Saturday 5 November 2011

மாயக்கண்ணாடி-05/11/2011




அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
தேன்நிலவு முடிந்து வந்த பின் மனைவியைப் பார்த்து “பேயே” என்று திட்டும் கணவன்மாரைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் மனைவியாக வரப் போறவள் ஆசைப்பட்டாளே என்பதற்காக Halloween அன்று திருமணத்தை வைத்ததும் இல்லாமல் எலும்புக் கூடுகள் போல் உடை அணிந்து திருமணம் செய்திருக்கிறாரே இந்த Steve Vailes இவரை என்னவென்று சொல்வது? கல்யாணப் பெண் Karen கருப்பு உடை அணிந்ததும் இல்லாமல் வந்திருந்த 60 விருந்தாளிகளும் பேய்கள் போலவே கிளம்பி வந்திருக்கிறார்கள். நம்மூர்ல தான் ஆயிரம் காலத்துப் பயிர் என்று கவலைப் படுவார்கள் இவர்கள் ஆறு மாதத்திற்குள் அறுவடை செய்து விடுவதால் பரவாயில்லை போலும்...


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


எங்க ஊர்ல பொல்லைக்(தடியைக்) கொடுத்து அடி வாங்கிறதுன்னு இதைத் தான் சொல்வார்கள். 48 வயதான Robert Owen என்பவர் 150mph வேகத்தில் மோட்டார் பைக்கை ஓட்டிச்சில்வதை தன் ஹெல்மெட்டில் பொருத்தியிருந்த காமேரா மூலம் விடியோ எடுத்து அதை youtubeலும் போட்டிருக்கிறார். மணித்தியாலத்திற்கு 150 மைல் என்பது இந்தியா இலங்கையில் மணித்தியாலத்திற்கு 240 கிலோமீட்டர் வேகம். இதைப் பார்த்த யாரோ காவல்துறைக்கு புகார் கொடுக்க ஐயாவின் லைசென்ஸ் பறிக்கப்பட்டு,பைக் பறிமுதல் செய்யப்பட்டு,  5 ஆண்டுகள் பைக் ஓட்டத் தடை, ஓராண்டு சிறை வாசம் அத்தோடு 150 மணிநேர சமூகப் பணிகள் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாகியிருக்கு. இது இவருக்குத் தேவையா?  


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::


ஐரோப்பாவில் பிரபல்யமான ILC வானோலியின் பிரதான அணுசரணையாளராக ஹை-லைன் நிறுவனம் இருப்பதால்,  அவர்கள் நடத்திய ஜூனியர் சூப்பர் ஸ்டார் நைட்டில் கலந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. பிரியதர்ஷ்னி, திவ்யதர்ஷ்னி மற்றும் பல குரல் மன்னன் சேது தொகுத்து வழங்கினார்கள். மைம் கலைஞர் கோகுல் கலந்துகொண்டு எகிப்திய நடனம் என்று சொல்லி நிற்காமல் 4 நிமிடங்களுக்கு சுற்றிக் கொண்டே இருந்தார். நடனம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் அவ்வளவு நேரம் சுழன்று கொண்டே இருந்ததற்கு பாராட்ட வேண்டும்.


ஜூனியர் சிங்கர்களான ஷ்ரவன், நித்யஸ்ரீ, ஸ்ரீனிஷா மற்றும் ப்ரியங்கா கலந்து பாடல்கள் பாடினார்கள். நல்ல குரல் வளம், சிறந்த பயிற்சி என்பவற்றால் பெரியவர்களை விட சிறப்பாகவே பாடினார்கள் அந்தச் சிறுவர்கள். இன்னும் வயதாக ஆக மேலும் சிறப்படைய இறைவனை வேண்டுகிறேன். இவர்களோடு செல்வி. ஆதர்ஷா நடாத்தும் Dance Lab நடனக் குழுவினர் பாடல்களுக்கு இடையில் நடன விருந்தும் வழங்கினார்கள். இலங்கையைச் சேர்ந்த தற்போது டெண்மார்க்கில் வசிக்கும் Shreviya (சரியாக எழுதியிரிக்கிறேனோ தெரியவில்லை) என்ற பெண் மிக அருமையாகப் பாடினாள். இனிமையான மாலைப் பொழுதாக அமைந்தது.

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மோடர்ன் ஆர்ட் என்ற பெயரில் அஷ்ட கோணலகா இருக்கும் பொருட்களை வைத்து விட்டு அதற்கு விளக்கமும் கொடுப்பது எனக்கு என்றுமே விளங்குவது இல்லை. பாவம் இந்த சுத்தம் செய்யும் பெண்ணிற்கு மட்டும் என்ன தெரியப் போகிறதாம். 

ஜெர்மனியின் டாட்முண்ட் நகரில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்திற்கு ஒரு தனியார் collectionலிருந்து Martin Kippenberger என்ற சிற்பியின் மொடெர்ன் சிலை?!! ஒன்றைக் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள். “கூரை ஒழுகும் போது” என்று அதற்கு தலைப்பாம். குறுக்கும் நெடுக்குமாக இருக்கும் சில குச்சிகளின் கீழ் ஒரு பக்கேட், அதற்குள் காய்ந்து போன மழைத் தண்ணியைக் குறிக்கும் வகையில் பழுப்பு நிற பெயிண்ட் அடித்திருந்ததாம். இந்தப் பெண்மணி அந்த பெயிண்டைத் தான் அழுக்கு என்று நினைத்து பிளீச் போட்டு நன்றாக சுரண்டி சுத்தம் செய்து விட்டார். கலை உலகமே கொதித்துப் போய் இருக்குதாம். அதை மீண்டும் சரி செய்ய அந்த சிற்பி வேறு உயிரோடு இல்லை. எல்லாம் கிடக்கட்டும் போங்கள்... இதன் விலையைக் கேட்ட பின் தான் இந்தப் படத்தைப் பல முறை பார்த்து விட்டேன். அதில் அப்படி என்ன இருக்கிறதென்று தான் தெரியவில்லை. விலை... அதிகம் இல்லை gentleman வெறும் £650,000 தான். இந்தியப் பெறுமதி கிட்டத்தட்ட 5 கோடி ரூபா. இப்பப் பார்த்து சொல்லுங்க இந்தப் படத்தில் ஏதாவது புதுமை தெரியுதான்னு..

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

ப.கந்தசாமி said... Best Blogger Tips

// இப்பப் பார்த்து சொல்லுங்க இந்தப் படத்தில் ஏதாவது புதுமை தெரியுதான்னு..//

எனக்குப் புரிஞ்சு போச்சு. இந்த சிலையை (?) செய்தவன் மூளை இப்படித்தான் இருக்கும்!

ரிஷபன் said... Best Blogger Tips

ஒரு பிரபல ஓவியர் வரைந்த நோயாளியின் ஓவியத்தைப் பார்த்து ‘மலேரியா’ என்று சொன்ன கதை நினைவில் வந்தது.
செய்திகள் அனைத்தும் சுவாரஸ்யம்

மகேந்திரன் said... Best Blogger Tips

நவம்பர் மாதத்தின் முதல் மாயக்கண்ணாடி...

முதலிலேயே ஒரு அழகான செய்தி, அடிக்கடி மனைவிகளை மாற்றும்
கலாச்சார வழி வந்தவர்கள், எப்போதும் புதுமையை நாடுபவர்கள் செய்யும்
கூத்துகளை நறுக்குன்னு சொல்லி கடைசியில் ஆறுமாதத்தில் அறுவடை செய்வதால் தான் இப்படியோ என்று சொன்னீர்கள் பாருங்கள்.. அங்கே
கைத்தட்டல்கள்..
இரண்டாவது விவேகமற்ற வேகத்துக்கு கிடைத்த சரியான தண்டனை.

இப்படி ஒவ்வொரு பிம்பமும் மனதை கவருது சகோதரி....
................................................................

கொஞ்சம் நம்ம வலைப்பக்கமும் வாங்க.....

http://www.ilavenirkaalam.blogspot.com/

sugi said... Best Blogger Tips

நம்மூர்ல தான் ஆயிரம் காலத்துப் பயிர் என்று கவலைப் படுவார்கள் இவர்கள் ஆறு மாதத்திற்குள் அறுவடை செய்து விடுவதால் பரவாயில்லை போலும்...

நகைசுவையுடன் கூடிய அர்த்தமான வரிகள்!

Interesting! Thank U...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget