அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சிறு குழந்தைகளின் விளையாட்டு எப்படி ஆபத்தாக முடிந்து விடக்கூடும் என்பதற்கு மீண்டும் ஓர் உதாரணம். Lewis Lightfoot என்ற மூன்று வயதுச் சிறுவன் வாஷிங் மெசினிற்குள் கையை விட்டு விளையாடியபடி ஏதொ பட்டன்களை அழுத்த உள்ளிருந்த டிரம் சுற்றத்துவங்கிவிட்டது. 3 வயதுச் சிறுவனின் பிஞ்சுக் கை பிய்த்து எரியப் பட்டுவிட்டது. Creda நிறுவன தயாரிப்பான அந்த மெஷின் தற்போது பரிசீலணைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. எது எப்படியோ அந்தப் பாலகன் இழந்த உறுப்பை யார் தர முடியும்? தாய்மார்களே குழந்தைகளைக் கவனமாகப் பாருங்கள்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ரசிகர்களைப் பார்த்து இருப்பீர்கள். ஆனால் இப்படி பைத்தியக்கார ரசிகனைப் பார்த்திருக்கிறீர்களா? பத்து ஆண்டுகளாகத் தன் முகத்தில் தொடர் சத்திர சிகிச்சைகளை செய்து தன் மனம் கவர் Super Manஆகவே மாறியிருக்கிறார் Herbert Chavez என்ற 35 வயது பிலிப்பைன்சு நாட்டுக்காரர். மூக்கு, கன்னம், தாடை, உதடுகள் மற்றும் தொடையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திறுக்கிறார். இவர் இந்த super man உடையை அணிந்து கொண்டு சிறுவர்களைச் சந்தித்து அவர்கள் எப்படி நல்வழியில் வாழ்வது என்பதைச் சொல்லிக்கொடுக்கிறார். அண்டை அயலவர்களுக்கு உதவும் மனப்பாண்பை அவர்களுக்கிடையில் பரப்புகிறார். தலைவர் கட் அவுட்டிற்கு பால் ஊத்திக் கும்பிடும் நம் ரசிகர்களை விட இவர் பரவாயில்லை தான்...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Steve Jobs இறந்து சில நாட்களுக்குள்ளேயே Apple incற்கு இந்தக் கதியா என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். பெரிதாக ஒன்றும் இல்லை. Apple 4s அறிவிக்கப்பட்ட அன்றே Apple ios5ம் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த புதிய softwareஐ பதிவிரக்கம் செய்யும் பலருக்கு நேர விரயமும், பல error messageகளுமே தான் மிச்சமாம். இதனால் சலிப்படைந்த வாடிக்கையாளர்கள் facebook, twitterல் கிழிக்கத் தொடங்கி விட்டார்கள். அங்கு தான் இப்படி ஒரு வசனத்தைப் பற்றி பேச்சு... ஆனால் Apple உடனடியாக இதைத் திருத்தாவிட்டால் பிறகு Steve Job மீண்டும் பிறந்து வந்து தான் அவர் கம்பனியைக் காப்பற்ற வேண்டும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இந்த வாரத் தத்துவம்
Defeat is not the worst of failures. Not to have tried is the true failure.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
2 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
மூன்றுமே வித்தியாசமான தகவல்கள்.
எப்படித்தான் சேகரிக்கிறோர்களோ..
தலைவர் கட் அவுட்டிற்கு பால் ஊத்திக் கும்பிடும் நம் ரசிகர்களை விட இவர் பரவாயில்லை தான்...
//
உண்மைதான் சகோ!
Post a Comment