மயூரி அபிராமி ஜெகன்மோகனுக்கு 10 வயதாம்... நம்பமுடியவில்லை. ஆபரேஷன் தியட்டரில் அரை மயக்கத்திலிருக்கும் போது என் கணவர் காட்டிய சின்ன பொம்மைக்குட்டியின் முகம் தான் இப்போதும் ஞாபகம் வருகிறது. அதுவரை பட்ட கஷ்டங்கள் மறந்து... 9 மாதம் புரிந்த தவத்திற்கும் 2 மாத கால மருத்துவமனை சிறை வாசத்திற்கும்... கிடைத்த பலன் என்று மனம் குதூகலித்த தருணம்.
வீடு வந்த பின்னும் என் இரத்த அழுத்தம் கட்டுப் படாததால், அவள் அம்மம்மா, மாமா, சித்தி மற்றும் தந்தையின் அணைப்பிலேயே வளர்ந்தாள். என் உடல்நிலை காரணமாக பாதி நேரங்களில் அவள் தான் எனக்கு அன்னை. என் மேல் காட்டும் கரிசணையும் என் மருந்து மாத்திரகளை எடுத்துக் கொடுக்கும் பொறுப்பையும் பார்க்கும் போது நெஞ்சாங்கூடு பெருமையில் முட்டும்.
உலக விஷயங்கள் விரல் நுனியில், தெரியாது என்ற சொல்லப் பிடிக்காமல் உடனே அதற்கான தேடல், மொழிகள் பல கற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வம், இப்படி இன்னும் பலப் பல விஷயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். “அவள் தன் வயதொத்தவர்களை விட உயர் சிந்தணைகள் (High Intellectual Thinking) உடையவள்.” என்று வகுப்பாசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால் நானும் என் கணவரும் எதுவும் வித்தியாசமாக செய்யவில்லை. நல்ல பண்புகளையும் சிறந்த கல்வியையும் கொடுக்க வேண்டும் என்று மாத்திரமே நினைக்கிறோம். ஒரு காட்டு மல்லி பூச்செடி போல் தானே தன் கிளைகளைப் பரப்பி பற்றி படருகிறாள். என் காளி அம்மன் அவளுடன் என்றும் நின்று துணை புரிவாளாக...
அவளுடைய பிறந்தநாள் விழா என் வீட்டில் உற்றார் உறவினர்களுடன் நேற்று சிறப்பாக மன நிறைவோடு நடந்தது. “10 வயது நிறைவதற்கே இவ்வளவு பெருமிதமடைகிறாய அவள் வாழ்வில் இன்னும் எத்தனை எத்தனை கட்டங்கள் தாண்ட வேண்டுமே அப்போதெல்லாம் என்ன செய்வாய்?” என்று அவள் தந்தை என்னை சீண்டுகிறார். உண்மையில் இதை விட இவ்வுலகில் யாரும் பெருமிதமடையவோ சந்தோஷப்படவோ முடியுமா என்று சந்தேகமாக இருக்குது.
8 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
உங்கள் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
// என்று அவள் தந்தை என்னை சீண்டுகிறார் //
அதென்ன எல்லா அம்மாக்களுமே ஒரே மாதிரி இருக்குறீங்க... என் புருஷன்னு சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க...
Philo சார், எந்தப் பெண்ணிற்குமே தன் கணவர் என்று சொல்வதை விட தன் மழலையின் தந்தை என்று சொல்வதில் தான் சந்தோஷம்... பெருமை... எல்லாமுமே...
வீட்டில் மனைவியிருந்தால் கேளுங்கள் விளக்கமாக சொல்லித்தருவார்!
நன்றி மழை... உங்களைப் போல் முகமறியாதவர்கள் மனமார வாழ்த்துவது மகிழ்ச்சியாக உள்ளது.
// வீட்டில் மனைவியிருந்தால் கேளுங்கள் விளக்கமாக சொல்லித்தருவார்! //
மனைவியில்லை... அம்மா இருக்கிறார்... சரி பொதுவில் என் புருஷன் என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறார் போல என்று நானாக நினைத்துக்கொண்டேன்...
மனைவி இல்லாததால் தான் இந்த சந்தேகம்...
மனைவியும் வந்து ஒரு மழலையும் வந்த பின் இந்த உரையாடலைத் தொடருவோம்...
Mayoo- க்குப் பொருத்தமான Cake!
குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Post a Comment