இன்று Louis Daguerreயின் 224வது பிறந்த நாள். இவர் தான் புகைப்படங்களின் தந்தை. அதை கொண்டாடும் முகமாக கூகுள் இன்று வெளியிட்டு இருக்கும் கருத்துப் படம் தான் இங்குள்ளது. அதில் இருக்கும் நபர்களுக்குத் தலைகளில்லை என்ற போதும் அவர்கள் சிரிக்காமல் சந்தோஷமில்லாமல் இருக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. பழைய புகைப் படங்களைப் பார்த்தால் யாரும் சிரிக்க மாட்டார்கள். அதற்கு ஒரு காரணம் உள்ளது.
Mr. Niépce என்பவர் தான் மேலே காணப்படும் உலகின் முதலாவது புகைப்படத்தை எடுத்தவர். அதற்கு “A scene outside his window” என்று பெயர். அந்தக் காலக்கட்டத்தில் ஒரு பெரிய அறிவியல் சாதணை என்ற போதும் புகைப்படம் பெரிதாகத் தெளிவாக இல்லை. அப்போது தான் Niépce புகைப்படம் எடுத்தலின் அடிப்படை ரகசியங்களை கண்டுபிடித்துக் கொண்டு இருந்ததால் இந்தப் படத்தை எடுப்பதற்கு 8 மணி நேர exposure தேவைப்பட்டது. அதாவது சூரியன் அந்தக் கட்டடங்களின் இரண்டு பக்கங்களிலும் படும் வரை பொறுத்திருக்க வேண்டியிருந்தது.அந்தக் காலக்கட்டத்தில் மனிதர்களை படம் பிடிப்பது என்ற விஷயம் கேள்விகளுக்கு அப்பால் இருந்தது. யாராலும் 8 மணி நேரம் அடாமல் அசையாமல் இருக்க முடியாது என்பதே காரணம். இந்த நேரத்தில் தான் Daguerre and Niépce ஒன்றாக இணைந்தனர்.
Louis Daguerre |
இருவரும் இணைந்து பணி புரிந்து exposureக்கான நேரத்தை 15 நிமிடமாகக் குறைத்தனர். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக Niépce ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி முழுமையாக முடிவடைவதற்குள் இறந்து போனார். Daguerre மேலும் 6 ஆண்டுகள் தனியாக ஆராய்ந்து தான் இன்று இருக்கும் புகைப்பட முறையை உருவாக்கினார்.
வெள்ளி முலாம் போட்ட காப்பர் தகட்டைத் தான் Daguerre னெகட்டிவாகப் பயன் ப்டுத்தினார். ஆனால் அப்போது கூட 15 நிமிடங்கள் ஆடாமல் நிற்க வேண்டும். ஒருவர் சிரித்தால் அவர் முகத்தில் நிறைய தசைகள் வேலை செய்யும். சீக்கிரமே களைத்து விடுவார்கள். முகத்தில் அசைவுகள் வந்து விடும். அதனால் தான் பழைய புகைப்படங்களில் யாரும் சிரிப்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக exposure நேரம் குறைவதற்கு பல தசாப்தங்கள் எடுத்தது. இப்போது நொடிக்குள் பல ஷாட்டுகள் எடுக்கும் காமேரா கூட வந்துவிட்டது.
ஒரு நிமிஷம் கூட ஓரிடத்தில் நிற்காத என் வாலுப் பையன் போன்ற குழந்தைகளையும் சிறுவர்களையும் எப்படித் தான் படம் பிடித்தார்களோ தெரியவில்லை. அதனால் தான் பழைய படங்களில் சிறுவர்களும் குறைவாகக் காணப்பட்டார்கள்.
7 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
அடேங்கப்பா!புகைப்படம் எடுப்பதில் இவ்வளவு விடயம் அடங்கியிருக்கிறதா!வாலுப்பையன் அசத்துறான்! நன்றி...
அடேங்கப்ப இதுதான் காரணமா சிரிக்காமல் இருப்பதற்கு!..
வாலுப் பயல் நல்லாத்தான் போஸ் கொடுக்கின்றான் .வாழ்த்துக்கள் மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .நேரம் கிட்டினால்
வாருங்கள் என் தளத்தில் கவிதை காத்திருக்கு .
புகைப் படம் என்று மாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் இன்று சர்வசாதாரணமாகப் பயன் படுத்திக் கொண்டிருக்கும் பல பொருட்களுக்குள்ளே இப்படி பல விஷயம் உள்ளது. நன்றி சுகி.
வருகைக்கு நன்றி ஜீவா சார்...
பின்னுட்டத்திற்கு நன்றி அம்பாளடியாள். இதோ உன் தளம் நோக்கித் தான் வந்து கொண்டிருக்கிறேன்...
nice..
//இராஜராஜேஸ்வரிsaid...
nice..//
Thanks..
Post a Comment