வெகு நாட்களாக பலத்த பில்டப் இருந்ததால், தீபாவளியைக் கொண்டாடுவதற்காக வேலை முடிந்ததும் இரவுக்காட்சிக்கு 7ஆம் அறிவு திரைப்படத்திற்கு டிக்கட் எடுத்திருந்தோம். 9:15ற்கு தொடங்க வேண்டிய படம் 9:20 ஆகியும் தொடங்கவில்லை.
அப்போது தான் ஏதோ பிரச்சிணை நடப்பது புரிந்தது. இங்கிலாந்தில் இந்தப் படத்திற்கு 15 certificate கொடுத்துள்ளார்கள். ஆனால் சினிமா பார்க்க குழந்தைகளோடு பலர் வந்திருந்தனர். திரையரங்கு நிர்வாகத்தினர் குழந்தைகளும் சிறுவர்களும் வெளியேறினால் தான் படம் போடுவோம் என்று சொல்லிவிட்டார்கள். நம்மவர்கள் விடுவார்களா? ஒரே அமளி துமளி தான். ஏன் முதலில் உள்ளே விட்டீர்கள்? குழந்தைகளை எப்படி தனியாக வெளியில் அனுப்புவது? என் இனிய நாளை பாழாக்கிவிட்டீர்கள்... என்று குதித்தார்கள். நிர்வாகம் தங்கள் பிழை தான் என்று ஒருவாரு ஒப்புக்கொண்டு, அதே அரங்கில் வேறு திரையில் ஓடிக் கொண்டிருந்த வேலாயுதம் படம் பார்க்க அனுமதித்தார்கள். பெற்றோரும் வேறு வழியில்லாமல் புலம்பிக் கொண்டே வேலாயுதம் பார்க்கச் சென்றார்கள். சிலர் ரீஃபண்ட் எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள். பொதுவாக இங்கிலாந்தில் ஓடும் தமிழ் படங்களுக்கு 12A certificate தான் கொடுப்பார்கள். இதற்காக பாதிப் படத்தையே வெட்டித் தின்று விடுவார்கள். இங்கு வீட்டில் குழந்தைகளை விட்டு வருவதற்கான வசதிகள் எல்லோருக்கும் அமையாது. அவர்களால் திரையரங்குகளுக்குப் போகவே முடியாது. பின் எப்படி வியாபாரம் நடக்கும்?
7ஆம் அறிவில் படம் முழுதுமே கோரக்காட்சிகள் வருவதால் சென்சார் கை வைத்தால் கதையே புரியாமல் போய் விட்டிருக்கும். எனக்கென்றால் படத்தைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இசை வாய்க்கவில்லை. பாடல்களிலும் தோய்வு. ஆரம்ப காட்சிகள் சிலதிற்கு பின் ரவிக்குமார் எங்கு போனார் என்று தெரியவில்லை. சூரியா வருகிறார் போகிறார். 6 பேக்கைக் காட்டுவதை தவிர நடிப்பதற்கு வாய்ப்பில்லை.
செதுக்கி வைத்த செப்பு சிலை போல் இருக்கிறார் ஸ்ருதி. தாய் தந்தை இருவரிடமும் இருந்து மொத்த அழகையும் அள்ளி வந்து விட்டார். எல்லாம் DNA செய்யும் வேலை. ஆனால் அதோடு இவர் வேலையும் முடிந்து விட்டது. பல விஞ்ஞான வரலாற்றுக் குறிப்புகளைத் தந்து டாக்குமெண்டரி பார்க்கும் உணர்வு தான் ஏற்படுத்துகிறார்கள். படம் பார்க்கும் என்னை இவ்வளவு முட்டாள் என்று நினைத்து விட்டார்களா என்று அந்த சைனீஸ்காரன் டாங் லீ வந்தாலே நான் டென்ஷன் ஆகிவிட்டேன். இரணடரை மணி நேரம் ஏதாவது காட்ட வேண்டும் என்று படத்தை இழு இழு என்று இழுத்துவிட்டார்கள்.
எங்கள் உடம்பிற்குள் மூதாதைகளின் DNA இருக்கும் உண்மையான விஞ்ஞானக் கருத்தை முன் வைத்து விட்டு அதை 12 நாட்களுக்குள் தூண்டலாம் என்று மாயாஜாலக் கதை சொன்னது தான் தாங்க முடியலை.
