பீர் ஆறு ஓடியதற்கே பல “குடி”மக்கள் கவலைப் பட்டார்கள்... உங்களை நோக்கி ஒரு ஒயின் அலை அடித்தால் எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட ஏழாயிரம் ஒயின் போத்தில்கள் உடைந்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு ஒயின் கம்பனியில் நடந்த சம்பவம் இப்போது தான் யூ டியூப்பில் உலாவத் தொடங்கியுள்ளது. இதோ அந்த ஒயின் அலை உங்களுக்காக...
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Apple iPhoneஐ Samsung நிறுவனம் வென்றுவிட்டதாக சொல்கிறார்கள். உலகளவில் Smartphone விற்பனையில் கடந்த மூன்று மாத கணக்குகளைப் பார்க்கும் போது ஆப்பில் 14.6% தான் உள்ளது. ஆனால் சாம்சங் 23.8% இருந்தது. Android system புகழ் பெற்று வருவதே இதற்கு காரணம் என்று சொல்கிறார்கள். சென்ற ஆண்டை விட சாம்சங் விற்பனை 37% அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. சாம்சங்கின் நவீன வெளியீடான் Galaxy Nexus அடுத்த மாதம் இங்கிலாந்தில் வெளி வரப்போகிறது. அதன் பின் விற்பனை இன்னமும் அதிகமாகும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இங்கிலாந்தின் முடி உரிமை சட்டம் 17ம் நூற்றாண்டு இயற்றப்பட்டது. இதன் படி பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தால் அவனே அரசனாவான், முடிக்குரியவர்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரை மணம் முடிக்க முடியாது போன்ற சட்டங்கள் உள்ளது. தற்காலத்தில் இருக்கும் சம உரிமைக் கோட்பாடுகளுக்கு புறம்பாக உள்ளதாக சொல்லி முடி உரிமைச் சட்டத்தில் சீர் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக ராணியின் அவுஸ்திரேலிய விஜயத்தின் போது பிரதமர் டேவிட் கமரூண் அறிவித்துள்ளார். இங்கிலாந்து முடிக்குக் கீழ் இயங்கும் அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட உள்ள 16 நாடுகளுக்கிடையில் ரகசிய வாக்கெடுப்பில் இது உறுதியாக உள்ளது. அதனால் வில்லியமிற்கு பிறக்கும் முதலாவது குழந்தை பெண்ணாக இருந்தால் அவளே முடிசூடிக் கொள்வாள். அது போல் அந்தக் குழந்தை எந்த மதத்தினரையும் மணந்து கொள்ளலாம். ஆனால் இங்கிலாந்து அரசர் அல்லது அரசி தான் church of Englandற்கும் தலைவர் என்பதால் அவர் மட்டும் மதம் மாற முடியாது.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டியில் பங்கெடுத்திருந்தேன். ஆனால் ஏதோ காரணத்தால் என் யுடான்ஸ் ஓட்டுப்பட்டை வேலை செய்யவில்லை. இதைக் கவனித்த கேபிள் சங்கர் என்னைத் தொடர்பு கொண்டு அதை என் தளத்தில் சேர்க்க வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறினார். நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. தன் பலப்பல வேலைகளுக்கு இடையிலும் எனக்காக நேரம் ஒதுக்கி அந்தப் பிரச்சிணையை கேபிள் சார் சீர்திருத்தித் தந்தார். அவர் அப்படி செய்திருக்கத் தேவையில்லை. ஆனால் சக பதிவர்களுடன் நல்ல உறவு முறை பேணுவதில் தான் எவ்வளவு சிறந்தவர் என்று மீண்டும் ஒரு முறை உணர்த்திவிட்டார். நன்றி கேபிள் சார்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
4 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
ஒயின் அலையை பார்த்தால்
இப்பவே கண்ணை கட்டுது....
யுடான்ஸ் சிறுகதைப் போட்டியில்
வெற்றிபெற வாழ்த்துக்கள் சகோதரி.
மாயக்கண்ணாடி... இன்னும் பல செய்திகளை காட்டலாமே!
நன்றி மகேந்திரன் அண்ணா...
ஒரே பதிவில் நிறைய செய்திகளைப் போட்டால் திகட்டி விடுமோ என்ற எண்ணம் என்னை எப்போதமே குழப்புகிறது, கேபிள் சார். உங்கள் கருத்தென்ன?
Post a Comment