Tuesday, 4 October 2011

நிஜ சிகப்பு மனிதன்



நான் சிகப்பு மனிதனில் வரும் ரஜனி கதாபாத்திரங்களை சினிமாவில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் நிஜத்தில் அதுவும் லண்டனில் ஒருவனைப் பார்க்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.



Damien Fowkes
Damien Fowkes என்பவன் 2002ம் ஆண்டு ஒரு திருட்டுக் குற்றத்திற்காக சிறைக்கு அனுப்பப்பட்டான். 1994ம் ஆண்டு 7 வயது சிறுவன் ஒருவனை பாலியல் பலாத்காரத்திற்கு உற்படுத்தி கொலை செய்த குற்றத்திற்கு Colin Hatch என்பவன் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தான். அவன் இந்த சம்பவத்திற்கு முன்னரும் பல சிறுவர்களை துன்புருத்தியதும் வெளிவந்திருந்தது.

Colin Hatch
திடீரென்று ஒருநாள் டேமியேன் இந்த கொலினைப் பிடித்து ஒரு அறைக்குள் தள்ளி, சிறைக்குள்ளேயே ஒரு hostage situationஐ  உருவாக்கினான். சிறை அதிகாரிகள் உள்ளே வர முயற்சி செய்யாவிட்டால் கொலினுக்கு எந்த தீங்கும் செய்யமாட்டேன் என்று சொன்னான். ஆனால் படுக்கை விரிப்பினை கீலம் கீலமாக கிழித்து, அதைக் கொண்டு கொலினின் கழுத்தை நெறித்துக் கொன்று விட்டான். சிறுவர்களுக்குத் தீங்கு செய்து கொண்றவனை உயிருடன் விடுவது தவறு, அதனால் தான் கொலினைக் கொன்றேன் என்று தன் குற்றத்தை முழுதாக ஒப்புக்கொண்டான். டேமியனுக்கு ஆயுள் தண்டணை வழங்கப்பட்டது.

அதன் பின் மீண்டும் பிரச்சிணை....

Ian Huntley

டேமியனை புதிதாக அடைத்த இடத்தில் Ian Huntley என்பவன் இருந்தான். இயன் 2002ம் ஆண்டு 2 சிறுமிகளை தன் வீட்டிற்குள் கூட்டிச் சென்று கொலை செய்த பின் கண்டந்துண்டமாக வெட்டி Royal Airforce முகாமிற்கு அருகில் போட்டுவிட்டவன்.

இயனைப் பார்த்ததும் டேமியனின் மனதில் மீண்டும் கொலை வெறி. ஷேவிங் பிலேடை பிளாஸ்டிக் காம்பொன்றில் கட்டி, அதை கத்தி போல் பாவித்து இயனின் கழுத்தில் ஒரே வெட்டு. காயம் பெரிதாக இருந்த போதும் இயன் தப்பி விட்டான். இப்போது நீதிமன்றத்தில் டேமியன் மீது கொலை முயற்சி வழக்கு நடந்து கொண்டிருக்கு...

ஆனால் இப்போதும் டேமியன் இவர்களைப் போன்றவர்கள் உயிரோடு இருக்கக் கூடாது. என்றாவது ஒரு நாள் வெளி வந்து யாராவது ஒரு சிறு குழந்தையைக் கொன்றுவிடுவார்கள் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்.

Huntleyனால் கொல்லப்பட்ட சிறுமிகள்

இரண்டு குழந்தைகளின் தாயான எனக்கு, இந்த டேமியனை கை எடுத்துக் கும்பிடத் தான் தோன்றுகிறது. உலகில் எந்தக் குற்றத்தையும் மன்னிக்கலாம். ஆனால் பாலியல் குற்றத்தை, அதுவும் பால் மணம் மாறாத பச்சிளங்குழந்தைகளை சீரழிப்பவருக்கு மரண தண்டனை மட்டும் தான் சரியான தண்டனை. அதுவும் முடிந்தால் அவனை சித்திரவதை செய்து கொல்ல வெண்டும்.

3 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:

மாய உலகம் said... Best Blogger Tips

நான் சிகப்பு மனிதன்

மாய உலகம் said... Best Blogger Tips

உண்மையில் டேமியன் ரியல் ஹீரோ

ரிஷபன் said... Best Blogger Tips

டேமியன் செய்தது சரியா தப்பா என்பதை விட மற்ற இருவரும் செய்தது மகா கொடூரம்.
சட்டம் செய்யத் தவறுவதை நான் சிகப்பு மனிதன் செய்து விட்டான்

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Bird Gadget