எங்கள் உடம்பிற்குள் மூதாதைகளின் DNA இருக்கும் உண்மையான விஞ்ஞானக் கருத்தை முன் வைத்து விட்டு அதை 12 நாட்களுக்குள் தூண்டலாம் என்று மாயாஜாலக் கதை சொன்னது தான் தாங்க முடியலை.
அப்பப் படத்தைப் பற்றி நல்லதாக சொல்ல எதுவுமே இல்லையா என்கிறீர்களா? நான் பல நாட்களாக எல்லோரிடமும் சொல்லி ஆதங்கப் படும் விஷயத்தை மாஸ் மீடியாவில் சொல்லியிருக்கிறார்கள். அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம் முன்னோர்கள் பல அரிய நுட்பங்களை அறிந்து இருந்தும், அவற்றை முறையாக தலை முறைகளுக்கு கடத்தாததனால் மறைக்கப்பட்டு விட்டன. ஜாதகம் பார்ப்பது, கை கட்டை விரல் ரேகையை வைத்து ஆயுள் சரித்திரத்தை முன் கூறுவது, பல நோய்களுக்கான மருந்துகள், இப்படி பலப் பல. ஆனால் இடையில் போலியானவர்களாலும் அரைகுறை அறிவோடு செயல்படுபவர்களாலும் இது மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தப் பட்டு விட்டன.
மொத்தத்தில் தியெட்டரை விட்டு வெளி வரும் போது நான் தமிழன்/தமிழச்சி என்று சொல்லிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்து வரும் அந்த உணர்வைத் தந்ததற்காகவும் சாமாணியர்களுக்கும் போதிதர்மன் என்ற மாமேதையை அறிமுகப் படுத்தியதற்காகவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
மொத்தத்தில் தியெட்டரை விட்டு வெளி வரும் போது நான் தமிழன்/தமிழச்சி என்று சொல்லிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்து வரும் அந்த உணர்வைத் தந்ததற்காகவும் சாமாணியர்களுக்கும் போதிதர்மன் என்ற மாமேதையை அறிமுகப் படுத்தியதற்காகவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
13 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
வேலாயுதம் பார்க்கத் திருப்பி அனுப்பப்பட்டவர்களை காப்பாற்றப்பட்ட்டு விட்டார்கள் என்று சொல்வதா இல்லை நன்றாக மாட்டுப்பட்டு விட்டார்கள் என்று சொல்வதா? உங்கள் அனுபவத்துடன் கூடிய விமர்சனம் நன்று. டாங் லீ உங்களை `டெரர்` பண்ணிட்டுறா?chill :)
//நம் முன்னோர்கள் பல அரிய நுட்பங்களை அறிந்து இருந்தும், அவற்றை முறையாக தலை முறைகளுக்கு கடத்தாததனால் மறைக்கப்பட்டு விட்டன. ஜாதகம் பார்ப்பது, கை கட்டை விரல் ரேகையை வைத்து ஆயுள் சரித்திரத்தை முன் கூறுவது, பல நோய்களுக்கான மருந்துகள், இப்படி பலப் பல. ஆனால் இடையில் போலியானவர்களாலும் அரைகுறை அறிவோடு செயல்படுபவர்களாலும் /////
சரியால சொன்னீர்கள் ஷர்மி...
எத்தனை பெருமைகள் நம்மிடம் பொக்கிஷங்களாய் பல தகவல்கள் ஆனால் அவற்றை சரிவர விளம்பரப்படுத்தாமல்போய்விட்டதிலும் அரைகுறையாய் அறிந்தவர்களின் போலி அறிவினாலும் மகிமையே பலர் அறிய இயலவில்லை..திரைப்பட விமர்சனமும் உங்களுடையது இயல்பாக இருக்கிறது.
ஏழாம் அறிவை குழந்தைகள் பார்க்க விடாமல் செய்த சென்சாருக்கு நன்றி சொல்லுங்கள்.
ஏழாம் அறிவை ஹாலிவுட்காரர்கள் காப்பியடிக்கலாம் என்ற முருகதாசின் பேட்டியை ஒட்டி ஒரு பதிவு எழுதி உள்ளேன்.
வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன்.
