Sunday, 23 October 2011

மீண்ட சொர்க்கம் - சவால் சிறுகதைப் போட்டி 2011


யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம். நான் எழுதும் இரண்டாவது கதை. படித்துப் பார்த்து சொல்லுங்கள்...


கண்களை மூடி தியானத்தில் இருந்தேன். “ஓம் காத்யாய நாய வித்மஹி, கன்ய குமாரி தீமகி தன்னோத் துர்கி பிரசோதயாத்...”. 108 முறை உச்சரித்து கண்களைத் திறந்த போது மனம் தெளிந்து இருந்தது. சின்ன வயதில் அம்மா சொல்லிக் கொடுத்த மந்திரம். இன்று வரை என்னைக் கை விட்டதில்லை. மேஜையில் வந்தமர்ந்தேன். AC காற்றில் முன்னாலிருந்த காகிதத் துண்டு படபடத்துக் கொண்டிருந்தது.
பெரிய வீடு. மாடி பால்கனியில் அப்பாவும் அம்மாவும் பார்த்துக் கொண்டிருக்க வீட்டிற்கு முன்னால் இருக்கும் புல்வெளியில்அன்று கால்பந்து ஆசிரியர் சொல்லித் தந்ததை அவர்களுக்கு செய்து காட்ட மிகவும் பிடிக்கும். மெல்லிய குரலில் பாடிய படியே வேலைகளைச் செய்யும் அம்மாவைப் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்கும். அப்பாவுடன் சேர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடப் பிடிக்கும்.இப்படி நிறையப் பிடிக்கும். பிடித்தெல்லாம் ஒரு நாள் இல்லாமல் போன போது தான் இடிந்து போனேன். அப்பா திடீரென்று ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். ஒன்றும் தெரியாத அம்மாவை சுற்றியிருப்பவர்கள் ஏமாற்றினார்கள். 6 மாத்திற்குள் நடுத்தெருவிற்கு வந்தோம். ஏழ்மையைத் தாங்கும் வலிமை இல்லாமல் அம்மாவும் இறந்து போனார். அதற்குள் 14 வயதாகிவிட்டது. பிறகென்ன பிளாட்பார்ம் தான். அப்பத்தான் சின்னவரின் நட்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் சின்னவருக்கு கையாள், அப்புறம் தோஸ்த், அப்புறம் தனியா தொழில் தொடங்கிட்டேன்... தனியா வரணும்னு முன்னாடில்லாம் நினைத்ததில்லை. சௌமியாவைப் பார்க்கும் வரை...

அண்ணாசாலையில் இருக்கும் அந்த பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் அவளை முதன் முதலில் பார்த்தேன். பார்த்ததும் மனதில் பட்டாம் பூச்சிகள் பறந்தது என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். ஆனால் என்னமோ அவளைத் திரும்பித் திரும்பிப் பார்க்க வெண்டும் பொல் இருந்தது. அவளும் கடைக் கண்ணால் என்னைப் பார்த்த படியே சிரித்துக் கொண்டு தோழிகளுடன் போய்விட்டாள். உடனே பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை. இரவு மெத்தையில் சாய்ந்த போது தான் மீண்டும் அவள் முகம் ஞாபகம் வந்தது. அவள் கண்ணோ மூக்கோ எதோ ஒன்று அம்மாவை ஞாபகமூட்டியது. இரண்டு மூன்று நாட்கள் எதையோ தொலைத்ததைப் போல் இருந்தது. என்னவோ தோன்ற கடைக்குப் போய் சார்ட் பேப்ப்ர், போஸ்டர் கலர் எல்லாம் வாங்கி வந்து அவள் முகத்தை வரைய ஆரம்பித்தேன். பதினோரு வயசிற்கு பிறகு தூரிகையைத் தொட்டதில்லை. ஆனால் ஏதோ உந்தித் தள்ள அவள் முகம் அப்படியே வந்தது.


