You Tubeல் தேடிக்கொண்டு சென்ற போது "வீட்டுக்கணக்கு" என்ற இந்தக் குறும்படத்தைப் பார்த்தேன். மனதை என்னமோ செய்து விட்டது. எனக்கு இந்தக் கதை மிக நெருக்கமாக உள்ளதால் இருக்கலாம்.
நாட்டு சூழலின் காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்ட போது என் அப்பாவும் கடன்காரராக இருந்தார். ஆனால் தன் பிள்ளைகளுக்கு எந்த கஷ்டமும் தெரியக்கூடாது என்று பொத்திப்பொத்தி வளர்த்தார். கடன் தந்தவர்களிடம் ஏச்சுக் கேட்டாலும் அதை எங்களிடம் காட்டாமல் இன் முகத்துடனேயே இருப்பார். குடி, புகை பிடித்தல் போன்ற எந்தப் பழக்கமும் இல்லை. தன் பிள்ளைகள் ஒவ்வொருவரும் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதில் குறியாக இருந்தார்.
அப்படிபட்ட அப்பாவுடன் வளர்ந்து விட்டு இப்படியான அப்பாவைப் பார்க்க கடவுள் ஏன் மனிதர்களுக்கிடையில் இப்படி ஓர வஞ்சனை செய்கிறான் என்று தான் கேட்கத் தோண்றுகிறது....
2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
இப் படத்தினைப் பற்றிய அறிமுகத்தினைப் படிக்கையில் "எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே,
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" எனும் பாரதிதாசனின் பாடல் தான் நினைவிற்கு வருகின்றது.
குறும்படத்தைப் பின்னர் பார்க்கிறேன்,
பகிர்விற்கு நன்றி.
உண்மைதான் தம்பி... ஆனால் இந்தக் குறும்படத்தில் வருவது போல் அரிதாக குப்பைமேட்டிலும் ரோஜா செடி முளைக்கிறது.
Post a Comment