அடிக்கடி என் மாயக்கண்ணாடிக்குள் பாருங்கள், நிறைய விஷயங்களை சொல்லும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
இங்கிலாந்தின் நார்தம்ப்டன் நகரில் இரவு நேர களியாட்ட கிளப் ஒன்றில் கூட்டம் அலை மோதிக்கொண்டிருந்த வேளையில் யாரோ வீணர்கள் விளையாட்டுத் தனமாக நெருப்பு எச்சரிக்கை மணியை அழுத்தவும் அறை குறை மப்பிலும் முழு மயக்கத்தில் இருந்த் 1000ற்கும் மேற்பட்டவர்கள் ஒரு சிறு படிக்கட்டு வழியாக வெளியேர முண்டியடித்ததில் கீழே படத்தில் காணப்படும் 22 வயது பல்கலைக்கழக மாணவி நபிலா மிதி பட்டு இறந்துள்ளார். இன்னும் 2 மாணவிகள் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக போலீசார் அறிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்வதாக சொல்லப்படுகிறது. எனக்கென்ன குழப்பமென்றால் இப்படியான சிறிய இடத்தில் 1000ற்கும் மேற்பட்டவர்கள் குழுமி எப்படி மூச்செடுத்திருப்பார்கள் என்றுதான்?
படத்தைப் பாருங்கள் கிழே இருப்பவர்கள் மிதி பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் மேலே இருந்து சிலதுகள் சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள்...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
பொதுவாகவே தன்னுடைய பெரிய கால்களுக்கு காலணிகள் வாங்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்திருக்கிறார் Tom Boddingham. இதனால் ஒரு கம்பனியிடம் வீட்டிற்குள் அணியும் செருப்புகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அந்தக் கம்பனி Hongkongல் இருக்கும் தொழிற்சாலைக்கு அதை அனுப்பியிருந்தார்கள். அங்கிருந்த ஊழியர்கள் 14.50 என்ற அளவில் புள்ளியைக் கவனிக்காமல் விட்டு விட்டு 1450 என்ற அளவில் செருப்பு அனுப்பியிருக்கிறார்கள். செருப்பின் நீளம் மட்டும் 7 அடி. ஒரு மனிதர் தாரளமாக உள்ளே படுத்துக் கொள்ளலாம். இப்போது கேட்டால் தொழிற்சாலையில் சொல்கிறார்கள் “நாங்கள் ஷோ எதற்கோ பயன்படுத்தப் போகிறார்கள் என்று நினைத்தோம்” என்று. Tom இதை கின்னசிற்கு அனுப்பியிருக்கிறாராம். அவர் கால் அளவைப் பற்றியா அல்லது செருப்பைப் பற்றிய என்று குழம்பிப் போயுள்ளேன்...
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
"சமுதாயம் எனும் கடை வீதி தன்னில் சம நீதி என்ன விலையோ?" இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தது. சம நீதி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மாத்திரம் என்றில்ல. ஏழை - பணக்காரன், உயர் சாதி - தாழ் சாதி என்று எல்லாவற்றிலுமே சமநீதி வெண்டும். ஆனால் இன்று வரையில் கூட சமுதாயத்தில் அப்படியென்றால் என்ன விலை என்று கேட்பவர்கள் தான் இருக்கிறார்கள். சித்திராவின் குரலில் இந்தப் பாட்டு உங்களைத் தாலாட்டும்.
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
11 பேர்.. என்ன சொல்கிறார்கள் என்றால்...:
ஏன் யுடான்ஸின் ஓட்டுப்பட்டையை வைக்க வில்லை ? உங்கள் ஆதரவு நிச்சயம் எங்களுக்கு தேவை.
சிரிக்கும் பெண் போதையில் இருக்கிறாளா?அல்லது.. ரைட்டாக இருக்கிறாளா?
கேபிள் சஙக்ர்.
யுடான்ஸ் ஓட்டுப் பட்டை முதலில் வைத்திருந்தேன். ஒரு updateன் பின் அதைக் காணவில்லை. இரண்டு முறை மீண்டும் முயற்சித்தேன். நான் codeஐ போட்டு சேவ் செய்த போதும் என் பிளாக்கில் அது தெரியவில்லை.
ஷர்மி அக்கா, இந்த யூத்தை முதலில் தொடர்ந்து பின்னூட்டமும், அவரோட பின்னூட்டத்திற்கு பதிலும் போட சொல்லுங்க, நேரம் இல்லைன்னா, பொதுவாக நன்றி யாவது போட சொல்லுங்க....
மாயக்கண்ணாடியைத் தொடர்ந்துக் காட்டுங்களேன்!
எதிர்பார்த்துக் காத்திருந்து, ஏமாற்றம் அடைந்தேன்...
நல்ல பாடல்!
எப்படியோ செருப்பால புகழ் அடிச்சிட்டாரு :)
எனக்கு என்ன சந்தேகம்னா, எப்படி இந்த நெருக்கடியிலும் PHOTO எடுக்க முடிஞ்சது?
வருகிற புதன் கிழமை மாயக்கண்ணாடியை எதிர்பார்க்காலமா?
நன்றி.
இவ்வளவு பெரிய பின்னூட்டத்தை யாருமே எனக்கு இதுவரை விட்டதில்லை. கேபிள் சார் இப்ப பெரியாளாயிட்டார். நம்மோடெல்லாம் செலவிட அவருக்கு ஏது நேரம்?
நன்றி சுகுணா...
என்னுடைய பால்கனி ஸ்டைலில் இருக்கிறது உங்கள் மாயக்கண்ணாடி...
புரியலையே Philo...
என்ன கூத்து பாருங்கள்,
கவனக்குறைவால் எவ்வளவு செருப்பை
போட வேண்டியிருக்கிறது..
கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும்..
சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது..
ஷர்மி அக்கா,
philo உங்கள் மாயக்கண்ணாடி மாதிரியே அவருடைய blog-ல் பால்கனி, பிரபா ஒயின்ஷாப் என்ற பெயரில் தொடர்ந்து பதிவிடுகிறார். அதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.
நான் இதே மாதிரி நீண்ட பின்னூட்டமொன்றை மாயக்கண்ணாடி 09/10/11 பதிவில் anonymous (இரண்டு முறை) ஆக குறிப்பிட்டுள்ளேன்.
cable youth பற்றிக் குறிப்பிட்டுள்ள உங்கள் கூற்றை நான் வழிமொழிகிறேன் :)
Tom இதை கின்னசிற்கு அனுப்பியிருக்கிறாராம். அவர் கால் அளவைப் பற்றியா அல்லது செருப்பைப் பற்றிய என்று குழம்பிப் போயுள்ளேன்...
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்>
கூட்டத்தில் சிக்கித் தவிப்பது எல்லா ஊருக்கும் பொது போல!
செருப்பு.. பிரமிப்பு..
பாடல் வரிகள் அர்த்தமுள்ளவை..
சுவையான் கதம்பம்
Post a Comment