சுகி, நான் வேலயுதத்தைப் பார்ப்பதில்லை என்று முன்னமே முடிவெடுத்திருந்தேன். 7ஆம் அறிவே இந்தப் படென்றால் இனி அதைக் கட்டாயாம் பார்க்க மாட்டேன். அதனால் பார்த்து வந்தவ்ர்களிடம் தான் கேட்க வேண்டும் காப்பாற்றப்பட்டார்களா அல்லது மாட்டிக்கிட்டார்களா என்று...
நன்றி ஷைலஜா...
சடங்கு சம்பிரதாயம் என்று மக்களைப் பயமுடுத்தி செய்ய வைத்ததற்கு பதிலாக அதன் முழு விளக்கத்தையும் புரிய வைத்திருந்தாலே பல விஷயங்கள் வெளி வந்திருக்கும் என்பது என் கருத்து.
சென்சாருக்கு நன்றி சொல்வது இருக்கட்டும். பலத்த வேலைக்கு இடையில் மாதம் ஒருமுறை தமிழ் சினிமா பார்க்கப் போகும் என் நிலையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் சார்...
இதோ உங்கள் வலத்தளம் நோக்கித் தான் பயனிக்கிறேன்...
யார் பெத்த புள்ளையோ தெரியலை.. கெட்ட வார்த்தைகளால் என்னைத் திட்டி பின்னூட்டம் விட்டிருந்தார்கள். என்னடான்னு பார்த்தால் நான் ரவிக்குமார் என்று போட்டிருந்ததை டைரக்டர் என்று நினைத்து விட்டிருக்கிறார்... நான் எழுதியது காமராமேன் ரவிக்குமாரைப் பற்றி... ஏன் தான் இப்படி அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு கருத்துச் சொல்ல கிளம்புகிறார்களோ தெரியவில்லை...
என் மகளும் அடிக்கடி இந்தத் தளத்தைப் பார்ப்பதால் அந்த பின்னூட்டத்தை அழித்துவிட்டேன்.
பகிர்வுக்கு நன்றி
முடிந்தால் இதனை பாருங்கள்
என்னுடைய தளத்தில்
(விளம்பரத்திற்காக அல்ல)
http://valaiyukam.blogspot.com/2011/10/blog-post_25.html
ஏழாம் அறிவு தமிழர்களை ஏய்க்கும் அறிவா?
மொத்தத்தில் தியெட்டரை விட்டு வெளி வரும் போது நான் தமிழன்/தமிழச்சி என்று சொல்லிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நடந்து வரும் அந்த உணர்வைத் தந்ததற்காகவும் சாமாணியர்களுக்கும் போதிதர்மன் என்ற மாமேதையை அறிமுகப் படுத்தியதற்காகவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.//
இந்த கடைசியாக சொன்ன வரிகள் மட்டும் மனதிற்கு சந்தோசமாருக்கு... பகிர்வுக்கு நன்றி சகோ!.
இடையில் போலியானவர்களாலும் அரைகுறை அறிவோடு செயல்படுபவர்களாலும் இது மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தப் பட்டு விட்டன.
சரியாகச் சொன்னீர்கள்.
நிறைய விஷயங்கள் தொலைந்து போய் விட்டன முறையான ஆராய்ச்சி இல்லாமல்.
உங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ஹைதர் அண்ணா.
உங்கள் வளைத்தளம் பார்த்தேன் அருமை.
ஏன் ராஜெஷ், உங்களுக்கு 7ம் அறிவு என்ற சினிமாவில் வரும் டெக்னிகல் விஷயம் பற்றி குறை கூறியது பிடிக்கவில்லையா?
நம் ஈழத்திற்காக கருணாநிதி துரும்பைக் கூட அசைக்கவில்லை. இப்போது எல்லாம் ஓய்ந்த பின் அவர் வாரிசு பணம் பார்க்கும் நோக்குடன் மட்டும் எடுத்த படத்தை என்னால் மனசறிந்து போற்ற முடியவில்லை. கோபம் கொள்ளாதெ தம்பி...
மற்றைய இனங்கள் காட்டுமிராண்டிகளாக திரிந்த காலத்திலேயே நாங்கள் நாகரிகத்தின் உச்சிக்குப் போய்விட்டோமாம். உலகையே கட்டி ஆழ வேண்டியவர்களை திசை திருப்பி அடிமைப் படுத்தி வைத்திருப்பது வருத்தத்திற்குரிய விஷயம் ரிஷபன்.
வருகைக்கு நன்றி.
Post a Comment