அப்பாவுடன் விளையாடிய நாட்கள் எல்லாம் ஞாபகம் வந்தது. அந்தக் கணம் முடிவெடுத்தேன் அவள் தான் இனி எனக்கு எல்லாமென்று. சிட்டி எங்கும் ஷாப்பிங் மாலிலும் டிஸ்கோதேயிலும் தேடித் திரிந்தேன். ஆனால் கடைசியில் அவள் என் கண்ணில் பட்டது கபாலீசுவரர் கோயிலில்... சின்னவரின் மகனின் பிறந்த நாளுக்காக போயிருந்த போது. விடுவேனா அவளை. ஒரு மாதிரி பின்னால் முன்னால் அலைந்து திரிந்து என் வசமாக்கிவிட்டேன். மிகவும் நல்ல பெண். ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்த்ததால் மாடர்னான பொண்ணுன்னு நினைச்சிருந்தேன். அன்னைக்கு அவள் தோழியின் பிறந்தநாள் பார்ட்டியாம். நல்லா சமைப்பாள், பாடுவாள், டான்ஸ் கூடத் தெரியும். சிரிக்க சிரிக்க மணிக்கணக்கா அவள் வீட்டு மொட்டமாடியிலிருந்து பேசியிருக்கோம்... அலைபேசியில். ஒரே ஒரு சின்னப் பிரச்சிணை தான். அவள் அப்பா நீதிபதி, அண்ணா ACP. வெளிநாட்டில் செட்டிலாவது என்று முடிவெடுத்தோம். தனியா தொழில் தொடங்கி சிறுக சிறுக சுவிஸ் பாங்கில்சேர்த்துக் கொண்டிருந்தேன். கடைசியாக ஒரு நகைக் கடை கொள்ளை. பேப்பரில் எல்லாம் பரபரப்பாக போனது. அமளி அடங்கியதும் நானும் சௌமியும் மலேசியா, சிங்கப்பூர் என்று சுற்றி விட்டு பம்பாயில் செட்டிலாவதென்று ப்லான். சௌமி என்னை ஒரு தொழிலதிபர் என்று நம்பிக்கொண்டிருக்கிறாள். அப்படிப் பட்ட நேரத்தில் தான் இந்த இடி... SP கோகுல் தான் அந்த நகைக் கடை கேசை நடத்துபவர். என்னுடன் பல நாட்களாய் இருந்த விஷ்ணு எப்படி இன்ஃபொர்மெர் ஆனானோ தெரியவில்லை. காலையில் இஸ்திரி போடும் பையன் விஷ்ணு அண்ணா சட்டையில் இருந்தது என்றுஇந்தத் துண்டைத் தந்த போது தான் அதிர்ந்து போனேன். என் சுவிஸ் பாங்க் கோட் தான் இது. உடனேயே கோடை மாற்றிவிட்டேன்.
ஆனால் இவ்வளவும் செய்த விஷ்ணுவை சும்மா விடலாமா...? அதற்குத் தான் தியானம்... மனத்தெளிவு... எல்லாம். இன்னொரு பேப்பரில் டைப் செய்து பார்த்தேன் “SP கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் கொடுத்துள்ளேன். கவலை வேண்டாம்”. விஷ்ணுவின் அலைபேசி வந்தது.
“எங்கண்ணே இருக்கிறீங்க”. எவ்வளவு கரிசணைட உனக்கு...
“நம்ம கோடவுனிலே தாண்டா. உடனே அங்கே வந்திடு”
“சரிங்கண்ணே” வா ராசா வா. உனக்கு முடிவுகட்டுறேன்.
SP ஆபீசுக்கு போனைப் போட்டேன். “விஷ்ணுங்கிற உங்க இன்போர்மர், உங்களுக்கு தப்பான குறியீட்டைக் கொடுத்துட்டு, எல்லாப் பணத்தையும் அவனே சுருட்டிட்டுப் போகப்போறான். நீங்க அவன் தங்கியிருக்கிற ஹோட்டல் ரூமிற்கும் இப்போது வெளிநாட்டு பார்ட்டியைச் சந்திக்கப் போகும் கோடவுனுக்கும் போய் பார்த்தீங்கன்னா தெரியும்”. பட்டென்று போனை வைத்துவிட்டு, என் கை ரேகை பட்டிருக்கக் கூடிய இடத்தையெல்லாம் துடைத்து விட்டு, நான் டைப் செய்த துண்டுக் காகிதத்தை அப்படியே மேசையில் போட்டு விட்டு விஷ்ணுவின் பெயரில் போட்டிருந்த ரூமை விட்டு வெளியேறினேன். சௌமியாவுடன் மலேசியா போகும் டிக்கட் என் பாக்கேட்டில்.
விமானம் வெளிக்கிட்ட போது விஷ்ணுவிற்கு கோகுல் லாடம் கட்டிக் கொண்டிருந்தது என் மனதில் ஓடியது... அந்த நேரம் சௌமி என் தோளில் சாய்ந்து சிரிக்க... எனக்கு வேறு எதுவும் ஞாபகமில்லாமல் போனது.


21 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

shortfilmindia.com said... Best Blogger Tips

m.. quite interesting

cablesankar.

cablesankar said... Best Blogger Tips

sharmmi.. please put the udanz voting widget to get your story get votes. then only you will be in the list.

udanz.com

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

I've tried a few times to insert the udanz voting widget. But it is not showing up in my blog cable sir... what to do?

ஷைலஜா said... Best Blogger Tips

கதை நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

பரிசு பெற வாழ்த்துக்கள்..

மகேந்திரன் said... Best Blogger Tips

அருமையான கதை சகோதரி.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.

rajamelaiyur said... Best Blogger Tips

அருமையான கதை

rajamelaiyur said... Best Blogger Tips

அருமையான கதை

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

நன்றி ஷைலஜா... உங்களைப் போன்ற தேர்ந்த எழுத்தாளர்கள் வாழ்த்தும் போழுது பெருமிதமாகவும் மேலும் எழுத் வேண்டும் என்ற ஆசையும் வருகிறது. உங்கள் உயர்ந்த பண்பிற்கு தலை வணங்குகிறேன்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

இராஜராஜேஸ்வரி மீண்டும் வருகை தந்து வாழ்த்துவதற்கு நன்றி... எனக்கு பரிசு பெறுவதை விட என் கதையை நீங்கள் எல்லாம் படித்து பாராட்டுவதில் தான் பெருமையடைகிறேன்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

மகேந்திரன் அண்ணா... எங்கே ரொம்ப நாளா ஆளைக் காணோம்?
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அண்ணா.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

என்ன ராஜா சார்... ஒரு முறை சொன்னால் பத்தாது என்று அழுத்தி இரு முறை சொல்கிறீர்களா? என் கதை அவ்வளவு நன்றாகவா இருக்கிறது!!?
(ஹீ ஹீ... சும்மா தமாசுக்கு)

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி ராஜா சார்...

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அம்பாளடியாள். வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ரிஷபன் said... Best Blogger Tips

கதை முழுமையாய், அருமையாய் வந்திருக்கிறது.
பரிசு கிட்ட நல்வாழ்த்துகள்
தீபாவளி வாழ்த்துகளும்

நம்பிக்கைபாண்டியன் said... Best Blogger Tips

கதை நன்றாக இருக்கிறது, ஆனால் அழைப்பில் இவருடைய போனில் விஷ்ணு இன்பார்மர் என்று வருவது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.

Unknown said... Best Blogger Tips

kathai super...
அப்படியே என்னோட கதையையும் படிசுடுங்க...
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

விஷ்ணு இன்பார்மர் என்று தெரிந்தவுடன் அப்படி போட்டு விட்டார் என்று வைத்துக்கொள்வோமே பாண்டியன் சார்...
நாங்களெல்லாம் கத்துக்குட்டிகள், இப்படி கேள்வி கேட்டு பயமுருத்தக் கூடாது... சார்.

Sharmmi Jeganmogan said... Best Blogger Tips

வாழ்த்துக்களுக்கு நன்றி ரிஷபன். நீங்கள் என் கதை முழுமையாக வந்திருக்குது என்று சொல்வதை நம்பவே முடியவில்லை. உங்கள் அளவு திறமை எனக்கில்லை. இந்தக் கதையைக் கூட பிளாக்கில் டைப் செய்து முடித்த பின் பல முறை யோசித்து தான் பிரசுரித்தேன்...

Radhakrishnan said... Best Blogger Tips

மிகவும் நேர்த்தியாக கதையை முடித்து இருக்கிறீர்கள். அருமையாக பல விசயங்கள் சொல்லி விஷ்ணு, கோகுல் பாத்திரங்கள் கதையில் நுழைகின்றன. நன்றி.

bigilu said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் ... ஒரு படம் பார்த்த effect இருந்துச்சுங்க...

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget