்தனை நடிகர்கள் தமிழ் சினிமாவின் தரம் உயர வேண்டும் என்று போராடுகிறார்கள்?
ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கே திரும்ப வருகிறேன். ஏன் கமல் மேல் எனக்கு இந்தப் பித்து? பித்தென்றால் கவர்ச்சியில்லை. ஒரு வீரனுக்கு வாளின் மேல் உள்ள பித்து, கவிஞனுக்கு தமிழின் மேல் உள்ள பித்து, ஒரு தாயிற்கு சேய் மேல் உள்ள பித்து. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். என் கணவர் சொல்வார் கமலின் படம் பார்க்கும் போது முக்கியமாக தொலைக்காட்சியில் அவர் பேட்டி போகும் போது என் முகத்தைப் பார்த்தால் 1000 வாட்ஸ் பல்பு எரியுமாம்.
நான் லண்டன் வந்த ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமா என்றால் £10-£15 டிக்கட் விற்கும். அதுவும் இரவு 11 மணிக்கு மேல் தான் திரையிடுவார்கள். அப்போது அது பெரிய காசு. ஆனால் கமல் படம் திரையிடப்போகிறார்கள் என்றால் மட்டும் அத்தானிடம் அழுது புரண்டென்றாலும் போய்விடுவேன்.
முக்கியமாக மீசை இல்லாவிட்டாலும் நான் ரசிக்கும் ஆண் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான். நாத்திகம் பேசுவதை ரசிப்பதும் அவர் ஒருவரிடம் தான். நாத்திகத்தையும் நல்ல மனித நேயத்துடன் கலந்து சொல்லுவார். உண்மையில் உற்றுப் பார்த்தால் உண்மையான கடவுள் பக்தர் அவர் தான்.
வாய் கிழிய பெண்ணியம் பேசுபவள் தானே நீ, கமல் அடிக்கடி மனைவிகளை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அதையெல்லாம் கேட்க மாட்டாயா என்று கணவர் சீண்டுவார். மனைவிகளை மாற்றுவது அவர் தனிப்பட்ட விஷயம். அந்த மனைவிகளும் விரும்பித்தானே வாழ்கிறார்கள். பிறகு உங்களுக்கேன் கவலை என்பேன்.
இன்று கமலுக்கு 57 வயதாம். என் அப்பாவை விட 2 வயது தான் அதிகம். அப்பா நீண்ட ஆயுளுடன் என்னோடு இருக்க வேண்டும் என்று எண்ணும் ஒவ்வொரு முறையும் இல்லாவிட்டாலும் பாதி நேரமென்றாலும் கமல்ஹாசனும் நீண்ட ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்து தன் கலைப் பயணத்தை தொடர வேண்டும் என் காளி அம்மனைக் கேட்டுக் கொள்கிறேன்.
பிகு: பல வேலைகளுக்கு நடுவே இரவு வந்து பிளாக் போட்டு விட்டு நிமிர்ந்து பார்க்க 4 நிமிட தாமதத்தால் 8 நவம்பர் என்று திகதி வந்துவிட்டது. இது 7 நவம்பர் கமலின் பிறந்த நாளுக்காக என் சமர்ப்பணம்.
பிகு: பல வேலைகளுக்கு நடுவே இரவு வந்து பிளாக் போட்டு விட்டு நிமிர்ந்து பார்க்க 4 நிமிட தாமதத்தால் 8 நவம்பர் என்று திகதி வந்துவிட்டது. இது 7 நவம்பர் கமலின் பிறந்த நாளுக்காக என் சமர்ப்பணம்.
7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
பித்தென்றால் கவர்ச்சியில்லை. ஒரு வீரனுக்கு வாளின் மேல் உள்ள பித்து, கவிஞனுக்கு தமிழின் மேல் உள்ள பித்து, ஒரு தாயிற்கு சேய் மேல் உள்ள பித்து. இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம். என் கணவர் சொல்வார் கமலின் படம் பார்க்கும் போது முக்கியமாக தொலைக்காட்சியில் அவர் பேட்டி போகும் போது என் முகத்தைப் பார்த்தால் 1000 வாட்ஸ் பல்பு எரியுமாம்.
சினிமாவின் மீது முழு ஈடுபாடும் காதலும் கொண்ட அந்தக் கலைஞனை யாருக்குத்தான் பிடிக்காது.. செய்யும் தொழிலே தெய்வம் என்கிற அந்த நாத்திகர் நலமாய் வாழ நானும் உங்களோடு சேர்ந்து வேண்டுகிறேன்.
நடிகர் கமலஹாசன்
அவர் பிறவிக் கலைஞர்,
நடிப்புக்கேன்றே தன்னை அர்ப்பணித்தவர்.
புதிய வயதில் அடியெடுத்து வைக்கும்
அவர் நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்..
"மீசை இல்லாவிட்டாலும் நான் ரசிக்கும் ஆண் என்றால் அது கமல்ஹாசன் மட்டும் தான். நாத்திகம் பேசுவதை ரசிப்பதும் அவர் ஒருவரிடம் தான். நாத்திகத்தையும் நல்ல மனித நேயத்துடன் கலந்து சொல்லுவார். உண்மையில் உற்றுப் பார்த்தால் உண்மையான கடவுள் பக்தர் அவர் தான்".........உண்மை .....ரசனைகளின் கம்பீரம் உங்களது ரசனை அதை பெருவதர்க்கேற்ற பிறவிக்கலைஞன் தமிழ்த் திரையுலகின் இரண்டாம் பீஸ்மர் எனது கமல்.......வாழ்த்துகிறேன் நீடுழி வாழ வாழ்த்துக்கள்....தாங்கள் வாழ்த்தியமைக்கும் நனறிகள்
உங்கள் வேண்டுதலுக்கு நன்றி ரிஷபன்...
வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி மகேந்திரன் அண்ணா...
ஹையா!! என்னைப் போலவே ஒரு கமல் பித்தர். முதல் முதலாக என் தளத்திற்கு வந்திருக்கிறீர்கள் மருதா சார். நன்றி... அடிக்கடி வாருங்கள். மறக்காமல் பின்னூட்டமும் விட்டுச் செல்லுங்கள்.
என்னைப்போல் ஒருத்தி கமல் பக்தை
Post a Comment