Sunday 13 November 2011

அந்தப் பெண்ணின் மனது...



நான் ஹை-லைன் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளராக இருப்பதால் Landmark குழுமத்தைச் சேர்ந்த Christine Hyatt என்ற பெண்மணியோடு அடிக்கடி தொலைப்பேசியில் உரையாட வேண்டி வந்தது. நாங்கள் அந்தக் குழுமத்தின் அங்கத்தவர்கள். Christine உடனான என் வேலை முடிந்ததும், இவ்வளவு பொறுமையாக பரிவோடு தன் பணியைச் செய்த அந்தப் பெண்ணிற்கு ஏதாவது செய்ய வேண்டும் போல் இருந்தது. அதிகம் இல்லை, என்னிடம் ஏற்கனவே இருந்த ஒரு Thank you வாழ்த்து அட்டையை அவளுக்கு அனுப்பி வைத்தேன்.

மறுநாள் "You made my day, Mrs. J " என்றொரு மின்னஞ்சல் அவளிடம் இருந்து வந்திருந்தது. அத்தோடு அதை நான் மறந்துவிட்டேன். கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து சென்ற வாரம் Sheffield நகரில் Landmark குழுமத்திற்கான வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாரணம் ஆயிரம் படத்தில் வருவது போல் என்னிடம் பல பேர் வந்து “நீங்கள் தானே ஷர்மி, Christine உங்களுக்கு நன்றி சொல்லச் சொன்னாள்.” என்று ஆரம்பித்து Christine அடைந்த மகிழ்ச்சியைப் பற்றியும் அவளைப் பற்றியும் சொல்லிப் போனார்கள். Christine Hyatt என்ற பெண்மணிக்கு 60 வயது என்பதோ அவள் இன்னும் சில மாதங்களில் வேலையில் இருந்து ஓய்வு பெறப் போகிறாள் என்பதோ எனக்குத் தெரியாது. அவள் அத்தனை ஆண்டுகளாக இதே பணியை பலருக்கும் மீண்டும் மீண்டும் செய்திருக்கிறாளாம். யாரும் இதுவரை தன்னை இப்படி போற்றியது இல்லை என்று பெருமைப் பட்டுக் கொண்டு இருக்கிறாளாம். வருபவருக்கும் போபவருக்கும் நான் அனுப்பிய வாழ்த்து அட்டையைக் காட்டி அந்த வாரம் முழுதும் குதூகளித்திருக்கிறாள். இப்போது அவளுடைய கணவனதும் பேரக் குழந்தைகளினதும் படங்களுக்கு இடையில் என் வாழ்த்து மடல் அவள் மேசையில் இடம் பெற்றுள்ளதாம். வேலை செய்யும் மேசையில் இடம்பெறுவது என்பது எவ்வளவு பெரிய மதிப்பென்பது வெளிநாடுகளில் அலுவகங்களில் பணி புரிபவர்களுக்குத் தெரியும்.

 

ஒரு சிறு செயல் அந்த பெண்மணியின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை விட்டுச் சென்றிருக்கிறது. இதைத் தான் எங்கள் தலைவர் கட்டிப்புடி வைத்தியம் என்று சொல்கிறார். சுற்றியிருப்பவர்களையும் அன்றாடம் பழகுபவர்களையும் உற்று நோக்குங்கள், அவர்களுக்கென்று சிறிது நேரம் ஒதுக்குங்கள். ஒரு சிறு புன்னகை, எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு வார்த்தை. இதுவே பெரிய விஷயம். அந்த நபர்களின் மனதில் உங்களுக்கென்று ஒரு சிம்மாசனமே போட்டு உட்கார்த்தி வைத்துவிடுவார்கள்.

 
உங்களை அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள்... உங்கள் மேலாளரோ நீங்கள் பெரிதாக மதிக்கும் ஒரு நபரோ உங்களிடம் சிரித்து நாலு வார்த்தை பேசி உங்கள் முதுகை தட்டிக் கொடுத்துப் போனால் அன்று முழுதும் எப்படி உணர்வீர்கள்? வயிற்றுக்குள் ஒரு பட்டாம் பூச்சி பறக்க எங்கோ மிதப்பது போல் இருக்கும் எனக்கு. அந்த உணர்வை எல்லோருக்கும் கொடுங்களேன்... பிறகு உங்கள் ஒவ்வொரு நாளும் எப்படி சிறப்பாக மாறுகிறது என்று பாருங்கள்.


 

10 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

ரிஷபன் said... Best Blogger Tips

ஒரு சிறு புன்னகை, எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு வார்த்தை. இதுவே பெரிய விஷயம். அந்த நபர்களின் மனதில் உங்களுக்கென்று ஒரு சிம்மாசனமே போட்டு உட்கார்த்தி வைத்துவிடுவார்கள்.

முதலில் நமக்கே ஒரு உற்சாகம் வந்து விடும் பிறரைப் பாராட்டும் போது. குறை சொல்லும் மனசை விட பாராட்டும் மனசுக்கு சக்தி கூடுதல். நல்ல பகிர்வு.

மகேந்திரன் said... Best Blogger Tips

அருமையாச் சொன்னீங்க சகோதரி,
நீ எனக்கு மலையை பெயர்த்துத் தரவேண்டாம்
சிறு இதழலோர புன்னகை ஒன்று சிந்துபோதும்
இவ்வுலகையே வென்று வருவேன்..
இது ஒரு காதலியை பார்த்து காதலன் சொன்னதில்லை...
தன்னிடம் வெகுவாக நட்பு பாராட்டும் ஒரு சீரிய நண்பனை பார்த்து
ஒரு அறிஞன் சொல்லியது..
எங்கோ படித்த ஞாபகம்...

சிறு செய்தியை அழகான பதிவை கொடுத்திருக்கிறீர்கள்...

sugi said... Best Blogger Tips

நான் உங்கள் அருகிலேயே பணி செய்வதால், இந்த அனுபவத்தை உங்களிடமிருந்து உணர்ந்து இருக்கிறேன்!
அருமையான பதிவு அக்கா! நன்றி...

Philosophy Prabhakaran said... Best Blogger Tips

// You made my day, Mrs. J //

அவங்க உண்மையான பெயரை சொல்ல மாட்டாங்களாமாம்...

ப.கந்தசாமி said... Best Blogger Tips

நல்ல அனுபவம்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நன்றி ரிஷபன். நாமும் சிரித்து மற்றவர்களையும் சிரிக்க வைப்பதில் இருக்கும் நன்மையை அழகாக சொல்லிவிட்டீர்கள். 

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நன்றாக இருந்தது என்று சின்னதாக முடிக்காமல் பதிலுக்கு ஒரு கவிதையே போட்டுட்டீங்க மகேந்திரன் அண்ணா. அருமை. நன்றி.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

பாவம்! என்னுடன் பணி புரிவதால் என் சிரித்த முகத்தை மட்டுமல்ல என் கோபத்தையும் அடிக்கடி பார்த்திருப்பாயே சுகி. பிறகுமா என்னை நல்லவள் என்கிறாய்...?

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

உண்மையான பெயரைச் சொல்வதில் எந்தத் தடையும் இல்லை Philo. சுயவிளம்பரமாக வந்துவிடுமோ என்று தான் போடவில்லை. என் முழுப் பெயர் திருமதி. ஷர்மிளா ஜெகன்மோகன்.
வருகைக்கும் கலாய்ப்பிற்கும் நன்றி.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

//DrPKandaswamyPhD said...
நல்ல அனுபவம்.//

நன்றி ஐயா..

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget